மாநிலங்களவை எம்.பி.யாக ப.சிதம்பரம் தேர்வாக வாய்ப்பு: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்

சென்னை: மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு ப.சிதம்பரம் போட்டியிட அதிக வாய்ப்புஉள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவ னில்தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் அலுவலகத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் தலைவர் சின்னதம்பி, சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மத்திய அரசுக்கு கண்டனம் பின்னர், செய்தியாளர்களிடம் கே.எஸ்.அழகிரி கூறியதாவது: … Read more

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 2 போர்க் கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத் சிங்

மும்பை: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்திய கடற்படையை வலுப்படுத்த பி-15பி மற்றும் பி17ஏ வகையை சேர்ந்த போர்க்கப்பல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதில் பி-15பி வகையை சேர்ந்த ஐஎன்எஸ் சூரத், பி17ஏ வகையை சேர்ந்த ஐஎன்எஸ் உதயகிரி ஆகியவை மும்பை எம்டிஎல் கப்பல் கட்டுமான தளத்தில் வடிமைக்கப்பட்டு நேற்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. மும்பையில் நடைபெற்ற விழாவில் இரு போர்க்கப்பல்களையும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் … Read more

திட்டமிட்டே வீழ்த்தப்பட்டதா சீன போயிங் விமானம்? – கருப்புப் பெட்டி ஆய்வில் எழுந்த சந்தேகங்கள்

பீஜிங்: கடந்த மார்ச் மாதம் விபத்துக்குள்ளான சீன ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானத்தின் கருப்புப் பெட்டி டேட்டாவின் படி விமானம் திட்டமிட்டே வீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 ரக விமானம், அந்நாட்டின் குன்மிங் நகரில் இருந்து வூஸுநகருக்கு கடந்த மார்ச் 21-ம் தேதி மதியம் புறப்பட்ட நிலையில், குவாங்சூ மாகாணத்தில் உள்ள மலைப்பகுதிக்கு மேல் 31 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்து … Read more

பிளஸ் 2 கணித பாடத்தேர்வு கடினமாக இருந்ததாக மாணவர், ஆசிரியர் கருத்து

சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வில் நேற்று நடந்த கணித பாடத்தேர்வுகள் கடினமாக இருந்ததாக ஆசிரியர்கள், மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: கணித வினாத்தாளில் 60 சதவீதத்துக்கு மேலானவை நுண்ணறிவு திறன்சார்ந்த கடினகேள்விகள். நன்றாக படிக்கும் மாணவர்கள்கூட அதற்கு பதில் அளிக்க சிரமமாக இருந்தது. ஒரு மதிப்பெண் வினாக்கள் 8, இரண்டு மதிப்பெண் கேள்விகள் 7 கடினமாக இருந்தன. 3 மற்றும் 5 மதிப்பெண் வினாவில்கூட சில மட்டுமே எளிதாக இருந்தன. திருப்புதல் தேர்வுக்கு நேர்மாறாக … Read more

குதுப்மினார் வளாகத்தில் மீண்டும் 27 கோயில்கள்: 24-ல் விசாரணை

புதுடெல்லி: குதுப்மினார் வளாகத்தில் மீண்டும் இந்து மற்றும் ஜெயின் கோயில்களை அமைக்க உத்தரவிடக் கோரும் மனு மீதான விசாரணையை வரும் 24-ம் தேதிக்கு டெல்லி சாகேத் நீதிமன்றம் ஒத்திவைத்தது. டெல்லியில் குதுப்மினார் வளாகத்தில் 27 இந்து மற்றும் ஜெயின் கோயில்கள் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் குவ்வத்-உல்-இஸ்லாம் மசூதி கட்டப்பட்டதாகவும் இது தொடர்பாக தொல்லியல் துறை கூறியிருப்பதை ஆதாரமாகக் கொண்டும் டெல்லி சிவில் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. குதுப்மினார் வளாகத்தில் இடிக்கப்பட்ட 27 இந்து, … Read more

சினிமாவின் மவுனம் கலைக்க இன்னொரு சாப்ளின் பிறந்துவர வேண்டுமா? – கேன்ஸ் விழாவில் ஜெலன்ஸ்கியின் கவன ஈர்ப்புப் பேச்சு

“உக்ரைன் போர் குறித்து சினிமா துறை மவுனம் காப்பது ஏன். 1940ல் ஹிட்லரை பகடி செய்ய ஒரு சார்லி சாப்ளின் இருந்தார். இப்போதைய ஹிட்லரை கேள்வி கேட்க இன்னொரு சாப்ளின் பிறந்துவர வேண்டுமா” என்று ஜெலன்ஸ்கி வினவினார். கேன்ஸ் திரைப்பட விழாவின் 75 வது ஆண்டு விழாவில் உக்ரைன் அதிபர் வொலொடிமிர் ஜெலன்ஸ்கியின் பதிவு செய்யப்பட்ட பேச்சு ஒளிபரப்பானது. “மானிடர்களின் வெறுப்பு கடந்து போகும், சர்வாதிகாரிகள் மாண்டு போவார்கள். மக்களிடமிருந்து எடுக்கப்பட்ட அதிகாரம் மக்களிடமே வந்து சேரும்..” … Read more

போலி மருத்துவரால் சிறுமி உயிரிழப்பு; குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்: பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: போலி மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுஉயிரிழந்த குழந்தையின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: கடலூர் மாவட்டம் பூலாம்பாடி காலனி கிராமத்தில் வசித்து வரும் கார்த்திக் தனது 5 வயது மகள் லட்சிதாவை அங்குள்ள தனியார்கிளினிக்குக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு லட்சிதாவுக்கு ஒரு மருத்துவர் சிகிச்சை அளித்த சிறிது நேரத்தில் சிறுமி உயிரிழந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அவர் ஒரு போலி மருத்துவர் … Read more

அசாம், அருணாச்சலில் வெள்ளம் நிலச்சரிவால் 11 பேர் உயிரிழப்பு: சாலை, ரயில் போக்குவரத்து பாதிப்பு

குவாஹாட்டி: வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய 2 மாநிலங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேரை காணவில்லை. அருணாச்சலப் பிரதேச தலைநகர், இட்டா நகரில் ஏற்பட்ட நிலச்சரிவால் கடந்த 15-ம் தேதி இரவு முதல் 5 பேர் உயிரிழந்தனர், பலர் காயம் அடைந்தனர். அங்கு மீட்பு பணியில், தேசிய பேரிடர் … Read more

மனிதாபிமான அடிப்படையில் தமிழகம் உதவி: நிவாரண பொருட்கள் கப்பலில் இன்று இலங்கை செல்கிறது

சென்னை: பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர், இதர உணவுப் பொருட்கள், மருந்துகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் கப்பல் மூலம் இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. சென்னை துறைமுகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கப்பலை கொடியசைத்து வழியனுப்பி வைக்கிறார். பொருளாதார நெருக்கடியால் இலங்கை மக்களின் வாழ்க்கை என்பது மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. இந்நிலையில் இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக ரூ.123 கோடி மதிப்பிலான உணவு … Read more

6ஜி தொலைத்தொடர்பு சேவை 2030-க்குள் அமல்: டிராய் வெள்ளி விழாவில் பிரதமர் மோடி தகவல்

புதுடெல்லி: வரும் 2030-க்குள் 6ஜி தொலைத்தொடர்பு சேவையை அமல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக டிராய் வெள்ளி விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) வெள்ளி விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்ட பின்னர் பிரதமர் மோடி காணொலி மூலம் பேசியதாவது: இந்தியாவில் 5ஜி சேவை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 5ஜி சாதனங்களை சோதனை செய்வதற்கான கட்ட மைப்பு இன்று (நேற்று) முதல் … Read more