“பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்தக் கூடாது. ஏனெனில்…” – நிலைக்குழுவிடம் பட்டியலிட்ட குழந்தை நல அமைப்பு

புதுடெல்லி: பெண்ணின் திருமண வயதை உயர்த்துவதற்கு மாற்றாக கல்வியின் தரத்தை மேம்படுத்தலாம் என நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் குழந்தை நல அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. பெண்ணின் குறைந்தபட்ச திருமண வயதை 18-லிருந்து 21 ஆக உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை கடந்த டிசம்பர் மாதம் ஒப்புதல் அளித்தது. ஜெயா ஜேட்லி தலைமையிலான குழுவின் பரிந்துரையை ஏற்று, மத்திய அமைச்சரவை இந்த ஒப்புதலை அளித்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையால் நியமிக்கப்பட்ட இந்தக் குழு, குழந்தைகள் இறப்பு விகிதம், பிரசவ இறப்பு … Read more

முழுமையாக குணமடைந்த பிறகும் கீழ்ப்பாக்கம் மன நல மருத்துவமனையில் இருப்பதை தடுக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

சென்னை: மனநல பாதிப்பிலிருந்து முழுமையாக குணமடைந்த பிறகும், கீழ்ப்பாக்கம் மன நல மருத்துவமனையில் இருப்பதை தடுப்பது குறித்து தமிழ்நாடு மாநில மனநல ஆணையத்திற்கு அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்கக கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெபமணி ஜனதா கட்சியின் பொதுச் செயலாளரான ஜெ. மோகன்ராஜ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையின் வருந்தத்தக்க நிலை குறித்து சமூக ஊடகங்களில் வெளியான செய்தியில், காமராஜரிடம் … Read more

ஓராண்டு தண்டனை பெற்ற நவ்ஜோத் சிங் சித்து சரணடைந்தார்

புதுடெல்லி: ஒராண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் நவ்ஜோத் சிங் சித்து இன்று சரணடைந்தார். கடந்த 1988 ஆம் ஆண்டு, நவ்ஜோத் சிங் சித்து மற்றும் அவரது நண்பர் ரூபீந்தர் சாந்து ஆகிய இருவரும் பாட்டியாலாவைச் சேர்ந்த குர்மான் சிங் (65) என்பவருடன் கார் பார்க்கிங் தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் சித்து, குர்மான் சிங்கை காரிலிருந்து வெளியே இழுத்து தாக்கியுள்ளார். இதில் குர்மான் சிங் காயமடைந்தார். பின்னர் … Read more

காந்தி சிலையை மையப்படுத்தி பல நிகழ்ச்சிகள்: கடற்கரையிலேயே வேறு இடத்திற்கு சிலையை மாற்ற முடிவு

சென்னை: காந்தி சிலையை மையப்படுத்தி பல்வேறு நிகழ்ச்சிகள் நடப்பதால், கடற்கரையிலேயே வேறு இடத்திற்கு சிலையை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை பூந்தமல்லி பைபாஸ் – கலங்கரை விளக்கம் இடையே புதிய மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. கலங்கரை விளக்கம் மெட்ரோ நிலையம், காந்தி சிலை பின்புறம் சுரங்கத்தில் அமைக்கப்படுகிறது. இந்நிலையில், மெட்ரோ ரயில் பணிகளால், காந்தி சிலை சேதமடைவதைத் தடுக்க, தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முடிவு செய்தது. அதன்படி, மெரினா … Read more

ஹிஜாப் தடையால் கர்நாடகாவில் சீருடை கட்டாய‌மானது

பெங்களூரு: கர்நாடகாவில் கடந்த பிப்ரவ‌ரியில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் (தலை முக்காடு) அணிய தடை விதிக்கப்பட்டது. இதனை உயர் நீதிமன்றம் ஏற்று கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மாணவிகள் 10 மற்றும் பியூசி இறுதி தேர்வை புறக்கணித்தனர். இந்நிலையில் கர்நாடக கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “சமத்துவம், ஒற்றுமை, பொது ஒழுங்கை கடைபிடிக்கும் நோக்கில் 2022-23-ம் கல்வி ஆண்டு முதல் பியூசி மாணவ, மாணவிகள் கட்டாயம் சீருடை அணிய … Read more

அமராவதி ஆற்றில் சட்ட விரோதமாக தண்ணீர் எடுக்க தடை கோரி மனு: திருப்பூர் ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

சென்னை: அமராவதி ஆற்றில் இருந்து சட்ட விரோதமாக தனி நபரால் தண்ணீர் எடுக்கப்படுவதற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த குமாரசாமி என்பவர் தாக்கல் செய்த மனுவில், “திருப்பூர் மாவட்டம் மன்னக்கடவு கிராமத்தில் ஓடும் அமராவதி ஆற்றில் இருந்து பழனிசாமி என்பவர் சட்ட விரோதமாக தண்ணீர் எடுப்பதோடு அந்தப் பகுதியில் ஆக்கிரமிப்பை மேற்கொண்டுள்ளார். சட்டவிரோதமாக தண்ணீர் எடுக்கப்படுவதால் … Read more

காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமனுக்கு 4 நாள் சிபிஐ காவல்

புதுதில்லி: சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கிய வழக்கில், காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரை 4 நாள் சிபிஐ காவலில் விசாரிக்க சிறப்பு சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. 2009-2014-ம் ஆண்டு காலகட்டத்தில், மத்திய அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, 263 சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கப்பட்டு லஞ்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ புதிதாக வழக்கு பதிவு செய்தது. கார்த்தி சிதம்பரம் தனது ஆலோசனை சேவைகள் மற்றும் விசா சேவைகள் வழங்கும் நிறுவனம் மூலம் போலி ரசீதுகள் … Read more

'நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற' – உதகை மலர் கண்காட்சியில் முதல்வருக்காக டைமிங் இசை

நீலகிரி: உதகை மலர் கண்காட்சியை திறந்துவைத்த முதல்வரை வரவேற்ற ராணுவ பேண்ட் வாத்திய இசைக்குழுவினர் முதல்வரை வாழ்த்தி ”நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற” என்ற எம்ஜிஆரின் இதயக்கனி திரைப்படப் பாடலை இசைத்து டைமிங் இசை வழங்கியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. வெலிங்டன் ராணுவத்தின் பேண்ட் வாத்தியக் குழு முதல்வர் மு.க.ஸ்டாலின் தங்களை நோக்கி வந்ததும், ”நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற” பாடலை டைமிங்காக வாசிக்க முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி அதனை வெகுவாக … Read more

மொழியை வைத்து சர்ச்சைகளை கிளப்ப முயற்சி நடக்கிறது: பிரதமர் மோடி ஆதங்கம்

ஜெய்ப்பூர்: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியும் நமது அடையாளம் தான், கடந்த சில நாட்களாக, மொழி அடிப்படையில் சர்ச்சைகளை கிளப்ப முயற்சிகள் நடப்பதை பார்க்கிறோம் என பிரதமர் மோடி கூறினார். ராஜஸ்தானில் நடக்கும் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக மோடி பேசியதாவது: பாஜக முன்பு ஜனசங்கம் இருந்த போது நம்மை பற்றி நாட்டில் பலருக்கு தெரியாது. தேசத்தை கட்டமைக்கும் கொள்கையை நமது தொண்டர்கள் ஏற்று கொண்டனர். அதிகாரத்தில் இருந்து நாம் நீண்ட தொலைவில் இருந்தாலும், … Read more

“சென்னை குடிநீர் வாரிய ஊழியர்களின் கண்ணீர், திமுக ஆட்சியை அழிக்கும் ஆயுதமாகிவிடும்” – ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை: 10 ஆண்டுகளுக்கு மேலாக சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் வாரியத்தில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். அவர்களை தனியார் நிறுவன ஊழியர்களாக ஆக்கியதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில், சென்னை குடிநீர் வாரிய ஊழியர்களின் கண்ணீர் திமுக ஆட்சியை அழிக்கும் ஆயுதமாகிவிடும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “சொன்னதைச் செய்வேன், செய்வதைத் தான் சொல்வேன்” என்பதைத் தமிழக மக்களுக்கு எனது உறுதிமொழியாக வழங்குகிறேன் … Read more