“எம்ஜிஆருக்கு பிறகு பெண்களின் ஆதரவைப் பெற்ற முதல்வர் ஸ்டாலின்” – அமைச்சர் சி.வெ.கணேசன் புகழாரம்

மக்களிடம் அதிருப்தியோ, எந்தவிதமான எதிர்ப்பும் இல்லாத வகையில், எம்ஜிஆருக்குப் பின் பெண்களின் அமோக ஆதரவைப் பெற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் என கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்தில் அமைச்சர் சி.வெ.கணேசன் பேசினார். கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வசந்தம் கார்த்திக்கேயன் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில், திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் நடைபெற்ற வீரர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி அமைச்சர் சி.வெ.கணேசன் பேசுகையில், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் காலை … Read more

மணிப்பூர், கேரளா உள்ளிட்ட 5 மாநில ஆளுநர்கள் மாற்றம் – குடியரசுத் தலைவர் உத்தரவு

புதுடெல்லி: மணிப்பூர் மாநில ஆளுநராக முன்னாள் மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், பல்வேறு மாநில ஆளுநர்கள் வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இது குறித்த உத்தரவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பிறப்பித்துள்ளார். ஆளுநர் நியமனம் குறித்து குடியரசுத் தலைவர் மாளிகை தரப்பில் வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஒடிசா மாநில ஆளுநர் ரகுபர் தாஸின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டார். இந்த சூழலில் மிசோரம் மாநில ஆளுநர் ஹரி பாபு … Read more

“200 தொகுதிகளில் டெபாசிட் இழக்கப் போவது பாஜக தான்” – துரை வைகோ

திருச்சி: “200 தொகுதிகளில் டெபாசிட் இழக்கும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது, அவரது கட்சிக்காக இருக்கும்” என்று மதிமுக முதன்மைச் செயலாளர் துரை.வைகோ கூறியுள்ளார். பெரியாரின் 51-வது நினைவு நாளை முன்னிட்டு, மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி எம்பியுமான துரை.வைகோ இன்று (டிச.24), திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தந்தை பெரியாரால் தான் தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களுக்கு … Read more

“தன்னை ஒரு சூப்பர் ஸ்டாராக நினைக்கிறார் ரேவந்த் ரெட்டி” – அல்லு அர்ஜுனுக்கு அண்ணாமலை ஆதரவு!

சென்னை: தான் ஒரு சூப்பர் ஸ்டார் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி நினைத்துக் கொள்கிறார். இப்போது கூட அவர் காங்கிரஸ் கட்சி சார்பில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னையில் இன்று (டிச.24) செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: “தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் பேட்டி ஒன்றை பார்த்தேன். தெலங்கானாவில் சூப்பர் ஸ்டார் ஆவதற்காக அவர் போட்டி போடுகிறார் என்று நினைக்கிறேன். அல்லு அர்ஜுனை விட தான் பெரிய … Read more

கோவை மெட்ரோ ரயில் திட்ட ஆயத்தப் பணிகள் தொடக்கம்: சென்னை மெட்ரோ நிர்வாக இயக்குநர் தகவல் 

கோவை: கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நில ஆர்ஜிதம், மழைநீர் வடிகால் மாற்றி அமைத்தல் ஆகிய ஆயத்தப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (சிஎம்ஆர்எல்) நிர்வாக இயக்குநர் எம்.ஏ.சித்திக் தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ”கோவை மாநகர பகுதியில் 34.8 கிலோ மீட்டர் தொலைவில் 2 வழித்தடங்களுடன் 32 ரயில் நிலையங்களுடன் மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. சிஎம்ஆர்எல் மூலம் விரிவான திட்ட அறிக்கையை மாநில அரசு மூலம் மத்திய அரசுக்கு சமர்ப்பித்தது. … Read more

ஆம் ஆத்மி Vs பாஜக: ஏஐ கன்டென்ட் மூலம் டெல்லி அரசியல் யுத்தம்!

புதுடெல்லி: கடந்த வாரம் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவடைந்தது. இதில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, அம்பேத்கர் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையானது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்வினையாற்றி இருந்தன. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி தரப்பில் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்று பகிரப்பட்டது. அதில் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கேஜ்ரிவாலை அம்பேத்கர் ஆசிர்வதிப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவரைப் பற்றி தவறாகப் பேசியவர்களை எதிர்த்துப் போராட கேஜ்ரிவால் … Read more

இந்தியாவில் விவோ Y29 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்தியாவில் விவோ Y29 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் தற்போது விவோ Y29 ஸ்மார்ட்போனை … Read more

திருச்சி காவிரி ஆற்றில் மூழ்கிய 3 மாணவர்களில் 2 பேர் உடல் மீட்பு

திருச்சி: திருச்சி காவிரி ஆற்றில் நேற்று குளிக்கச் சென்று நீரில் மூழ்கிய 3 மாணவர்களில் 2 மாணவர்களின் உடல்களை தீயணைப்புத் துறையினர் செவ்வாய்க்கிழமை மீட்டனர். திருச்சி பாரதியார் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவர்களில் 10 பேர் திங்கள்கிழமை மதியம் அரையாண்டு கடைசித் தேர்வு முடிந்ததுவிட்டு, கரூர் பைபாஸ் சாலையில் உள்ள அய்யாளம்மன் காவிரி படித்துறையில் குளிக்கச் சென்றனர். படித்துறையில் குறைந்தளவு நீர் சென்றதால், அவர்கள் ஆற்றின் மையப்பகுதிக்கு சென்றனர். அப்போது … Read more

மகாராஷ்டிர வாக்காளர் பட்டியல் விவகாரம்: காங்கிரஸுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம்

புதுடெல்லி: சமீபத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்த மகாராஷ்டிராவில் வாக்காளர்கள் தன்னிச்சையாக சேர்க்கப்படவுமில்லை, நீக்கப்படவுமில்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி சந்தேகம் எழுப்பி இருந்த நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளது. மேலும், “மாலை 5 மணி வரை பதிவான வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் இறுதி வாக்குப்பதிவு தரவுகளை ஒப்பிடுவது சரியாக இருக்காது. மாலை 5 மணிக்கு வெளியிடப்பட்ட வாக்குப்பதிவு நிலவரத்துக்கும் இரவு 11.45 மணிக்கு … Read more

புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு அமல் – புதிய கட்டணம் எவ்வளவு?

புதுச்சேரி: கடும் எதிர்ப்புக்கு இடையில் புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட பஸ் கட்டணம் இன்று அமலானது. புதுவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டு அறிவிப்பு வெளியானது. பஸ் கட்டண உயர்வுக்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உயர்த்தப்பட்ட கட்டணத்தை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் உயர்த்தப்பட்ட பஸ் கட்டணம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. புதுவை சாலை போக்குவரத்து கழகம் புதிய பஸ் கட்டண விபரத்தை அறிவித்துள்ளது. … Read more