'எனது மகள் உயிருடன் இருக்கிறார்' – ஆறரை ஆண்டுக்கு பிறகு சிறையில் இருந்துவந்த இந்திராணி முகர்ஜி

புதுடெல்லி: ஆறரை வருடங்களுக்கு பிறகு சிறையில் இருந்து வெளிவந்துள்ள இந்திராணி முகர்ஜி, தனது மகள் ஷீனா போரா இன்னும் உயிருடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமைப் பொறுப்பு வகித்த பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி முகர்ஜி. மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவர் தனது முன்னாள் கணவர் மூலம் தனக்கு பிறந்த மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக 2015-ம் ஆண்டு மும்பை போலீஸாரால் கைது செய்யப்பட்டார். பீட்டர் முகர்ஜிக்கு அவரது முன்னாள் மனைவி மூலம் பிறந்த … Read more

இலங்கைத் தமிழர்களுக்கு உதவ மே 22-ல் மீண்டும் மொய் விருந்து: புதுக்கோட்டை டீ கடைக்காரர் ஏற்பாடு

புதுக்கோட்டை: இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் அவதிப்பட்டு வரும் தமிழர்களுக்கு உதவி செய்வதற்காக புதுக்கோட்டையில் டீ கடைக்காரர் மீண்டும் ஒரு மொய் விருந்தை மே 22-ம் தேதி நடத்துகிறார். திருவரங்குளம் அருகே மாங்கனாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ்.சிவக்குமார் (45). மிகவும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த இவர், வம்பன் 4 சாலை பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக டீக்கடை வைத்துள்ளார். கடந்த சில மாதங்களாக புதுக்கோட்டை கேப்பறை பகுதியிலும் ஒரு கடையை தொடங்கி நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 2018-ல் … Read more

ஸ்மார்ட் சிட்டி திட்டம் தாமதம்: ஒப்பந்த நிறுவனத்திற்கு தினமும் அபராதம் விதிக்க மதுரை மாநகராட்சி நடவடிக்கை

மதுரை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை முடிக்காமல் தாமதம் செய்து வரும் ஒப்பந்தம் எடுத்த நிறுவனதிற்கு தினமும் அபராதத்துடன் கூடிய நடவடிக்கையாக மதுரை மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கவுள்ளது. மதுரை மாநகராட்சியில் ரூ.995.55 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் 14 திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இவற்றில் பெரியார் பஸ் நிலையம், குன்னத்தூர் சத்திரம் தவிர மற்ற திட்டங்கள் இன்னும் நிறைவடையாமல் உள்ளது. பெரியார் பஸ்நிலையம் வணிக வளாகம் கட்டுமானப் பணி மிக தாதமாக நடக்கிறது. அதுபோல், தமுக்கம் மைதானத்தில் உள்ள … Read more

“ஆபரேஷன் கஞ்சா 2.0 போல் ஆபரேஷன் கள்ளச்சாராயம் 2.0 நடத்தப்படுமா?” – இபிஎஸ் கேள்வி

சென்னை: “சென்னை முதல் குமரி வரை கள்ளச்சாராய விற்பனை ஒரு சில காவல் துறையினர் மற்றும் ஆளும் கட்சியினர் ஆதரவோடு கனஜோராக நடைபெறுகிறது. தமிழகத்தில் ஆபரேஷன் கஞ்சா 2.0 நடத்தப்படுவது போல், இனி ஆபரேஷன் கள்ளச்சாராயம் 2.0 நடத்தப்படுமா?“ என்று சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: “தமிழகத்தில் இந்த திமுக அரசு அமைந்த பின்பு, சமூக விரோதச் செயல்கள் அதிகரித்துள்ளதை அவ்வப்போது அறிக்கைகள் மூலமும், … Read more

சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி: விரைவில் பணிகளை தொடங்குகிறது சென்னை மாநகராட்சி

சென்னை: கடப்பாக்கம் ஏரியை புரனமைத்து சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்றும் திட்டப் பணிகளை சென்னை மாநகராட்சி விரைவில் தொடங்கவுள்ளது. சென்னை மாநகராட்சி மணலி மண்டலம் 16-வது வார்டில் கடப்பாக்கம் ஏரி உள்ளது. 135 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியின் நீரை கடப்பாக்கம், கன்னியம்மன்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடப்பாக்கம் ஏரியை புரனமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. இதன்படி கொசஸ்தலையாறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டவரும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் … Read more

பேரறிவாளனை கட்டியணைத்த முதல்வர் | “இது அரசியல் வன்முறையை வளர்க்கும்” – எச்.ராஜா ஆவேசம்

சென்னை: “பேரறிவாளனை முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டியணைத்தது அரசியல் வன்முறையை வளர்க்கும்” என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். “30 ஆண்டுகளுக்கும் மேலான சிறைவாசத்தை வென்று திரும்பியுள்ள சகோதரர் பேரறிவாளன் அவர்களைச் சந்தித்துக் கட்டியணைத்து நெகிழ்ந்தேன்! 1/2 pic.twitter.com/PyGviFJSJ5 — CMOTamilNadu (@CMOTamilnadu) May 18, 2022 ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேரறிவாளன் நன்றி தெரிவித்தார். அப்போது … Read more

‘ஒரு நோயாளி மாநிலத்தில் எங்கு வேண்டுமானாலும் சிகிச்சையை தொடர இணையப் பதிவேடு’ – ஆஸி. அதிகாரிகளுடன் தமிழக அரசு ஆலோசனை

சென்னை: மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது தொடர்பாக ஆஸ்திரேலிய அரசு அதிகாரிகளுடன் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைக்கான ‘தாய்’ சிகிச்சை முறையானது ஆஸ்திரேலியாவைப் பின்பற்றி செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது அதன் தொடர்ச்சியாக நோயாளிகள் இணையப் பதிவேடு முறையை விரிவாக அமல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில், இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய … Read more

காங்கிரஸால் பாஜகவை வீழ்த்தவே முடியாதா?! – ஓர் அலசல்

காங்கிரஸால் பாஜகவை வீழ்த்தவே முடியாதா? – இப்படியொரு கேள்வி நம்மில் பலருக்கும் இருக்கலாம். 2024 நாடாளுமன்றத் தேர்தலை நோக்கிய நகர்வுகளை பாஜக ஏற்கெனவே எடுத்துவைத்துவிட்ட வேளையில், இந்தக் கேள்வி காங்கிரஸ் அனுதாபிகள் மத்தியில் இன்னும் மேலோங்கியிருக்கலாம். காங்கிரஸ் சிந்தனைக் கூட்டத்தில் இருந்து இவற்றிற்கான விடையைத் தேட ஆரம்பிப்போம். சிந்தனைக் கூட்டத்தின் கடைசி நாளில் பேசிய ராகுல் காந்தி, “பாஜக எப்போதும் காங்கிரஸ் பற்றி மட்டுமே விமர்சிக்கும், காங்கிரஸ் தலைவர்களை விமர்சிக்கும், ஏன் காங்கிரஸ் தொண்டர்களையும் கூட விமர்சிக்கும். … Read more

தமிழகத்தில் புதிதாக 37 பேருக்கு கரோனா பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று ஆண்கள் 24, பெண்கள் 13 என மொத்தம் 37 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 20 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 54,801 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 34 லட்சத்து 16,461 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 44 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 315 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் நேற்று கரோனா … Read more

சில மாநிலங்களில் குறைந்து வரும் கரோனா தடுப்பூசி பயன்பாடு: மத்திய அரசு கவலை

புதுடெல்லி: நாட்டில் சில மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கரோனா தடுப்பூசி செலுத்துபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷன், அனைத்து மாநில சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்களுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடியனார். அப்போது பேசிய அவர், தற்போது மந்த நிலையில் உள்ள தடுப்பூசி பயன்பாட்டை அதிகரிக்க உந்துதல் தேவை என்று எடுத்துரைத்தார். தொடர்ந்து, தடுப்பூசி செலுத்திக் கொள்வதின் அவசியம் குறித்த விழிப்புணர்வை … Read more