பேரறிவாளன் விடுதலை, ஜிஎஸ்டி தீர்ப்புகளை இணைத்துப் பார்க்க வேண்டும்: பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

மதுரை: பேரறிவாளன் விடுதலை தீர்ப்பையும், ஜிஎஸ்டி தீர்ப்பையும் இணைத்துப் பார்க்க வேண்டும் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். கடல் சரக்குகள் மீதான ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரியை ரத்து செய்த குஜராத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், “இந்தியாவில் ஜனநாயகமும், கூட்டாட்சியும் ஒன்றை ஒன்று சார்ந்தே இருக்கின்றன. ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைக்கு மதிப்பு மட்டுமே உண்டு. ஜிஎஸ்டி கவுன்சில் அறிவுரைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்கலாம். ஆனால், இதைத்தான் நீங்கள் … Read more

கர்நாடகாவில் 10-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இருந்து பெரியார், நாராயண குரு பகுதிகள் நீக்கம்

பெங்களூரு: கர்நாடகாவில் பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் புதிய பாடப் புத்தக்கத்தில் இருந்து பெரியார், நாராயண குரு குறித்த பகுதிகள் நீக்கப்பட்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கர்நாடகாவில் பத்தாம் வகுப்பு மொழிப் பாடப் புத்தகத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் கேசவ் பலிராம் ஹெக்டேவின் உரையை சேர்ப்பது தொடர்பாக எதிர்ப்புகளும் விவாதங்களும் நடைபெற்று வருகின்றன. இந்த சர்ச்சை நீங்குவதற்குள், 10-ஆம் வகுப்பு சமூக அறிவியல் புதிய பாடப் புத்தக்கத்தில் பெரியார், நாராயண குரு குறித்த தகவல்கள் நீக்கப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. மாநில பாடநூல் … Read more

‘இயல்’ வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் ஆ.இரா.வேங்கடாசலபதி, சந்துருவுக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை: கனடா இலக்கியத் தோட்ட விருது பெறும் எழுத்தாளர் வேங்கடாசலபதி மற்றும் முன்னாள் நீதிபதி சந்துரு ஆகியோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி மற்றும் முன்னாள் நீதிபதி சந்துரு ஆகியோருக்கு கனடா இலக்கியத் தோட்டத்தின் ‘இயல்’- வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இவருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ஆய்வாளர், பேராசிரியர், பதிப்பாசிரியர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகத் திறனாளரும்; தமிழ் – ஆங்கிலம் இரண்டிலும் தனித்த எழுத்துநடையைக் கொண்டவருமான … Read more

‘‘மோசமான சாதி அரசியல் செய்யும் காங்கிரஸ்; 3 ஆண்டுகளை வீணாக்கி விட்டேன்’’- ஹர்த்திக் படேல் விரக்தி

அகமதாபாத்: குஜராத் காங்கிரஸ் கட்சியில் மிக மோசமான சாதி அரசியல் உள்ளது, மூன்றாண்டுகளை அந்த கட்சியில் வீணாக்கி விட்டேன் என அக்கட்சியில் இருந்து விலகிய ஹர்திக் படேல் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்தினரை ஓபிசி பிரிவில் சேர்க்கக் கூறி கடந்த 2012 ஆம் ஆண்டு `சர்தார் பட்டேல் குழு’ என்ற அமைப்பை தொடங்கி போராடியவர் ஹர்திக் படேல். அந்த அமைப்பின் மூலம் குறுகியகாலத்தில் பட்டேல் சமூக இளைஞர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். கடந்த 2015-ம் ஆண்டு ஓபிசி … Read more

கட்டிட திட்ட அனுமதி விண்ணப்பம் 30 நாட்களுக்கு மேலாக நிலுவையில் இருந்தால் புகார் அளிக்கலாம்: சென்னை மாநகராட்சி

சென்னை: கட்டிட திட்ட அனுமதி விண்ணப்பம் 30 நாட்களை கடந்து நிலுவையில் இருந்தால் புகார் அளிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பெறப்பட்ட கட்டிட திட்ட அனுமதிக்கு மாறாக கட்டப்படும் கட்டிடங்கள் மற்றும் திட்ட அனுமதி பெறாமால் கட்டப்படும் கட்டிடங்களின் மீது நடவடிக்கை எடுக்க தொடர்புடைய வார்டு உதவி பொறியாளர் அல்லது இளைநிலை பொறியாளர், பகுதி உதவி செயற்பொறியாளர், மண்டல செயற்பொறியாளர்கள் கள ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க அதிகாரம் … Read more

'அயோத்தியில் ராமர், மதுராவில் கிருஷ்ணர், காசியில் சிவன்.. ' – கியான்வாபி கேள்விக்கு கங்கனாவின் பதில்

அயோத்தியில் எங்கும் எதிலும் ராமர் நிறைந்திருக்கிறார். அதுபோலவே மதுராவில் கிருஷ்ணரும், காசியில் சிவனும் நிறைந்துள்ளனர் என்று கூறியுள்ளார் நடிகை கங்கனா ரணாவத். பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தின் கருத்துகளால் ட்விட்டர் குலுங்கிய நிலையில் அவருக்கு அங்கே தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அவ்வப்போது இன்ஸ்டாகிராமிலும், இல்லையேல் செய்திப் பேட்டியிலும் தனது கருத்துகளைத் தெரிவித்து வாதத்தைத் தொடங்கிவைப்பார் கங்கனா ரணாவத். அப்படித்தான் அண்மையில் காசி விசுவநாதர் கோயிலுக்குச் சென்ற அவரிடம் கியான்வாபி மசூதி காசி கோயிலை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக தொடரப்பட்ட … Read more

பேராசிரியர் சலபதி, கே.சந்துரு உள்ளிட்ட 4 பேருக்கு ‘இயல்’ விருதுகள் அறிவிப்பு!

இலங்கை, தமிழ்நாடு மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 4 லட்சம் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடு கனடா. அங்கே, கடந்த 21 ஆண்டுகளுக்கும் மேலாகத் திறம்பட இயங்கிவருகிறது கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பு. கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், விமர்சகர்கள், கொடையாளர்கள் ஆகியோரின் ஆதரவுடன் ஓர் அறக்கட்டளையாக கடந்த 2001-ஆம் ஆண்டு, கனடாவின் தலைநகரானா டொராண்டோவில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் பொதுவான நோக்கம், உலகமெங்கும் பரந்திருக்கும் தமிழை வளர்ப்பதாகும். தமிழ், ஆங்கில நூல்களின் மொழிபெயர்ப்பு, அரிய … Read more

தி.மலை கிரிவலப்பாதை அருகே கருணாநிதி சிலை அமைக்க இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: திருவண்ணாமலை கிரிவலப்பாதை அருகே மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் சிலை அமைக்கும் பணிகளுக்கு இடைக்காதத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணமலையில் கிரிவலப்பாதையையும், மாநில நெடுஞ்சாலையையும் இணைக்கும் இடத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை அமைப்பதை எதிர்த்து, திருவண்ணாமலையை சேர்ந்த ஜி.கார்த்திக் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், “வேங்கைக்கால் பகுதியில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான 92.5 அடி நிலத்தை வாங்கி, அருகில் உள்ள … Read more

ஹைதராபாத்: உளவுத் துறை துணை இயக்குநர் தவறி விழுந்து மரணம்

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உளவுத் துறை அமைப்பின் துணை இயக்குநர், நிகழ்ச்சி ஒன்றின் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தபோது, ஆடிட்டோரியத்தின் மேடையில் இருந்து தற்செயலாக தவறி விழுந்து உயிரிழந்தார். குமார் அம்ரேஷ் (51) பாட்னாவை சேர்ந்தவர். இவர் ஹைதராபாத் உளவுத் துறை அமைப்பில் துணை இயக்குநராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், புதன்கிழமையன்று ஷில்பக்கலா வேதிகா அரங்கத்தில், வட அமெரிக்க தெலுங்கு சங்கம் சார்ப்பில் நடக்கும் நிகழ்ச்சிக்காக (மே 20-ல் நடக்கும் இந்நிகழ்வில் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய … Read more

புதுச்சேரியில் ஆயுள் தண்டனைக் காலம் முடிந்த கைதிகளை விடுவிக்க நடவடிக்கை தேவை: அதிமுக

புதுச்சேரி: “பேரறிவாளன் தீர்ப்பை புதுவை அரசு முன்னுதாரணமாக எடுக்க வேண்டும். புதுவை மாநிலத்தில் ஆயுள் தண்டனை காலம் முடிந்தும் சிறையில் உள்ள கைதிகளை விடுவிக்க அரசும், முதல்வரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார். புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியது: “ராஜீவ் கொலை குற்றவாளிகளை மாநில அரசு விடுதலை செய்யும் என 19.02.2014-ல் அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார். அவரைத் தொடர்ந்து தமிழகத்தில் … Read more