மழைக் காலத்துக்கு தேவையான நிலக்கரி இருப்பு: மாநில அரசுகளுக்கு மத்திய எரிசக்தித்துறை அமைச்சர் உத்தரவு

புதுடெல்லி: மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத் தக்க எரிசக்தித்துறை அமைச்சர் ஆர்.கே.சிங், மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், மழைக்காலத்தில் மின்னுற்பத்தி செய்வதற்கு தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்ய உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மாநில முதலமைச்சர்களுக்கு வலியுறுத்தியுள்ளார். ஹரியானா, உத்தரபிரதேசம், கர்நாடகா மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் நிலக்கரி இறக்குமதி செய்வதற்கான டெண்டர் நடைமுறை இன்னும் முடிக்கப்படாமல் இருப்பது தொடர்பாக கடிதத்தில் வருத்தமும் அவர் தெரிவித்துளளார். முன்னதாக மத்திய மின்துறை அமைச்சகம், மாநில … Read more

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு:  சார்பு ஆய்வாளருக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு

மதுரை : சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிறையில் உள்ள சார்பு ஆய்வாளர் ரகு கணேஷின் ஜாமீன் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ். இவர்கள் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தனர். இவர்கள் இருவரையும் கடந்த 2020 ஜூன் 19ம் தேதி கரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டு நேரம் தாண்டி கடையை திறந்து வைத்திருந்ததாக விசாரணைக்காக போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் … Read more

எவ்வித காரணமும்  கூறாமல்  கைது செய்யப்பட்டுள்ளேன்: எச்.ராஜா

சென்னை: எவ்வித காரணமும் கூறாமல் தான் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். எச்.ராஜா இன்று பழனியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்று கொண்டிருந்தபோது, திண்டுக்கல் எஸ்.பியான் தான் கைது செய்து செய்யப்பட்டதாக அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தற்போது நான் பழனியிலுள்ள இடும்பன் குளத்திற்கு ஆரத்தி வைபவத்தில் கலந்து கொள்ள வரும் வழியில் திண்டுக்கல் எஸ் பி அவர்களால் எவ்வித காரணமும் கூறாமல் கைது செய்யப்பட்டுள்ளேன். (சத்திரப்பட்டி அருகில்) அருகாமையில் … Read more

நூல் விலை உயர்வை குறைக்க வேண்டும் – மத்திய நிதியமைச்சரிடம் நேரில் வலியுறுத்திய தமிழக எம்.பிக்கள்

புதுடெல்லி: பருத்தி நூல் விலையை குறைக்க வலியுறுத்தி கனிமொழி தலைமையில் எம்பிக்கள் குழு இன்று மத்திய நிதியமைச்சரை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி உட்பட தமிழக எம்.பிக்கள் நால்வர் உடன் இருந்தனர். சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, திமுக மக்களவை அவைக்குழு துணைத் தலைவரான கனிமொழி: கரூரிலும், திருப்பூரிலும் பின்னலாடை தொழில் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஜவுளித் தொழில் என்பது விவசாயத்திற்கு அடுத்து அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் முக்கியமான தொழிலாகும். இதில் … Read more

இதயத்தில் கத்திக் குத்து காயத்தால் உயிருக்குப் போராடிய இளைஞரை காப்பாற்றிய கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள்

கோவை: இதயத்தில் கத்திக் குத்து காயத்தால் உயிருக்குப் போராடிய இளைஞருக்கு இரண்டு மணி நேரம் அவசர அறுவை சிகிச்சை மேற்கொண்டு கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். கோவை செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் மணிகண்டன் (26). அடிதடியில் கத்தி குத்துபட்டு நெஞ்சில் காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் 25-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்ததில் இதயத்தில் காயங்களும், இதயத்தை சுற்றி ரத்தம் உறைந்த நிலையில் கட்டியாக … Read more

அமெரிக்கா | பால் பவுடர் தட்டுப்பாடு; தனது தாய்ப்பாலை விற்பனை செய்ய முன்வந்துள்ள அன்னை அலிசா

வாஷிங்டன்: அமெரிக்க நாட்டில் 118 லிட்டர் தாய்ப்பாலை பச்சிளம் குழந்தைகளுக்கு கிடைக்கும் வகையில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளார் அலிசா சிட்டி என்ற பெண். அந்த நாட்டில் பால் பவுடருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க நாட்டில் குழந்தைகளுக்கு உணவாக கொடுக்கப்பட்டு வரும் பால் பவுடருக்கு (பேபி பார்முலா) கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் அந்த நாட்டில் பெற்றோர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். இதில் எளிய குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்கு உணவு கொடுக்க முடியாமல் தவித்து … Read more

நெல்லை கல்குவாரி விபத்தில் மேலும் ஒருவரின் உடல் மீட்பு; உரிமையாளரின் ரூ.1 கோடி வங்கிக் கணக்கு முடக்கம்

நெல்லை: திருநெல்வேலி அருகே அடைமிதிப்பான்குளத்திலுள்ள வெங்கடேஸ்வரா கல்குவாரி உரிமையாளர் சேம்பர் செல்வராஜின் ரூ.1 கோடி வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இந்த கல்குவாரி விபத்து தொடர்பாக விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள நாங்குநேரி ஏ.எஸ்.பி ராஜாசதுர்வேதி இந்நடவடிக்கையை எடுத்துள்ளார். இதனிடையே, கல்குவாரி விபத்தில் மேலும் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி அருகே அடைமிதிப்பான்குளம் பகுதியிலுள்ள கல்குவாரியில் பாறைகள் சரிவு மற்றும் நீர் கசிவு காரணமாக மீட்பு பணிகள் 4-வது நாளாக மந்தமாக நடைபெற்றது. வெடி மருந்துகள் மூலம் பாறைகளை தகர்க்கும் … Read more

டெல்லி ஜாமா மசூதியின் அடியில் இந்துக் கடவுள்களின் சிலைகள் உள்ளன: மீட்டெடுக்கக் கோரி பிரதமருக்கு இந்து மகா சபா கடிதம்

புதுடெல்லி: டெல்லியின் ஜாமா மசூதியின் அடியில் இந்துக் கடவுள்களின் சிலைகள் இருப்பதாக இந்து மகா சபா புகார் கூறியுள்ளது. இவற்றை மீட்டெடுக்கும்படி வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு அச்சபையின் தலைவர் சுவாமி சக்ரபாணி கடிதம் எழுதியுள்ளார். டெல்லியை ஆண்ட முகலாயப் பேரரசர் ஷாஜஹானால் 1656-இல் கட்டப்பட்டது ஜாமா மசூதி. பழம்பெருமை வாய்ந்த இது, நாட்டின் பெரிய மசூதிகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. இந்த மசூதியும் தற்போது இந்துத்துவாவினரின் குறியில் சிக்கத் தொடங்கி உள்ளது. இதற்கு முன்பாக கியான்வாபி, மதுரா … Read more

பேரறிவாளன் விடுதலை | “அன்றைய அதிமுக அரசையும், இன்றைய திமுக அரசையும் மனமாரப் பாராட்டுகிறோம்” – திருமாவளவன்

சென்னை: “மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவரே என்பதை பேரறிவாளனின் விடுதலை குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு காட்டியுள்ளது” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனதாரப் பாராட்டி வரவேற்கிறோம். இது மனித உரிமைக்குக் கிடைத்த வெற்றி மட்டுமல்ல; மாநில உரிமைக்குக் கிடைத்த வெற்றியும் ஆகும். பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு … Read more

“குதுப்மினார் கோபுரம் கட்டியது குத்புதீன் அல்ல; விக்ரமாதித்யாவின் சூரியக் கோபுரம் அது” – ஓய்வுபெற்ற அதிகாரி சர்ச்சை தகவல்

புதுடெல்லி: டெல்லியிலுள்ள குதுப்மினார் கோபுரம், குத்புதீன் ஐபக் மன்னர் கட்டியது இல்லை. சூரியதிசை அறிய ராஜா விக்ரமாதித்யா கட்டிய சூரியக் கோபுரம் அது எனச் சர்ச்சைக்குரியத் தகவல் வெளியாகி உள்ளது. இதை இந்திய தொல்லியல் துறையின் (ஏஎஸ்ஐ) ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் முஸ்லிம் மன்னர்கள் கட்டிய மசூதிகள் மற்றும் புராதனச் சின்னங்கள் மீது இந்துத்துவா அமைப்புகளால் வழக்குகள் தொடுக்கப்படுகின்றன. இதில், உத்தரப் பிரதேசம் வாரணாசியின் கியான்வாபி மசூதி, மதுராவின் ஷாயி ஈத்கா மசூதி, ஆக்ராவின் … Read more