திசாநாயக்க சொன்ன பிறகும் தீர்வு கிடைக்கலையே! – தொடரும் கைதுகளால் துவளும் மீனவர்கள்

டிசம்பர் 15-ல் அரசு முறை பயணமாக இந்தியா வந்திருந்தார் இலங்கையின் புதிய அதிபர் அனுர குமார திசாநாயக்க. அப்போது, “மீனவர்கள் பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும்” என்று திசாநாயக்கவிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார். அவரும், “இரு நாடுகளுக்கும் மிகப்பெரிய சிக்கலாக மாறியுள்ள மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர மற்றும் நிலையான தீர்வைக்காண விரும்புகிறோம்” என்று நம்பிக்கை தெரிவித்தார். இதைக் கேட்டு தமிழக மீனவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ஆனல், அந்த நிம்மதி 10 நாள்கூட நீடிக்கவில்லை. இலங்கை … Read more

ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி ஆந்திராவில் ஒரே நாளில் ரூ.200 கோடிக்கு மது விற்பனை

அமராவதி: ஆங்கில புத்தாண்டையொட்டி டிசம்பர் மாதம் 31-ம் தேதி மட்டும் ஆந்திராவில் ரூ.200 கோடிக்கு மதுபானம் விற்பனையாகி உள்ளது. ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக டிசம்பர் மாதம் 31-ம் தேதி ஆந்திராவில் ரூ.200 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது தெரியவந்துள்ளது. ஆங்கில புத்தாண்டையொட்டி 3 நாட்களுக்கு முன்னதாக டெப்போவில் இருந்து மதுபானங்கள் கடைகள், பார்கள் மற்றும் கிளப்புகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது. ஆந்திர அரசும் டிசம்பர் 31-ம் தேதி நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட இரவு கூடுதலாக 2 மணி நேரம் … Read more

அண்ணா பல்கலை., சம்பவத்தை ஏன் அரசியல் ஆக்குகிறீர்கள்? – பாமக வழக்கில் ஐகோர்ட் கேள்வி

சென்னை: “பெண்கள் பாதுக்காப்பில் உண்மையான கவனம் செலுத்தாமல் அண்ணா பல்கலை. விவகாரத்தை அரசியலாக்குவது ஏன்?” என ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கோரிய பாமக மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதற்கிடையில், அண்ணா பல்கலை. விவகாரத்தில் ஆளும் திமுக அரசைக் கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற சவுமியா அன்புமணி உள்ளிட்ட பாமக நிர்வாகிகளை போலீஸார் கைது செய்தனர். அரசியலாக்குவது ஏன்? இதுதொடர்பாக பாமக வழக்கறிஞர் பாலு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் … Read more

டெல்​லி​யில் மனை​வி​யுடன் வியாபார பிரச்​சினை: ஓட்டல் உரிமையாளர் தற்கொலை

புதுடெல்லி: டெல்லி மாடல் டவுண்ஸ் கல்யாண் விகார் பகுதி​யில் வசித்தவர் புனித் குரானா. இவருக்கு வயது 40. இவருடைய மனைவி மனிகா ஜகதீஷ் பாவா. இருவருக்​கும் கடந்த 2016-ம் ஆண்டு திரு​மணம் நடைபெற்​றது. இருவரும் சேர்ந்து டெல்​லி​யில், ‘உட்​பாக்ஸ் கபே’ என்ற பெயரில் ஓட்டல் ஒன்று தொடங்​கினர். இதற்​கிடை​யில், இருவருக்​கும் இடையில் வியாபாரம் தொடர்பாக கருத்து வேறு​பாடுகள் முற்றி உள்ளது. இதையடுத்து, இருவரும் விவாகரத்து கோரி வழக்கு தொடுத்​துள்ளனர். இந்த வழக்​கில் விரை​வில் தீர்ப்பு வெளியாக உள்ளது. … Read more

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் தீ விபத்து: நோயாளிகள்  வேறு தளத்துக்கு மாற்றம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புதிய கட்டிடத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தால், கரும்புகை ஏற்பட்டு நோயாளிகள் உடனடியாக வேறு தளத்துக்கு மாற்றப்பட்டனர். துரித நடவடிக்கையால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புதிய கட்டிடம் ஐந்து தளங்களில் செயல்பட்டு வருகிறது. இங்கு 500-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். புதன்கிழமை இரவு 11.30 மணியளவில் மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் உள்ள இன்வெர்டர் அறையில் திடீரென தீப்பற்றி … Read more

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2024-ல் ரூ.1,365 கோடி உண்டியல் வருவாய்

திருமலை: உலக பணக்கார கடவுளாக பக்தர்களால் போற்றி வழிபடப்படும் திருப்பதி ஏழுமலையானுக்கு, கடந்த 2024-ம் ஆண்டில் 1,365 கோடி ரூபாயை உண்டியல் மூலம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர் எனத் தெரியவந்துள்ளது. திருப்பதி ஏழுமலையானை சுமார் 60 முதல் 70 ஆயிரம் பக்தர்கள் நாள்தோறும் தரிசித்து வருகின்றனர். வார கடைசியான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக மேலும் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம். இதுவே பிரம்மோற்சவம், ஆனிவார ஆஸ்தானம், … Read more

பால் உற்பத்தியாளர்களுக்கான ஊக்கத்தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும்: அமைச்சர் ராஜகண்​ணப்பன் அறிவிப்பு

சென்னை: பால் லிட்டருக்கு ரூ.3 ஊக்கத்​தொகை உற்பத்​தி​யாளர்​களின் வங்கி கணக்​குக்கு நேரடியாக செலுத்து​வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்​ளது. இதுகுறித்து பால் வளத்​துறை மற்றும் கதர்த்​துறை அமைச்சர் ஆர்.எஸ்​.ராஜகண்​ணப்பன் வெளியிட்ட அறிக்கை​: தமிழகம் முழு​வதும் கடந்த 2019-20-ம் ஆண்டில் சுமார் 23 லட்சம் லிட்​டராக ஆவின் பால் விற்பனை இருந்​தது. தமிழக அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கை​யின் காரண​மாக, 2024-25-ல் சுமார் 7 லட்சம் லிட்​டருக்கு மேல் அதிகரித்து தற்போது தினசரி 30 லட்சம் லிட்டர் பால் விற்கப்​படு​கிறது. கடந்த … Read more

1901-க்குப் பின் மிக வெப்பமான ஆண்டு 2024 – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

புதுடெல்லி: 1901-க்குப் பின் இந்தியாவில் மிக வெப்பமான ஆண்டு 2024 தான். அந்த வகையில் கடந்த 123 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2024-ல் அதிக வெப்பம் பதிவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் மிருத்யஞ்சய் மொஹபத்ரா காணொலி மூலம் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: இந்தியாவில் கடந்த 1901-ம் ஆண்டுக்கு பிறகு 2024-ம் ஆண்டுதான் வெப்பமான ஆண்டாக இருந்தது. கடந்த … Read more

அரசின் பிரமாண பத்திரம், பதில் மனுக்​களில் அரசு வழக்கறிஞர்களின் சான்​றொப்பம் கட்டாயம்: தலைமை செயலர் உத்தரவு

சென்னை: நீதி​மன்​றங்​களில் அரசு சார்​பில் தாக்கல் செய்​யப்​படும் பிரமாணப் பத்திரம் மற்றும் பதில் மனுக்கள் உள்ளிட்ட பிற வழக்கு ஆவணங்​களில் அரசு வழக்​கறிஞர்​களிடம் சான்​றொப்பம் பெறுவது கட்டாயம் என அனைத்து ஆட்சி​யர்​களுக்​கும் தலைமைச் செயலாளர் உத்தர​விட்​டுள்​ளார். இதுதொடர்பாக அரசு தலைமைச் செயலர் என்.​முரு​கானந்தம் அனைத்து மாவட்ட ஆட்சி​யர்​கள், துறைத் தலைவர்கள் மற்றும் கூடுதல் தலைமைச் செயலர்கள் உள்ளிட்டோருக்கு பிறப்​பித்த சுற்​றறிக்கை: சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்கல் செய்​யப்​படும் ஒவ்வொரு பிரமாணப் பத்திரம், பதில் மனுக்கள் மற்றும் வழக்​குக்கு … Read more

5 கிலோ நகைகள் அணிந்து திருமலைக்கு வந்த பக்தர்

திருமலை: ஆங்கில புத்​தாண்​டையொட்டி திருப்பதி ஏழுமலை​யான் கோயி​லில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோ​தி​யது. இதனால் இலவச தரிசனம் வாயிலாக சுவாமியை தரிசிக்க 14 மணி நேரம் வரை பக்தர்கள் காத்​திருந்​தனர். புத்​தாண்டை முன்னிட்டு, நேற்று அதிகாலை 2 மணிக்கு திருப்​பாவை சேவையும், அதனைத் தொடர்ந்து அர்ச்சனை, தோமாலை சேவை என ஆர்ஜித சேவைகள் நடைபெற்றன. முதல்வர் சந்திர பாபு நாயுடு, நேற்று காலை விஜயவாடாவில் உள்ள கனகதுர்கையம்மன் கோயிலுக்கு சென்று அம்மனை தரிசித்தார். ஹைதராபாத்தைச் சேர்ந்த தெலங்கானா … Read more