அமெரிக்காவில் புத்​தாண்டு கொண்டாட்டத்தில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழப்பு 15ஆக உயர்வு

அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு தினத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது. அமெரிக்காவின் லூசியானா மாகாணம் நியூ ஆர்லியன்ஸ் நகரில் உள்ள பர்பன் தெருவில் கடந்த 1-ம் தேதி அதிகாலை புத்தாண்டு கொண்டாட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர். அப்போது ஒருவர் லாரியை ஓட்டி வந்து கூட்டத்தினர் மீது மோதி துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. தாக்குதல் நடத்திய நபரை போலீஸார் சுட்டுக் கொன்றனர். அவரது … Read more

தகவல் தொழில்​நுட்பம் மூலம் விவசாய உற்பத்தி மேம்பாடு: மத்திய வேளாண் அமைச்​சகத்​துடன் சென்னை ஐஐடி ஒப்பந்தம்

சென்னை: தகவல் தொழில்​நுட்ப வசதி மூலம் விவசாய உற்பத்​தியை மேம்​படுத்​தும் புதிய திட்​டத்தை செயல்​படுத்துவது தொடர்பாக மத்திய வேளாண் அமைச்​சகத்​துடன் சென்னை ஐஐடி புரிந்​துணர்வு ஒப்பந்தம் செய்​துள்ளது. இதுதொடர்பாக சென்னை ஐஐடி நேற்று வெளி​யிட்ட செய்திக்​குறிப்​பு: தகவல் தொழில்​நுட்ப வசதிகள் மூலம் வேளாண் உற்பத்தி, வேளாண் விரிவாக்க முறைகளை மேம்​படுத்​தும் நோக்​கில் ‘விஸ்​டார்’ என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு சோதனை அடிப்​படை​யில் செயல்​படுத்த உள்ளது. இந்த திட்​டத்தை சிறப்பாக நடைமுறைப்​படுத்துவது தொடர்பாக மத்திய வேளாண் மற்றும் … Read more

2024-ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிப்பு: குகேஷ், மனு பாகர் உட்பட 4 பேருக்கு ’கேல் ரத்னா’

புதுடெல்லி: பாரிஸ் ஒலிம்பிக்கில் இரட்டை பதக்கம் வென்ற துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாகர், உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற டி.குகேஷ், இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், பாரா தடகள வீரர் பிரவீன் குமார் ஆகிய 4 பேருக்கு மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 4 பேர் உட்பட 32 பேருக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2024-ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை மத்திய … Read more

சவுதியில் போதைப் பொருள் கடத்தல்: ஈரான் நாட்டவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஈரான் நாட்டைச் சேர்ந்த 6 பேருக்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சவுதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: ஈரான் நாட்டைச் சேர்ந்த 6 பேர் போதைப் பொருட்களைக் கடத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அவர்களுக்கு மரண தண்டனையை வழங்கியது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்தபோது அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் 6 பேருக்கும் … Read more

‘ஏ.ஐ’ தொழில்நுட்ப உதவியுடன் தமிழ் மொழி மேம்பாடு: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

மத்திய அரசின் ‘பாஷினி’ திட்டத்துடன் இணைந்து, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்பத்தின் உதவியுடன் தமிழ் மொழியின் பயன்பாட்டை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள மொழிகளின் பயன்பாட்டை மேம்படுத்த உதவும் தொழில்நுட்ப கருவிகள், செயலிகள், மென்பொருட்களை உருவாக்க ‘பாஷினி’ என்ற திட்டத்தை மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஏற்கெனவே அறிமுகம் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து, வாராணசியில் நடைபெற்ற ‘காசி தமிழ் சங்கமம்-2’ நிகழ்ச்சியில், ‘பாஷினி’ செயலி மூலம் … Read more

‘நீட்’ குறித்த பரிந்துரைகள் அமல்படுத்தப்படும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி

புதுடெல்லி: நீட் தேர்வு தொடர்பான சிறப்பு குழு​வின் பரிந்​துரைகள் அமல்படுத்தப்​படும் என்று உச்ச நீதி​மன்​றத்​தில் மத்திய அரசு உறுதி அளித்​துள்ளது. இளநிலை மருத்துவ படிப்பு​களில் சேர ஆண்டு​தோறும் தேசிய அளவில் நீட் நுழைவுத் தேர்வு நடத்​தப்​படு​கிறது. கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்​வின்​போது வினாத்​தாள் கசிவு, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு முறை​கேடுகள் நடைபெற்றன. இதுதொடர்பாக உச்ச நீதி​மன்​றத்​தில் 40-க்​கும் மேற்​பட்ட மனுக்கள் தாக்கல் செய்​யப்​பட்டன. இந்த மனுக்களை விசா​ரித்த 3 நீதிப​திகள் அமர்வு, நீட் தேர்வை ரத்து … Read more

வங்கதேசத்தில் இந்து அர்ச்சகருக்கு ஜாமீன் மறுப்பு

வங்கதேசத்தில் தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட இந்து அர்ச்சகர் மற்றும் இஸ்கான் அமைப்பின் முன்னாள் தலைவர் சின்மயி கிருஷ்ண தாஸ்க்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர் கலவரத்துக்குப் பின், பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா இந்தியா தப்பி வந்தார். அதன்பின் முகமது யூனஸ் தலைமையில் இடைக்கால அரசு பொறுப்பேற்றது. அப்போது முதல் இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனால் வங்கதேசத்தை விட்டு வெளியேறுவதற்காக டாக்கா விமான நிலையம் வந்த இந்து அர்ச்சகரும், இஸ்கான் … Read more

ஜனவரி 8-ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று முதல் வரும் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நெல்லை, மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பதிவாகியுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசைக் காற்றின் நிலவும் வேக மாறுபாடு காரணமாக, … Read more

டெல்லியில் பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

தலைநகர் டெல்லியில் பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். டெல்லி அசோக் விஹாரில் குடிசை மறுவாழ்வு திட்டத்தின் கீழ் புதிதாக 1,675 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன. இவற்றை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்து,பயனாளிகளுக்கு சாவிகளை வழங்குகிறார். டெல்லி நௌரோஜி நகரில் அமைக்கப்பட்டு உள்ள உலக வர்த்தக மையம் மற்றும் சரோஜினி நகரில் 2,500 வீடுகள் கொண்ட பொதுத் தொகுப்பு குடியிருப்புகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். டெல்லி துவாரகாவில் … Read more

மான்டேனேக்ரோ மது விடுதியில் நடந்த மோதலில் 12 பேர் சுட்டுக் கொலை

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான மான்டேனேக்ரோவின் செடின்ஜே நகரில் உள்ள மதுபான விடுதியில் நடந்த வாய்த் தகராறு மோதலாக மாறியதில் 12 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். துப்பாக்கி சூடு நடத்தியவரும் தற்கொலை செய்துகொண்டார். மான்டேனேக்ரோ நாட்டின் செடின்ஜே நகரில் மதுபான விடுதி ஒன்று உள்ளது. இங்கு அகோ மார்டினோவிக் (45) என்பவர் தனது நண்பர்களுடன் மது அருந்த வந்தார். அவர் நாள் முழுவதும் மது அருந்திக் கொண்டிருந்தார். இதனால் விடுதி உரிமையாளருக்கும் அகோ மார்டினோவிக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. … Read more