‘‘மாநில அரசு என்ற பெயரில் பேரழிவையே டெல்லி கண்டது’’ – ஆம் ஆத்மி கட்சி மீது பிரதமர் தாக்கு

புதுடெல்லி: மாநில அரசு என்ற பெயரில் டெல்லி மக்கள் பேரழிவையே (AAP-DA) கண்டார்கள் என்று ஆம் ஆத்மி அரசு மீது தாக்குதல் தொடுத்துள்ள பிரதமர் மோடி, வரும் டெல்லி தேர்தலில் பாஜகவுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பரிவர்தன் பேரணியில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது: “வளர்ச்சி அடைந்த இந்தியாவின் தலைநகராக டெல்லியை நாம் மாற்றவேண்டும். டெல்லியின் வளமான எதிர்காலத்துக்காக பாரதிய ஜனதா கட்சிக்கு இந்தத் தேர்தலில் டெல்லி மக்கள் வாய்ப்பளிக்க … Read more

‘‘2025-ல் டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எத்தனை பேர்?’’: அன்புமணி கேள்வி

சென்னை: 2025-ஆம் ஆண்டில் டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எத்தனை பேர்? என்றும் அதன் விவரங்களை வெளியிடாமல் மூடி மறைப்பது ஏன்? என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் 2025-ஆம் ஆண்டு பிறந்து ஐந்து நாட்களுக்கு மேலாகியும் நடப்பாண்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் எவ்வளவு பேர் அரசுப் பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் எவ்வளவு … Read more

டெல்லி பேரவைத் தேர்தல் | ‘மாப்பிள்ளை யார்?’ என்ற ஆம் ஆத்மியின் கேலிக்கு பாஜக பதிலடி

புதுடெல்லி: அடுத்த மாதம் நடக்க விருக்கும் பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, ஆளும் ஆம் ஆத்மி கட்சி மற்றும் எதிர்க்கட்சியான பாஜகவுக்கு இடையே சமூக வலைதளங்களில் புதிய மோதல் உருவாகியுள்ளது. பாஜகவுக்கு முதல்வர் முகமில்லை என ஆம் ஆத்மி கேலி செய்ய, பேரழிவு என்று பாஜக எதிர்வினையாற்றியுள்ளது. இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி அதன் எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஜானவாச குடையுடன் மாப்பிள்ளை அழைப்புக்காக அலங்கரிக்கப்பட்ட குதிரை ஒன்றில் மாப்பிள்ளை இல்லாத நிலையில் வலம் … Read more

அடுக்குமாடி குடியிருப்புகளில் செல்லப் பிராணிகளுக்கான கட்டுப்பாடுகள் ரத்து

சென்னை: அடுக்குமாடி குடியிருப்புகளில் செல்லப் பிராணிகளுக்கான கட்டுப்பாடுகளை ரத்து செய்து சென்னை பெருநகர கூடுதல் உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்துவரும் 78 வயது மூதாட்டியான மனோரமா ஹிதேஷி என்பவர் சென்னை பெருநகர 16-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது: எனது வீட்டில் செல்லப்பிராணியாக நாய் வளர்த்து வருகிறேன். ஆனால் நான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்கம், செல்லப் பிராணிகள் பொது வெளியில் மலம் கழித்தால் … Read more

டெல்லி பனி மூட்டம்: 9 மணி நேர காட்சித்தெளிவின்மையால் 400 விமானங்கள், 81 ரயில்களின் சேவை பாதிப்பு

புதுடெல்லி: தேசிய தலைநகர் டெல்லியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக எதிரிலிருப்பது தெரியாத அளவுக்கு பனிமூட்டம் நிலவியதால் விமானம் மற்றும் ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, டெல்லியில் சுமார் ஒன்பது மணிநேரத்துக்கு அடர் பனி நீடித்தது. இந்த ஆண்டின் பனி காலத்தின் மிக நீண்ட பனி தொடர்பான இடையூறு இது. டெல்லியின் பாலத்தில் சனிக்கிழமை மாலை 6 மணி முதல் அதிகாலை 3 மணி வரை சுமார் 9 மணி நேரம், எதிரில் … Read more

‘பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்’ – திமுக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை

சென்னை: அரசு ஊழியர், சத்துணவு ஊழியர், அங்கன்வாடி ஊழியர், பள்ளி-கல்லூரிகளின் ஆசிரியர்கள் ஆகியோரின் கோரிக்கைகள் மீதான தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-யின் 24-வது தமிழ்நாடு மாநில மாநாடு ஜனவரி 3, 5 ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் ஆனந்தா திருமண மண்டபத்தில் மத்தியக்குழு உறுப்பினர் பெ. சண்முகம் தலைமையில் நடந்து வருகிறது. இம்மாநாட்டில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், அரசியல் … Read more

சத்தீஸ்கரில் நடந்த என்கவுண்டரில் 4 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

புதுடெல்லி: சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவில் நடந்த என்கவுண்டரில் 4 நக்சலைட்டுகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த மோதலில், ஒரு காவலர் உயிரிழந்தார். சத்தீஸ்கரின் நாராயண்பூர் – தண்டேவாடா மாவட்டங்களின் வனப்பகுதியான அபுஜ்மார் வனப்பகுதியில் உலவும் நக்சலைட்டுகளை தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் நேற்று மாலை (ஜன. 4) ஈடுபட்டனர். சிறப்பு பாதுகாப்புப் படை மற்றும் வன பாதுகாப்புப் படை வீரர்கள் இணைந்து இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, வனப்பகுதியில் பதுங்கி இருந்த நக்ஸல்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் … Read more

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களை கவர்ந்த ‘சிறை சந்தை’ – என்ன ஸ்பெஷல்? 

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் விற்கப்படும் சிறை கைதிகள் தயாரித்த பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்களுக்கு வழக்கறிஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் தண்டனைக் கைதிகள் தயாரிக்கும் பல்வேறு பொருட்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அந்த வகையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நடமாடும் சிறைச் சந்தைக்கு வழக்கறிஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த சிறைச் சந்தையில் கைதிகளின் கை வண்ணத்தில் உருவான நல்லெண்ணெய், … Read more

ஆண்டுக்கு 15 லட்சம் பேருக்கு பக்கவாதம்: ஐஜேஎஸ் நடத்திய ஆய்வில் தகவல்

நாட்டில் ஆண்டுக்கு 15 லட்சம் பேருக்கு பக்கவாத பாதிப்பு ஏற்படுவதாகவும், ஆனால் 4-ல் ஒரு இந்தியர் மட்டுமே பக்கவாதத்துக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைக்கு செல்கின்றனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் பக்கவாத பாதிப்பு மற்றும் அதற்கான சிகிச்சை வசதி எவ்வளவு பேர் பயன்படுத்துகின்றனர் என்பது பற்றிய ஆய்வை சிகாகோவைச் சேர்ந்த அசென்சன் சுகாதார மைய மருத்துவர் மற்றும் எய்ம்ஸ் ஐதராபாத் மருத்துவர் அருண் மித்ரா ஆகியோர் நடத்தினர். இந்த ஆய்வறிக்கை ‘இன்டர்நேசனல் ஜேர்னல் ஆஃப் ஸ்ட்ரோக் (ஐஜேஎஸ்) … Read more

விண்வெளியில் முளைக்க தொடங்கிய காராமணி பயறு விதைகள்: பரிசோதனை வெற்றி என இஸ்ரோ அறிவிப்பு

பிஎஸ் 4 இயந்திரத்தில் கிராப்ஸ் ஆய்வுக் கருவியில் வைக்கப்பட்டிருந்த காராமணி பயறு விதைகள் வெற்றிகரமாக முளைக்கத் தொடங்கியுள்ளதாக இஸ்ரா தெரிவித்துள்ளது. எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு பாரதிய அந்தரிஷா ஸ்டேஷன் எனும் இந்திய ஆய்வு நிலையத்தை 2035-ம் ஆண்டுக்குள் விண்ணில் நிறுவ இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தின் முதல்கட்ட விண்கலங்கள் 2028-ல் விண்ணில் செலுத்தப்பட உள்ளன. அதற்கு முன்னோட்டமாக ஸ்பேடெக்ஸ் (SPADEX–Space Docking Experiment) எனும் திட்டத்தின்கீழ் விண்வெளியில் விண்கலன்களை … Read more