“கோழைத்தனமானது…” – நியூ ஆர்லியன்ஸ் தீவிரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம்

புதுடெல்லி: அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல் கோழைத்தனமானது என பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “நியூ ஆர்லியன்ஸில் நிகழ்ந்த கோழைத்தனமான தீவிரவாத தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். எங்கள் எண்ணங்களும், பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினருடன் உள்ளது. இந்த துயரத்திலிருந்து அவர்கள் மீளும்போது அவர்களுக்கு வலிமையும் ஆறுதலும் கிடைக்கட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். என்ன நடந்தது? – அமெரிக்காவின் லூசியானா மாகாணம் … Read more

“மாநில மகளிர் ஆணையம் செல்லாதது ஏன்?” – அண்ணா பல்கலை. விவகாரத்தில் குஷ்பு கேள்வி

சென்னை: “தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்கள் விசாரணைக்கு சென்றபோது, அவர்களுடன் மாநில மகளிர் ஆணையம் ஏன் செல்லவில்லை? ‘யார் அந்த சார்’ என்பதற்கும் தற்போதுவரை பதில் இல்லை. கடுமையான தண்டனைகள் கொடுக்காதவரை நமது சமுதாயத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் நடந்து கொண்டுதான் இருக்கும்,” என நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “அண்ணா பல்கலைக்கழக சம்பவத்துக்குப் பிறகாவது … Read more

பிஹார் தேர்வு விவகாரம்: பிரசாந்த் கிஷோர் சாகும் வரை உண்ணாவிரதம்

பாட்னா: பிஹார் மாநிலத்தின் அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி ஜன் சுராஜ் கட்சி தலைவரும், பிரபல தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். பிபிஎஸ்சி தேர்வுகளால் பாதிக்கப்பட்ட பல தேர்வர்கள் இரண்டு வாரங்களாக போராட்டம் நடத்தி வரும் இடத்தில் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க காந்தி மைதானத்தில் வைத்து வியாழக்கிழமை இந்த உண்ணாவிரத போராட்டத்தை பிரசாந்த் கிஷோர் அறிவித்தார். … Read more

ஜன.14 முதல் 17 வரை ‘சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’ | நிகழ்விட விவரம்

சென்னை: சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சிகளை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜன.13 அன்று தொடங்கி வைக்கிறார். ஜன.14 முதல் ஜன.17 வரை நான்கு நாட்கள் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை 18 இடங்களில் சங்கமம் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னையில், தை மாதம் தொடக்கத்தில் பொங்கல் நாட்களில் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா என்ற பிரம்மாண்ட … Read more

பயிர்க் காப்பீடு திட்டத்தை தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: இந்தாண்​டின் முதல் அமைச்​சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமை​யில் நேற்று நடைபெற்​றது. இதில் 2021-22 முதல் 2025-26 வரை ரூ.69,515.71 கோடி ஒட்டுமொத்த ஒதுக்​கீட்​டில் பிரதமரின் பயிர்க் காப்​பீட்டுத் திட்டம் மற்றும் வானிலை அடிப்​படையிலான பயிர்க் காப்​பீட்டுத் திட்​டத்தை 2025-26 வரை தொடர ஒப்புதல் அளிக்​கப்​பட்​டது. இந்த முடிவு 2025-26 வரை நாடு முழு​வதும் உள்ள விவசா​யிகளுக்கு இயற்​கைப் பேரழி​வு​களி​லிருந்து பயிர்களை பாது​காக்க உதவும். பிரதமரின் பயிர்க் காப்​பீட்டுத் திட்​டம், மறுசீரமைக்​கப்​பட்ட வானிலை அடிப்​படையிலான பயிர் … Read more

நியூயார்க் இரவு விடுதியில் சரமாரி துப்பாக்கிச் சூடு: 10 பேர் காயம்

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் புதன்கிழமை இரவு கேளிக்கை விடுதிக்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள அமாசுரா என்ற இரவு கேளிக்கை விடுதிக்கு அருகே உள்ளூர் நேரப்படி இரவு 11:20 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் சுமார் 10 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நூற்றுக்கணக்கானவர்கள் கூடும் அந்த கேளிக்கை விடுதியில் இரவு நேர பார்டிகள் நடைபெறுவது … Read more

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம் வழங்குவதற்காக 163.81 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 2023-2024-ஆம் ஆண்டுக்கான ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம், ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிட163.81 கோடி ரூபாய் … Read more

1991 மத வழிபாட்டுத் தலங்கள் சட்டம் குறித்த ஒவைசியின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

புதுடெல்லி: கடந்த 1947, ஆகஸ்ட் 15-ல் இருந்த மதத் தன்மைகளை பேணுவதற்கு வழிவகை செய்யும் 1991 மத வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை அமல்படுத்தக் கோரி ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி தாக்கல் செய்த மனுவை பரிசீலனை செய்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி சஞ்சய் குமார் அடங்கிய அமர்வு, இன்று (வியாழக்கிழமை) இதனை தெரிவித்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் ஏற்கெனவே நிலுவையில் உள்ள பழைய மனுக்களுடன் ஒவைசியின் … Read more

இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்: காசாவில் 3 குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழப்பு

டெல் அவில்: காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹமாஸ்-இஸ்ரேல் இடையிலான போரில் காசாவில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆனால் இன்னும் போரின் தாக்கம் குறையவில்லை. இதனால் பலர் தெற்கு காசாவில் உள்ள பாதுகாப்பான பகுதி என அறிவிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர். இந்நிலையில், இன்று காலை மக்கள் தங்கியிருந்த தற்காலிக கூடாரங்கள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. அதில், மூன்று குழந்தைகள் … Read more

திசாநாயக்க சொன்ன பிறகும் தீர்வு கிடைக்கலையே! – தொடரும் கைதுகளால் துவளும் மீனவர்கள்

டிசம்பர் 15-ல் அரசு முறை பயணமாக இந்தியா வந்திருந்தார் இலங்கையின் புதிய அதிபர் அனுர குமார திசாநாயக்க. அப்போது, “மீனவர்கள் பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும்” என்று திசாநாயக்கவிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார். அவரும், “இரு நாடுகளுக்கும் மிகப்பெரிய சிக்கலாக மாறியுள்ள மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர மற்றும் நிலையான தீர்வைக்காண விரும்புகிறோம்” என்று நம்பிக்கை தெரிவித்தார். இதைக் கேட்டு தமிழக மீனவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ஆனல், அந்த நிம்மதி 10 நாள்கூட நீடிக்கவில்லை. இலங்கை … Read more