கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து 1000 கன அடியாக அதிகரிப்பு: 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து இன்று (மே 17) காலை 1000 கன அடியாக அதிகரித்தது. இதனால் கிருஷ்ணகிரி உட்பட 5 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும், கடந்த 12 நாட்களுக்கு மேலாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழை … Read more

அசாம், அருணாச்சலை புரட்டிப்போட்ட கனமழை | வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 11 பேர் பலி; பலர் மாயம்

அசாம், அருணாச்சலப் பிரதேச மாநிலங்களை கடந்த சில நாட்களாக கனமழை புரட்டிப்போடும் சூழலில் அங்கு இதுவரை 11 பேர் பலியாகியுள்ளனர். 8 பேரது நிலைமை என்னவானதென்று தெரியவில்லை. அருணாச்சலப் பிரதேசத்தில் மட்டும் 5 பேர் உயிரிழந்ததாகவும் தலைநகர் இடாநகரில் நடந்த இரண்டு நிலச்சரிவுகளே இதற்குக் காரணம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மே.15 ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து அருணாச்சல் தலைநகர் இடாநகரில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டன. இரண்டு பெண்கள் உள்பட … Read more

நெல்லை குவாரி விபத்தில் உயிரிழந்த இருவர் குடும்பத்துக்கு தலா ரூ.15 லட்சம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: நெல்லை குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், தருவை கிராம அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரியில் கடந்த 14.5.2022 அன்று திடீரென மிகப் பெரிய பாறைகள் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் சிக்கிய இருவர் மீட்கப்பட்டு தற்போது சிகிச்சையில் உள்ளனர். விபத்து நடந்த இடத்தில் மாவட்ட நிர்வாகம், காவல்துறை, … Read more

'புதிய பெயர்கள் வேண்டாம்; எல்லாமே பாக்., பயங்கரவாத குழுக்கள் தான்' – காஷ்மீர் காவல்துறைக்கு அமித் ஷா அறிவுறுத்தல்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவோர் அண்மைக்காலமாக புதிய புதிய அமைப்புகளின் பெயர்களை தெரிவித்து வரும் சூழலில் அதை காவல்துறையும் பின்பற்ற வேண்டாம் அவை அனைத்துமே பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளின் கிளைகளே என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். காஷ்மீரில் வன்முறை நிலவுகிறது என்ற தோற்றத்தை ஏற்படுத்துவும், உள்ளூரில் நிகழ்த்தப்படும் சதிச் செயல்களுக்கு உள்நாட்டு அமைப்புகளே காரணம் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தவுமே தீவிரவாத குழுக்களுக்கு புதிய பெயர்களை பாகிஸ்தான் உருவாக்கிக் கொடுத்துள்ளது என்று அமித் … Read more

இலங்கை மக்களுக்கு அடுத்த இரு மாதங்கள் மிகவும் கடினமானதாக இருக்கும்: ரணில் விக்ரமசிங்கே பகிரங்க பதிவு

கொழும்பு: “இலங்கை மக்களுக்கு அடுத்து இரு மாதங்கள் மிகவும் கடினமானதாக இருக்கப் போகிறது” என்று அந்நாட்டின் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுள்ளார். இந்த நிலையில், இலங்கையின் உண்மை நிலவரம் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அந்நாட்டு மக்களுக்கு பதிலளித்துள்ளார். இதுகுறித்து ரணில் விக்ராசிங்கே தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடும்போது, “அடுத்து வரும் இரு மாதங்கள் இலங்கை மக்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும். இதுகுறித்து பொது … Read more

சிபிஐ காண்பித்த எஃப்.ஐ.ஆரில் எனது பெயர் இல்லை: ப.சிதம்பரம் விளக்கம்

சென்னை: சிபிஐ சோதனை குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சிபிஐ காண்பித்த எஃப்ஐஆரில் தனது பெயர் இல்லை என்று கூறியுள்ளார். முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட 9 இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடந்து வருகிறது. கார்த்தி சிதம்பரம் தற்போது டெல்லியில் இருப்பதாகத் தெரிகிறது. … Read more

திரிணமூல் எம்.பி. அபிஷேக் பானர்ஜியிடம் விசாரணை நடத்தலாம்: அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் பச்சைக்கொடி

புதுடெல்லி: நிலக்கரி ஊழல் வழக்கில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி மற்றும் அவரது மனைவி ருச்சிராவிடம் விசாரணை நடத்திக் கொள்ள அமலாக்கப் பிரிவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது. விசாரணை தொடர்பாக சம்பந்தப்பட்ட இருவருக்கும் 24 மணி நேரத்துக்கு முன்னதாக நோட்டீஸ் கொடுத்துவிட்டு விசாரணையை மேற்கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் கொல்கத்தாவிலேயே விசாரணையை நடத்தலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதேபோல் விசாரணைக்கு முன்னதாகவே … Read more

நெல்லை கல்குவாரியில் 3-வது நாளாக தொடரும் மீட்புப் பணிகள்: மேலும் ஒருவர் சடலமாக மீட்பு

நெல்லை: திருநெல்வேலி அருகே கல்குவாரியில் பாறைகள் நடுவே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. மீட்புப் பணிகள் தொடரும் நிலையில் நேற்றிரவு (திங்கள் இரவு) லாரி க்ளீனர் முருகன் என்பவர் சடலமாக மீட்கப்பட்டார். இந்நிலையில் இடிபாடுகளில் சிக்கியுள்ள காக்கைகுளம் செல்வக்குமார் மற்றும் ஊருடையான் குடியிருப்பு ராஜேந்திரன் ஆகிய எஞ்சிய இருவரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நடந்தது என்ன? திருநெல்வேலி அருகே அடைமிதிப்பான்குளம் பகுதியில் உள்ள கல்குவாரியில் 350 அடி ஆழத்தில் வெடித்து உடைக்கப்பட்ட … Read more

காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் 7 பேர் கைது

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பண்டிபோரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு பாதுகாப்புப் படையினர் நேற்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஒரு இடத்தில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளின் பதுங்குமிடம் இருப்பதை கண்டுபிடித்த பாதுகாப்புப் படையினர் அதை தகர்த்து அழித்தனர். அங்கிருந்து நான்கு இரு சக்கர வாகனங்கள் உட்பட ஆறு வாகனங்கள், 3 துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகளில் பயன்படுத்தக் கூடிய 25 தோட்டாக்கள், மூன்று கையெறி குண்டுகளை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர். மேலும், காஷ்மீரின் நதிஹால் பகுதியைச் சேர்ந்த … Read more

மோசமான வானிலை: சாலை மார்க்கமாக உதகைக்குச் சென்ற குடியரசு துணைத் தலைவர்

கோவை: கோவையிலிருந்து சாலை மார்க்கமாக குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உதகைக்கு புறப்பட்டுச் சென்றார். குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, அபுதாபியில் இருந்து மனைவியுடன் சிறப்பு விமானம் மூலம் கோவை விமான நிலையத்துக்கு நேற்று (மே 16-ம் தேதி) மதியம் வந்தார். கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் உதகைக்கு செல்ல அவர் திட்டமிட்டு இருந்தார். ஆனால், ஹெலிகாப்டரில் செல்வதற்கு வானிலை ஒத்துழைக்கவில்லை. மேலும், உதகையில் கனமழை பெய்து கொண்டிருந்ததால் சாலை வழிப் பயணமும் ரத்து செய்யப்பட்டது. … Read more