இந்தியா – நேபாளம் இடையே 6 ஒப்பந்தங்கள் – பிரதமர் மோடி, நேபாள பிரதமர் தியூபா முன்னிலையில் கையெழுத்து

லும்பினி: கலாச்சாரம், கல்வி உள்ளிட்ட துறைகளில் இந்தியா – நேபாள நாடுகள் இடையே நேற்று 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. புத்த பூர்ணிமாவை முன்னிட்டு பிரதமர் மோடி நேபாளத்தில் நேற்று ஒரு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நேற்று காலை டெல்லியில் இருந்து நேபாளம் வந்தடைந்த பிரதமர் மோடியை நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா வரவேற்றார். அதன் பின்னர் லும்பினியில் உள்ள மகா மாயாதேவி கோயிலில் பிரதமர் மோடி, நேபாள பிரதமர் தியூபா இருவரும் சிறப்பு வழிபாடு நடத்தினர். … Read more

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 17-ம் தேதி (இன்று) பெரும்பாலான இடங்களிலும், 18-ம் தேதி ஒருசில இடங்களிலும் மிதமான மழை பெய்யக் கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கரூர், திருச்சி, திருவண்ணாமலை, பெரம்பலூர் ஆகிய 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யக்கூடும். சென்னையில் … Read more

டெல்லியில் 120 டிகிரி வெயில்: கடும் வெப்பத்தால் பொதுமக்கள் அவதி

புதுடெல்லி: டெல்லி மற்றும் வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக வெயில் கடுமையாக கொளுத்தி வருகிறது. டெல்லியிலும் உத்தர பிரதேசத்திலும் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. டெல்லியில் உள்ள முன்கேஷ்பூர் பகுதியில் வெயில் 120.56 டிகிரி நஜாப்கார் பகுதியில் 120.38 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. இந்நிலையில், வெயிலால் தவித்த டெல்லி மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பஞ்சாப் மற்றும் ஹரியாணா பகுதியில் காணப்படும் வளி மண்டல மேலடுக்கு … Read more

காஞ்சி வரதராஜர் கோயில் வேத பாராயணம்: பழைய நிலையே தொடர உத்தரவு

சென்னை: காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலில் வேத பாராயணம் செய்வதில் அறநிலையத் துறை கடந்த மே 14-ல் உத்தரவு பிறப்பிக்கும் முன்பாக ஏற்கெனவே இருந்த பழைய நிலையே தொடர வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழாவின் போது வடகலைப் பிரிவினர் வேத பாராயணம் செய்ய அனுமதி மறுத்து அறநிலையத் துறை உதவி ஆணையர் கடந்த மே 14-ம் தேதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நாராயணன் என்பவர் … Read more

சிவலிங்கம் இருப்பதாக விஎச்பி தலைவர், உ.பி. துணை முதல்வர் தகவல் – வாரணாசி கியான்வாபி மசூதி ஒசுகானாவுக்கு சீல்

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி கியான்வாபி மசூதி உள்ளது. இதன் வளாக சுவரில் சிங்கார கவுரி அம்மன் சிலை உள்ளது. அம்மனுக்கு நடந்த அன்றாட பூசை, 1991-ம் ஆண்டுக்கு பிறகு ஆண்டுக்கு ஒரு முறை நடத்த வேண்டும் என்று மாற்றப்பட்டுள்ளது. இதை எதிர்த்து டெல்லியை சேர்ந்த 5 பெண்கள் வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி ரவிக்குமார் திவாகர் விசாரித்து மசூதி முழுவதும் … Read more

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தீவிரவாத எதிர்ப்பு மாநாடு தொடக்கம்

புதுடெல்லி: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சீனா, ரஷ்யா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ் பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. ஆப்கானிஸ்தான், பெலாரஸ், ஈரான், மங்கோலியா ஆகிய 4 நாடுகள் பார்வையாளர்களாக உள்ளன. இந்நிலையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு சார்பில் தீவிரவாத எதிர்ப்பு மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. மாநாடு 4 நாட்கள் நடைபெறுகிறது பாகிஸ்தானில் இருந்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி தலைமையில் 3 பேர் குழு பங்கேற்றுள்ளது. … Read more

தமிழகத்தில் 6 காலியிடங்களுக்கான மாநிலங்களவை தேர்தல் அட்டவணை வெளியீடு – மே 24-ல் வேட்புமனு தாக்கல் ஆரம்பம்

சென்னை: தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலுக்கான கால அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ நேற்று வெளியிட்டசெய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜுன் 29-ம் தேதி முடிவடைகிறது. இந்த இடங்களை நிரப்புவதற்காக இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் காலஅட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்தல் அறிவிக்கை மே 24-ம் தேதி வெளியிடப்பட்டு அன்று முதல் வேட்புமனு தாக்கல் ஆரம்பிக்கப்படும். வேட்புமனுக்களை தாக்கல் செய்ய கடைசி நாள் … Read more

நூல் விலை உயர்வை கண்டித்து பின்னலாடை நிறுவனங்கள் ஸ்டிரைக் – ஒரே நாளில் ரூ.300 கோடி வர்த்தகம் பாதிப்பு

திருப்பூர் / ஈரோடு / சேலம் / கரூர்: நூல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் பின்னலாடைத் தொழில் அமைப்புகள் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் பொது வேலைநிறுத்தப் போராட்டம் நேற்று தொடங்கியது. இதனால் நாளொன்றுக்கு சுமார் ரூ.300 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இன்றும் வேலை நிறுத்தம் தொடர்கிறது. பின்னலாடைத் தொழில்துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்றபடி நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயாரிப்பது வழக்கம். … Read more

பல்கலை.களுக்கு வேந்தரோ, துணைவேந்தரோ தேவைதானா? – ஒரு விரைவுப் பார்வை

தமிழ்நாடு சட்டமன்றத்தில் துணைவேந்தர்கள் நியமனம் குறித்துக் கொண்டுவரப்பட்டிருக்கும் சிறப்புச் சட்ட முன்வடிவு, தமிழ்நாட்டுக்கு இன்றைய சூழ்நிலையில் மிகவும் தேவையான ஒன்றாகும். இந்தச் சட்ட முன்வடிவு, மாநில அதிகாரங்களை உறுதிப்படுத்தவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கடமைகளை நிறைவேற்றவும் பெரிதும் பயன்படும். 50 ஆண்டுகளுக்கு முன்னால் சென்னை பல்கலைக்கழகமும், மதுரை பல்கலைக்கழகமும் மட்டுமே இருந்தன. ஆனால், தற்போது 10-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் வந்துவிட்டன. மாநில அரசின் கொள்கையாக மாவட்டத்திற்கு ஒரு பல்கலைக்கழகம் என மாநில அரசு தொடங்கும் நிலையில், ஆளுநர் … Read more

2 நாட்களில் மாநகராட்சி கூட்டம் – காத்திருக்கும் கவுன்சிலர்கள்: எப்படி செயல்படப் போகிறார் மதுரை மேயர்?

மதுரை: நாளை மறுநாள் மீண்டும் நடக்க உள்ள மதுரை மாநகராட்சி கூட்டத்தில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி பாராபட்சமில்லாமல் கவுன்சிலர்கள் தங்கள் வார்டு பிரச்சனைகளை பற்றி பேச இருப்பதால் விவாததிற்கும், பரபரப்பிற்கும் பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் நடந்த மாநகராட்சி பட்ஜெட் கூட்டம், விவாதமே இல்லாமல் அவசரம் அவசரமாக முடிந்த நிலையில் வார்டுகளில் நிலவும் பிரச்சனைகள் குறித்து கவுன்சிலர்கள் விவாதிக்க மீண்டும் நாளை மறுநாள் (18ம் தேதி) கூட்டம் நடக்கிறது. அதனால், அன்று அவை காரசாரமாக … Read more