“தொடர் போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம்!” – கோவை திமுக மேயரை மிரட்டும் கூட்டணிக் கட்சிகள்
திமுக-வுக்கு எதிர்க்கட்சிகள் கொடுக்கும் குடைச்சல்கள் போதாதென்று இப்போது உள்ளாட்சி அளவில் கூட்டணிக் கட்சிகளும் ஆங்காங்கே குடைச்சல் கொடுக்க ஆரம்பித்துவிட்டன. அதற்கு உதாரணம், அண்மையில் கோவை மாமன்றக் கூட்டத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சி கவுன்சிலர்கள் போர்க்கொடி உயர்த்தியது. கோவை மாநகராட்சியின் மாமன்றக்கூட்டம் அண்மையில் நடந்தது. இதில் வழக்கம் போல் அதிமுக கவுன்சிலர்கள் மூன்று பேரும் கூட்டம் தொடங்கியதுமே மாநகராட்சியை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ட்ரோன் மூலம் சர்வே செய்து சொத்து வரி விதிப்பதை தடைசெய்ய வேண்டும், … Read more