“ஏழைகளின் எதிரியே பாஜகதான்!” – மோடியின் ‘பேரழிவு’ விமர்சனத்துக்கு கேஜ்ரிவால் பதிலடி

புதுடெல்லி: ஆம் ஆத்மி தலைமையிலான அரசு மீது பேரழிவு என்ற பிரதமர் மோடியின் விமர்சனத்துக்கு, “பாஜக தான் ஏழைகளுக்கு எதிரானது” என்று அரவிந்த் கேஜ்ரிவால் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், “பிரதமர் நரேந்திர மோடி தான் பேசிய 43 நிமிடங்களில் 39 நிமிடங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், டெல்லி மக்களையுமே மிகப் பெரிய அளவில் அவதூறு செய்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் ஆம் ஆத்மி கட்சி பல … Read more

‘நவீன எமர்ஜென்சி’ போக்கை முதல்வர் ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும்: தமிழக பாஜக

சென்னை: “மக்கள் விரோத திமுக அரசு எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடும் தமிழக பாஜகவின் மீதும், மற்ற கட்சிகள் மீதும் காவல் துறையின் தொடர் அடக்கு முறையை பயன்படுத்தி மிரட்டுவது, தடுக்க நினைப்பது, வழக்கு பதிவு, கைது செய்வது என்று நவீன எமர்ஜென்சி காலத்தை நினைவுபடுத்துவது போல் செயல்படுவதை தமிழக முதல்வர் ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று தமிழக பாஜக கூறியுள்ளது. இது குறித்து தமிழக பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்ட அறிக்கையில், “பெண் … Read more

பிரம்மபுத்திரா நதியில் மெகா அணை – சீனாவின் திட்டத்துக்கு இந்தியா கடும் எதிர்ப்பு

புதுடெல்லி: பிரம்மபுத்திரா நதியில் உலகின் மிகப் பெரிய அணையை கட்ட சீன அரசு ஒப்புதல் வழங்கிய விவகாரத்தில் இந்தியா தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. மேலும், சீனாவின் ஆக்கிரமிப்பு தொடர்பாக வலுவான கருத்துகளை முன்வைத்துள்ளது. இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், “சீனாவின் ஹோட்டன் பகுதியில் இரண்டு புதிய மாகாணங்கள் உருவாக்கப்படுவதாக நாங்கள் அறிந்தோம். அவற்றில், இந்தியாவின் லடாக் பிராந்தியத்தின் சில பகுதிகளும் அடங்கியுள்ளன. அந்தப் பகுதியில் சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை … Read more

“டங்ஸ்டன் திட்டத்தை ஒருபோதும் வர விடமாட்டோம்” – மேலூர் ஆர்ப்பாட்டத்தில் வைகோ உறுதி

மதுரை: டங்ஸ்டன் திட்டத்தை ஒருபோதும் வரவிடமாட்டோம் என மேலூர் ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசினார். மதுரை மாவட்டம், மேலூர் அருகே நாயக்கர்பட்டி, அரிட்டாபட்டி, வல்லாளபட்டி, எட்டிமங்கலம், கூலானிபட்டி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஹிந்துஸ்தான் சிங்க் நிறுவனத்திற்கு ஏலம் விட்டது. இதற்கு எதிராக கிராம மக்கள், பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளும் போராட்டம் நடத்தினர். இத்திட்டத்தை முழுமையாக … Read more

தூங்கும் வசதி கொண்ட ‘வந்தே பாரத்’ மூலம் உலகத்தர பயண அனுபவம்: ரயில்வே அமைச்சகம் தகவல்

புதுடெல்லி: தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள், நீண்ட தூர ரயில் பயணிகளுக்கு விரைவில் உலகத் தரம் வாய்ந்த பயண அனுபவத்தை வழங்கும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் குறித்த வீடியோ ஒன்றை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து, ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியப் பயணிகளுக்கு விரைவான, பாதுகாப்பான ரயில் பயணத்தை வழங்க புத்தாண்டு தயாராக … Read more

காட்பாடி: 7 மணி நேர காத்திருப்புக்குப் பின் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை

வேலூர்: காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் சுமார் 7 மணி நேரம் காத்திருப்புக்குப் பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர். பூட்டியிருந்த வீட்டின் மாற்று சாவியை பயன்படுத்தி திமுக முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. திமுக பொதுச்செயலாளரும் தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வீடு காட்பாடி காந்திநகரில் உள்ளது. இந்த வீட்டில் அவரது மகனும் வேலூர் மக்களவை தொகுதி உறுப்பினருமான கதிர் ஆனந்த் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அமலாக்கத் துறை அதிகாரிகள் குழு, … Read more

மணிப்பூர் ஆளுநராக அஜய் குமார் பல்லா, ஒடிசா ஆளுநராக ஹரி பாபு கம்பம்பட்டி பதவியேற்பு

புதுடெல்லி: மணிப்பூர் ஆளுநராக அஜய் குமார் பல்லாவும், ஒடிசா ஆளுநராக ஹரி பாபு கம்பம்பட்டியும் இன்று (ஜன. 03) பதவியேற்றுக்கொண்டனர். அஜய் குமார் பல்லா பதவியேற்பு: மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள ராஜ்பவனில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மணிப்பூரின் 19வது ஆளுநராக முன்னாள் மத்திய உள்துறைச் செயலர் அஜய் குமார் பல்லா பதவியேற்றார். அவருக்கு மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி கிருஷ்ணகுமார் பவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பை அடுத்து, மணிப்பூர் ரைபிள்ஸ் வீரர்களின் அணிவகுப்பு … Read more

‘அரசியல் கருவியாகும் அமலாக்கத் துறை’ – முத்தரசன் கண்டனம்

சென்னை: “பல்வேறு குற்றச்சாட்டுக்கு ஆளான அதானியை காப்பாற்றி வரும் மோடியின் மத்திய அரசு, தமிழகத்தில் அமலாக்கத் துறை மூலம் மூத்த அமைச்சர், திமுக பொதுச் செயலாளர் துரை முருகன் வீட்டில் சோதனை என்ற பெயரில் தாக்குதலை நடத்தி வருகிறது. பாஜகவின் அதிகார அத்துமீறலையும், எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் வன்மத்தையும் வன்மையாக கண்டிக்கிறேன்.” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டின் மிகப்பெரும் பன்னாட்டு குழும நிறுவனங்களில் ஒன்றான அதானி … Read more

“எனக்காக ஒரு மாளிகையை கட்டியிருக்கலாம்; ஆனால்…” – புதிய வீடுகள் வழங்கும் விழாவில் பிரதமர் பேச்சு

புதுடெல்லி: நானும் எனக்காக ஒரு அரண்மனையை கட்டியிருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை, எனது நாட்டு மக்களுக்கு நிரந்தர வீடுகள் கிடைக்க வேண்டும் என்பதே எனது கனவு என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் 1,675 அடுக்குமாடி குடியிருப்புகளை பயனாளிகளுக்கு வழங்குதல், டெல்லியில் உலக வர்த்தக மையம் திறப்பு, வீர சாவர்க்கர் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, … Read more

ஆடுகளை அடைக்கும் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட குஷ்பு, பாஜகவினர்: மதுரையில் பரபரப்பு

மதுரை: மதுரையில் தடையை மீறி நீதி யாத்திரை நடத்த முயன்று கைதான நடிகை குஷ்பு மற்றும் பாஜகவினர் ஆடுகள் அடைக்கப்பட்டிருந்த மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தை கண்டித்து தமிழக பாஜக மகளிரணி சார்பில் மதுரை செல்லத்தம்மன் கோயில் முன்பு நீதி யாத்திரை தொடக்க நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. இந்த யாத்திரைக்கு போலீஸார் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி பாஜகவினர் நீதி யாத்திரையை தொடங்கினர். இதையடுத்து பாஜக தேசிய செயற்குழு … Read more