கலைஞர் நூலகம் கட்டுமானப் பணிகள் 90% நிறைவு: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

மதுரை: கலைஞர் நூலகம் கட்டுமானப் பணியை பொறுத்தவரையில் 90 சதவீதம் முடிந்துள்ளது என்று பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். மதுரை விவசாய கல்லூரி அருகே முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய சாலை அமைக்கும் பணி பூஜை, கலைஞர் நினைவு நூலகம் கட்டுமானப் பணிகள் ஆய்வு போன்ற நிகழ்ச்சிகளில் பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எவ.வேலு கலந்து கொண்டார். அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ”கலைஞர் நினைவு நூலகம் … Read more

பேரறிவாளன் விடுதலை | “அதிமுக அரசின் மூளையில் உதித்த ஞானமல்ல” – பழனிசாமிக்கு தங்கம் தென்னரசு காட்டத்துடன் விளக்கம்

சென்னை: “எங்களது சட்ட ஞானம் – துணிச்சல் என்றெல்லாம் அறிக்கை விட்டுள்ள பழனிசாமிக்கு ஒன்றை நான் நினைவுபடுத்த விரும்புகிறேன். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற நடவடிக்கை அதிமுக அரசின் மூளையில் உதித்த ஞானமல்ல” என்று தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு காட்டமாக விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று வெளியிட்ட அறிக்கையில், “நீண்ட சிறைவாசத்திலிருந்து பேரறிவாளன் விடுதலை பெற அவரது தாய் அற்புதம்மாள் நடத்திய … Read more

துவரம் பருப்பு ரூ.140, உளுந்து ரூ.145, நல்லெண்ணெய் ரூ.340… – விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: “வெளிச் சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறையும் வரை ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் தலா 2 கிலோ துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயிலும், கூடுதலாக சமையல் பொருட்கள் தொகுப்பும் மானிய விலையில் வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் ஏழைகளால் எட்டிப் பிடிக்க முடியாத அளவுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. … Read more

சோனியா, ராகுல், பிரியங்கா மன்னித்தாலும் காங்கிரஸ் தொண்டர்கள் மன்னிக்க மாட்டோம்: நாராயணசாமி

புதுச்சேரி: “ராஜீவ் காந்தியை இழந்த நாங்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எப்படி ஏற்க முடியும்? சோனியா, ராகுல், பிரியங்கா மன்னித்தாலும் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் என்ற முறையில் மன்னிக்க மாட்டோம்” என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். பேரறிவாளன் விடுதலை குறித்து புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறுகையில், ”விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் எங்கள் தலைவர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கு விசாரணை நடந்து 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேல்முறையீடு செய்து … Read more

“பழைய ஓய்வூதியம் குறித்து நான் ஒரு வார்த்தை கூட பேசவில்லை” – பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

மதுரை: “எனது துறை மானியக் கோரிக்கையில் பேசியபோது, பழைய ஓய்வூதியம் வழங்க முடியாது என்று நான் ஒரு வார்த்தை கூட பேசவில்லை” என்று தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். மதுரையில் இன்று (வியாழக்கிழமை) மாலை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “தமிழக சட்டப்பேரவையில் எனது துறை மானியக்கோரிக்கையின் போது பழைய ஓய்வூதியம் தொடர்பாக பேசினேன். அப்போது ராஜஸ்தான் மாநில அரசு பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்துவது … Read more

கேன்ஸ் விழா | சர்வதேச திரைப்படத் தயாரிப்பாளர்களை சந்திக்கிறார் மத்திய இணை அமைச்சர் முருகன்

பிரான்சில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல் முருகன் நாளை மறுநாள் டெல்லியில் இருந்து புறப்படுகிறார். இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கேன்ஸ் திரைப்பட விழாவில், 22, 23, 24 ஆகிய மூன்று நாட்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அமைச்சர் முருகன் பங்கேற்க உள்ளார். மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் திறந்து வைத்த இந்திய அரங்கை, இணையமைச்சர் … Read more

மண்டல குழுக்கள் அமைக்கப்பட்ட பின்பு முதல் மாமன்ற கூட்டம் மே 30-ல் நடைபெறும்: சென்னை மாநகராட்சி

சென்னை: மண்டல குழுக்கள் அமைக்கப்பட்ட பிறகு முதல் மாமன்றக் கூட்டம் இம்மாதம் 30-ம் தேதி நடைபெறும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்களின் முதல் கூட்டம் கடந்த மாதம் நடந்தது. அப்போது மாநகராட்சியின் 2022– 23ம் பட்ஜெட் மற்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து, மண்டலக் குழுத் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டு, மண்டல அளவிலான முதல் கூட்டம் இந்த மாதம் நடந்தது. இந்தக் கூட்டத்தில், மண்டல அளவில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் … Read more

ஓமந்தூரார் மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர் குழு மூலம் மாணவி சிந்துவிற்கு சிகிச்சை

சென்னை: படுத்த படுக்கையாக தேர்வு எழுதிய மாணவி சிந்துவிற்கு ஓமந்தூரார் மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர் குழு மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை கோடம்பாக்கம், வெள்ளாள தெருவை சேர்ந்தவர் சக்தி (43). இவர் கோடம்பாக்கம் பகுதியில் உள்ள கடைகளுக்கு சென்று டீ வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி தேவி (36). இவர்களுக்கு சிந்து என்ற பெண் உள்ளார். கடந்த 2020 டிசம்பரில், தோழி வீட்டின் மூன்றாவது மாடியில் சிந்து விளையாடியபோது, எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில், … Read more

தமிழக – ஆந்திர எல்லையில் கனமழை: கோடையில் வரலாறு காணாத அளவில் பாலாற்றில் வெள்ளம்

வேலூர்: தமிழக – ஆந்திர எல்லையில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோடைக் காலத்தில் பாலாற்றில் வரலாறு காணாத அளவுக்கு 660 கன அடிக்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் இயல்பை விட 3 டிகிரி அளவுக்கு வெயில் சுட்டெரித்ததால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர். வழக்கத்தைக் காட்டிலும் அனல் காற்றுடன் வெயில் சுட்டெரித்த நிலையில் அக்னி நட்சத்திரமும் இணைந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. கடந்த சில … Read more

அமெரிக்கா | டாப்ஸ் சூப்பர் மார்க்கெட்டும், திட்டமிட்டு நடத்தப்பட்ட இனவெறித் தாக்குதலும்!

“எங்கள் விசாரணையிலிருந்து உங்களுக்கு ஒன்றை நான் தெளிவாக கூறுகிறேன்… இது வெறுப்பினால் நடத்தப்பட்ட குற்றம், இனரீதியாக தூண்டப்பட்ட தீவிரவாத செயல்” – டாப்ஸ் சூப்பர் மார்க்கெட் துப்பாக்கிச் சூடு குறித்து அமெரிக்க எப்பிஐ (FBI) இயக்குநர் கிறிஸ்டோபர் செய்தியாளர்களிடம் கூறியது. கடந்த சனிக்கிழமை அமெரிக்காவில் நடந்த அந்த பயங்கரவாத துப்பாக்கிச் சூட்டினால் கருப்பின அமெரிக்கர்கள் பெரும் பதற்றதிற்கும், மன அழுத்தத்திற்கும் உள்ளாகி இருக்கிறார்கள். ஜார்ஜ் பிளாய்ட் மரணத்திற்கு பின் நடந்த போராட்டங்கள் அமெரிக்காவில் நிலவும் இன வெறி … Read more