வேலூரில் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை
வேலூர்: வேலூரில் தமிழக நீர்வளம் மற்றும் கனிமவளத் துறை அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத் துறையினர் இன்று (வெள்ளிக்கிழமை) சோதனை நடத்தி வருகின்றனர். காட்பாடி காந்திநகரில் உள்ள அமைச்சரின் வீடு, மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி வளாகம், அமைச்சரின் நம்பிக்கைக்குரிய பூஞ்சோலை சீனிவாசன் அவரது உறவினர் வீடு உள்பட 4 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. அமைச்சர் துரைமுருகனும், எம்.பி. கதிர் ஆனந்தும் இப்போது வேலூர் வீட்டில் இல்லாததால் அதிகாரிகள் வெளியில் காத்திருக்கின்றனர். சோதனையின் பின்னணி … Read more