வானிலை முன்னறிவிப்பு: ஜன.10-ல் டெல்டா மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

சென்னை: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 6 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜன.10-ம் தேதியன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிழக்கு திசை காற்றின் … Read more

“மீண்டும் ஆட்சிக்கு வந்தால் உயர்த்தப்பட்ட குடிநீர் கட்டணம் தள்ளுபடி” – கேஜ்ரிவால் வாக்குறுதி

புதுடெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், உயர்த்தப்பட்ட குடிநீர் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் உறுதியளித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கேஜ்ரிவால், “டெல்லியில் குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட்டதால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கிலும், லட்சக்கணக்கிலும் தண்ணீர் கட்டண ரசீதுகளை டெல்லி குடிநீர் வாரியம் மக்களுக்கு அனுப்பி உள்ளது. நான் சிறைக்குச் சென்ற பிறகே இது நிகழ்ந்தது. கூடுதல் கட்டணங்களை மக்கள் செலுத்த … Read more

கோவை | சாலையில் காஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட விவகாரம் – ஓட்டுநர் கைது

கோவை: கோவை சாலையில் காஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட விவகாரம் தொடர்பாக, லாரி ஓட்டுநர் ராதாகிருஷ்ணன் என்பவரை போலீஸார் கைது செய்தனர். கேரள மாநிலம் கொச்சியில் இருந்து 18 டன் எல்.பி.ஜி சமையல் எரிவாயு ஏற்றிக் கொண்டு, கோவை கணபதியில் உள்ள காஸ் குடோன் நோக்கி ஒரு டேங்கர் லாரி வந்து கொண்டிருந்தது. அவிநாசி சாலை உப்பிலிபாளையத்தில் உள்ள மேம்பாலத்தின் மீது நேற்று (ஜன.3) அதிகாலை வந்த லாரி உப்பிலிபாளையம் சாலை நோக்கி திரும்ப … Read more

டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: 29 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது பாஜக

புதுடெல்லி: புதுடெல்லி யூனியன் பிரதேசத்துக்கான சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி 2025) நடைபெற உள்ள நிலையில், 29 வேட்பாளர்களைக் கொண்ட முதல் பட்டியலை பாஜக இன்று (ஜன. 4) வெளியிட்டுள்ளது. பாஜக மத்திய தேர்தல் கமிட்டியின் ஒப்புதலை அடுத்து, வேட்பாளர்கள் குறித்த முதல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ரோகினி தொகுதியில் விஜேந்தர் குப்தா, ஜனக்புரி தொகுதியில் ஆஷிஷ் சூத், பிஜ்வாசன் தொகுதியில் கைலாஷ் கஹ்லோட், புதுடெல்லி தொகுதியில் பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா ஆகியோர் போட்டியிடுகின்றனர். … Read more

தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை உள்ளதா? – கே.பாலகிருஷ்ணன் கேள்வி

விழுப்புரம்: “பாஜக – ஆர்எஸ்எஸுக்கு எதிராக, பாசிச ஆட்சிக்கு எதிராக திமுகவுடன் இணைந்து நாங்கள்போராடி வருகிறோம். அதே நேரத்தில் தமிழகத்தில் பட்டா கேட்டு போராடினால், தொழிலாளர்கள் உரிமைக்காக போராடினால் உடனடியாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்கின்றனர். தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை உள்ளதா என்ற கேள்வி எழுகிறது.” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு நேற்று காலை தொடங்கியது. இதைத் தொடர்ந்து மாலையில் விழுப்புரம் நகராட்சித் … Read more

குழந்தைகள் சமூக ஊடக கணக்குகளை உருவாக்க பெற்றோரின் ஒப்புதல் அவசியம்: மத்திய அரசு

புதுடெல்லி: 18 வயதுக்கு கீழுள்ள குழந்தைகள் சமூக ஊடகங்களில் கணக்குகளை உருவாக்க பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஒப்புதல் அவசியம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அரசு நேற்று வெளியிட்ட டிஜிட்டல் தனிநபர் தரவுகள் பாதுகாப்புச் சட்டம் 2023 வரைவு விதியில் இந்த முன்மொழிவை வைத்துள்ளது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், வரைவு விதிகளை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதன் மீதான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பொதுமக்கள் அரசின் MyGov.in.என்ற தளத்தில் பிப்ரவரி 18, 2025-க்கு முன்பாக … Read more

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலி: விதிமீறி குத்தகைக்கு விட்டதால் விபரீதம்!

விருதுநகர்: விருதுநகர் அருகே பொம்மையாபுரம் கிராமத்தில் சாய்நாத் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 அறைகள் தரைமட்டமானதில் 6 பேர் உயிரிழந்தனர். இந்த ஆலையை விதிமீறி குத்தகைக்கு விட்டது, அனுபவம் இல்லாத தொழிலாளர்களை ஆபத்தான பணிகளில் ஈடுபடுத்தியது உள்ளிட்ட காரண ங்களால் விபத்து நடந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சிவகாசி அருகே ஆலமரத்துபட்டி பகுதியை சேர்ந்தவர் பாலாஜி. இவர் விருதுநகர் அருகே வச்சகாரப்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பொம்மையாபுரம் கிராமத்தில் சாய்நாத் ஃபயர் … Read more

விவசாயிகளுக்காக கேஜ்ரிவால் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

விவசாயிகளுக்காக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் முதலைக்கண்ணீர் வடிக்கிறார் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: விவசாயிகளுக்கு காங்கிரஸ் வலுவான ஆதரவு அளித்ததால், சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டிய கட்டாயம் பாஜக அரசுக்கு ஏற்பட்டது. இதில் ஆம் ஆத்மி கட்சிக்கு எந்த பங்கும் இல்லை. நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் இன்றி வேளாண் சட்டங்கள் நிறைவேறின. இதையடுத்து அந்த சட்டங்களுக்கான அறிவிக்கையை முதல் … Read more

முதல்வர் காப்பீட்டு திட்ட நிதி குறித்து ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை நிர்வாகம் ஆய்வு

சென்னை: முதல்வர் காப்பீட்டுத் திட்ட நிதி முறையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்த ஆய்வை துறை ரீதியாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள 44 துறைகளில் மொத்தம் 3,800 படுக்கை வசதிகள் உள்ளன. தினமும் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். தினமும் சுமார் 450 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுகின்றனர். இவை தவிர பிற மாநிலங்களிலிருந்தும் நோயாளிகள் சிகிச்சைக்காக … Read more

வட இந்தியாவில் 2-வது நாளாக தொடரும் அடர் பனி மூட்டம்: டெல்லியில் விமான போக்குவரத்து பாதிப்பு

புதுடெல்லி: வட இந்தியாவின் சில பகுதிகளில் இரண்டாவது நாளாக இன்றும் அடர்ந்த பனி மூட்டம் நிலவியது. இதனால் டெல்லியில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து டெல்லி சர்வதேச விமான நிறுவனம் (DIAL) அதிகாலை 12.05 மணிக்கு வெளியிட்ட எக்ஸ் பதிவில், “அடர் பனி மூட்டம் காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. விமான சேவைகளின் புதுப்பிக்கப்பட்ட அட்டவணைகளை பயணிகள் தெரிந்து கொள்ள சம்மந்தப்பட்ட விமான நிறுனங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அசவுகரியம் ஏற்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்” … Read more