தமிழர்களும் சிங்களர்களும் இணைந்து அஞ்சலி: இலங்கையில் கவனம் ஈர்த்த முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வுகள்
ராமேசுவரம்: முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் 13-வது ஆண்டு நினைவையொட்டி, உயிரிழந்தவர்களுக்கு இலங்கையில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் இன்று (புதன்கிழமை) பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். இலங்கையில் 2009-ஆம் ஆண்டு மே மாதம் 18-ஆம் தேதி முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் மீது அந்நாட்டு ராணுவம் நடத்திய தாக்குதலில் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். இலங்கையின் வடக்கு மாகாண சபையில் மே 18-ஆம் தேதியினை இன அழிப்பு நாளாக பிரகடனம் செய்யப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்று வருகிறது. Source link