குஜராத்தில் உப்பு தொழிற்சாலை சுவர் இடிந்து விழுந்து 12 பேர் உயிரிழப்பு
அகமதாபாத்: குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டம் ஹல்வாட் தொழில்துறை மண்டலத்தில் சாகர் உப்பு தொழிற்சாலை அமைந்துள்ளது. அங்கு சாக்கு மூட்டையில் உப்பு நிரப்பும் பணி நேற்று நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த சுவர் திடீரென இடிந்து விழுந்தது. தகவல் அறிந்து தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். அதற்குள் இடிபாடுகளில் சிக்கி 12 பேர் உயிரிழந்திருப்பதாக மோர்பி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மீட்புப் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இதனிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 … Read more