பேரறிவாளன் விடுதலை: வெள்ளைத் துணியால் வாயைக் கட்டிக் கொண்டு தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

சென்னை: பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் வெள்ளைத் துணியால் வாயைக் கட்டிக் கொண்டு காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்யக் கோரிய வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வரவேற்றுள்ளனர். பேரறிவாளன் விடுதலை தொடர்பான தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்திருந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, … Read more

கருக்கலைப்புக்கு பெற்றோர் அனுமதி தேவையில்லை; மாதவிடாய் விடுமுறை: சட்ட மசோதாவுக்கு ஸ்பெயின் ஒப்புதல்

16 வயது முதல் 17 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் கருக்கலைப்பு செய்துகொள்ள பெற்றோரின் அனுமதியைப் பெறத் தேவையில்லை என்ற சட்ட மசோதாவுக்கு ஸ்பெயின் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதுபோலவே, மகளிர்க்கு மாதந்தோறும் மாதவிடாய் விடுமுறை வழங்க வழிவகை செய்துள்ளது. தங்களின் உடல் சார்ந்த முடிவுகளை பெண்கள் சுயமாக எடுப்பதை உறுதி செய்ய இந்த திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதாவின்படி 16 வயது முதல் 17 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் தாங்கள் கருவை சுமக்க விரும்பவில்லை … Read more

கோவை மாவட்டத்திற்கு தனியாக மாஸ்டர் பிளான் தயார் செய்யப்படும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: கோவை மக்கள் தொடாத துறையும் இல்லை, அவர்கள் தொட்டு துலங்காத துறையும் இல்லை. கோவை மாவட்டத்திற்கு தனியாக மாஸ்டர் பிளான் தயார் செய்யப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாள் பயணமாக கோவை மற்றும் நீலகரி மாவட்டங்களுக்கு சென்றுள்ளார். இதன்படி இன்று காலை கோவை வஉசி மைதானத்தில் ‘பொருநை’ அகழ்வாராய்ச்சி கண்காட்சி மற்றும் ஓராண்டு சாதனை விளக்க ஓவியக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து தனியார் விடுதியில் தொழில்துறையினருடன் … Read more

கியான்வாபி சர்ச்சை | அணுஉலையுடன் சிவலிங்கத்தை ஒப்பிட்ட மஹூவா மொய்த்ரா: குவியும் கண்டனங்கள்

கியான்வாபி மசூதி சர்ச்சையில் கருத்து தெரிவித்துள்ள திரிணமூல் எம்.பி. வாட்ஸ் அப்பில் வலம் வந்த மீமை எடுத்து பாபா அணு உலையையும், சிவலிங்கத்தையும் ஒப்பிட்டு ட்வீட் செய்தது கடும் கண்டனங்களை பெற்றுள்ளது. வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டியுள்ள கியான்வாபி மசூதியின் வெளிப்புறச் சுவரில் சிங்காரக் கவுரி அம்மன் சிலை உள்ளது. அம்மனை தரிசிக்கும் வழக்கில், நீதிமன்றக் களஆய்வு நடைபெற்றது. இதில், தொழுகைக்கு முன் கை, கால்களை கழுவும் ஒசுகானாவின் நடுவே சிவலிங்கம் இருப்பதாக புகார் செய்யப்பட்டது. … Read more

பருத்தி, நூல் விலையைக் கட்டுப்படுத்துக: மத்திய அமைச்சரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: பருத்தி மற்றும் நூல் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய ஜவுளித் துறை அமைச்சரை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வலியிறுத்தினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (19.5.2022) மத்திய ஜவுளி, வர்த்தகம் மற்றும் தொழில் துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பருத்தி மற்றும் … Read more

கியான்வாபி மசூதி சர்ச்சை | வீடியோ ஆய்வறிக்கை உ.பி. நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு

கியான்வாபி மசூதியில் மேற்கொள்ளப்பட்ட வீடியோ பதிவு தொடர்பான அறிக்கையை மூடி முத்திரையிட்ட கவரில் வைத்து உத்தரப் பிரதேச நீதிமன்றத்தில் ஆய்வுக் குழு சமர்ப்பித்தது. இந்த அறிக்கை 10 முதல் 12 பக்கங்கள் கொண்டது எனத் தெரியவந்துள்ளது. வழக்கு பின்னணி: உத்தரப் பிரதேசம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி கியான்வாபி மசூதி உள்ளது. இந்த மசூதி, கோயிலை இடித்து முகலாய பேரரசர் அவுரங்கசீப்பால் கட்டப்பட்டதாக புகார் உள்ளது. மேலும், மசூதி சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை … Read more

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஓ.பி.ரவீந்திரநாத் திடீர் சந்திப்பு

சென்னை: தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-ஸின் மகனும், அதிமுக எம்பி.யுமான ஓ.பி.ரவீந்திரநாத், நேற்று சந்தித்தார். அப்போது பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யுமாறு மனு அளித்தார். மத்திய அரசின் பங்களிப்புடன் 15 துறைகள் மூலம் தமிழகத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம், ஜல்ஜீவன் திட்டம் உள்ளிட்ட 41 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டப் பணிகளை கண்காணிக்க, மாநில அளவில் வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. … Read more

டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் ராஜினாமா

புதுடெல்லி: புதுடெல்லியின் துணைநிலை ஆளுநராக கடந்த 2016-ம் ஆண்டில், அனில் பைஜால் பதவி ஏற்றார். இவர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் மத்திய உள்துறை செயலாளராகவும் இவர் பணியாற்றினார். இதர அமைச்சகங்களிலும், இவர் முக்கிய பொறுப்பில் இருந்தார். பல விஷயங்களில், டெல்லி துணைநிலை ஆளுநருக்கும், முதல்வர் கேஜ்ரிவாலுக்கும் இடையே அதிகார மோதல் இருந்துவந்தது. அரசியலமைப்பு சட்டப்படி தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் துணை நிலை ஆளுநருக்கு இல்லை, உண்மையான அதிகாரம் மக்களால் … Read more

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் சென்னையில் கைது: டெல்லிக்கு அழைத்துச் சென்றது சிபிஐ

சென்னை: சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கிய வழக்கில், காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரை சிபிஐ அதிகாரிகள் நேற்று சென்னையில் கைது செய்தனர். 2009-2014 காலகட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து, 263 சீனர்களுக்கு தடையில்லா விசா வழங்கப்பட்டதாகவும், இதன்மூலம் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்துக்கு ரூ.50 லட்சம் கைமாறியதாகவும் கார்த்தி சிதம்பரம் மற்றும் ஆடிட்டர் பாஸ்கர ராமன் மீது சிபிஐ வழக்குத் தொடர்ந்தது. இந்நிலையில், ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு தொடர்புடைய, 10 இடங்களில் உள்ள … Read more

உ.பி. கியான்வாபி ஒசுகானாவில் சிவலிங்கம் – மசூதி நிர்வாகத்தினர் பதில் அளிக்க 2 நாள் கால அவகாசம்

புதுடெல்லி: சிங்கார கவுரி அம்மன் தரிசன வழக்கின் விசாரணை நேற்றும் வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில், ஒசுகானாவில் சிவலிங்கம் உள்ளது என்ற இந்துக்களின் மனுவுக்கு பதிலளிக்க மசூதி நிர்வாகத்தினருக்கு 2 நாள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி கியான்வாபி மசூதி உள்ளது. இந்த மசூதி, கோயிலை இடித்து முகலாய பேரரசர் அவுரங்கசீப்பால் கட்டப்பட்டதாக புகார் உள்ளது. மேலும், மசூதி சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை தினசரி … Read more