'தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்' – அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்

சென்னை: தமிழ் எழுத்துகளுடன் ‘ஸ’ வையும் இணைத்துப் படம் போடும் போதே உங்களின் கூப்பிய கரங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் கூர்வாள் தன் உண்மை முகத்தைக் காட்டி விட்டது என்று அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி வாடிகனில் நடைபெற்றது. வாடிகன் நகரில் நடந்த இந்த நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. இது தொடர்பாக வீடியோவை தனது ட்விட்டரில் பக்கத்தில் பகிர்ந்த அமைச்சர் … Read more

‘பேருந்து கட்டண உயர்வு அட்டவணை’ குழப்பம் ஏன்? – தமிழக அரசு விளக்கம்

சென்னை: தமிழகத்தில் இயங்கும் அனைத்துப் பேருந்துகளுக்கும் கட்டணம் உயர்த்த அட்டவணை தயாராகிவிட்டது என்ற தவறான செய்தி பரப்பப்படுவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “அரசு பேருந்துகள் கட்டண உயர்வு குறித்து தொடர்ந்து வதந்திகள் உலவி வருகின்றன. கட்டண உயர்வு குறித்து அட்டவணை தயாராகி விட்டதாக இன்று செய்திகள் பரப்பப்படுகின்றன. அது குறித்து இன்று என்னிடம் கேள்வி கேட்டபோது, அவ்வாறு அட்டவணை தயாராகவில்லை என்று தெரிவித்து விட்டேன். இரு மாநிலங்களுக்கிடையே … Read more

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சூரத், உதயகிரி போர்க்கப்பல்கள்: மும்பையில் நாளை அறிமுகம்

புதுடெல்லி: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 15பி வகையைச் சேர்ந்த ‘சூரத்’ என்ற போர்க்கப்பலும், 17ஏ வகையைச் சேர்ந்த ‘உதயகிரி’ என்ற போர்க்கப்பலும் செவ்வாய்கிழமை (நாளை) அறிமுகம் செய்யப்படுகிறது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட தகவல்: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சூரத், உதயகிரி போர்க் கப்பல்கள் மே 17-ம் தேதி மும்பையின் மாஸ்காவோன் கப்பல்துறை நிறுவனத்தில் ஒரே நேரத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார். சூரத் … Read more

காலநிலை மாற்றம் | 2030-க்குள் 9 கோடி இந்தியர்கள் பட்டினியால் வாடும் அபாயம்: ஓர் ஆய்வும் எச்சரிக்கையும்

காலநிலை மாற்றம் காரணமாக 2030-ஆம் ஆண்டுக்குள் சுமார் 9 கோடி இந்தியர்கள் பட்டினியால் பாதிக்கப்படுவார்கள் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது. இது தொடர்பான ஆய்வை உலகளாவிய உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், “பருவநிலை மாற்றத்தால் 2030-ஆம் ஆண்டுக்குள் ஒன்பது கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் பட்டினியால் வாடுவார்கள். இந்தியாவில் தானியங்கள், இறைச்சிகள், பழங்கள், காய்கறிகள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள், வேர்கள் மற்றும் கிழங்குகளின் உணவு உற்பத்தி குறியீடு காலநிலை மாற்றம் காரணமாக 1.627-ல் இருந்து … Read more

பற்களில் பாக்டீரியாவை அழிக்க நானோ பாட்கள்: இந்திய ஆராய்ச்சியாளர்களின் முன்முயற்சி

பெங்களூரு: பற்களில் உள்ள பாக்டீரியாவைக் கொல்ல நானோ பாட்களை (Nano Bot) பல் சிகிச்சைக்கு பயன்படுத்தும் முயற்சியை ஆய்வின் மூலம் இந்திய அறிவியல் நிறுவன ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த 2.0 படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் சிட்டி 2.0 ரோபோ, அதன் மைக்ரோ பாட்டான சிட்டி 3.0 ரோபோவை வடிவமைத்து, பயன்படுத்தும். அது போல மருத்துவ அறிவியலில் புதிய முயற்சி ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். அங்கொன்றும், இங்கொன்றுமாக சிகிச்சைக்கு ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டு வருவது குறித்து … Read more

புதுச்சேரி | இறந்து கரை ஒதுங்கிய அரிய டால்பின் வகை குளவி வேடன் மீன்: உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பிவைப்பு

சென்னை: காயங்களின்றி இறந்து கரை ஒதுங்கிய அரிய டால்பின் வகையான குளவி வேடன் மீனை வனத்துறையினர் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பியுள்ளனர். புதுச்சேரி வைத்திக்குப்பத்தைச் சேர்ந்த மீனவர் வளத்தான். இன்று மாலை வைத்திக்குப்பம் கடற்கரையில் கருமையான நிறத்தில் மீன் மிதந்து வருவதை பார்த்தார். அதை கடற்கரையில் இழுத்து போட்டபோது, அது டால்பின் வகையைச் சேர்ந்த 3.5 அடி கொண்ட குளவி வேடன் என்ற அரிய வகை மீன் என்பது தெரிந்தது. அந்த மீன் இறந்திருந்தது. … Read more

கியான்வாபி மசூதியின் ஒரு பகுதிக்கு சீல்: சிவலிங்கம் இருப்பதாக வெளியான தகவலால் நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: கியான்வாபி மசூதியில் தொழுகைக்காக கை, கால் கழுவும் ஒசுகானாவிற்கு திங்கள்கிழமை சீல் வைக்கப்பட்டுள்ளது. அதனுள் சிவலிங்கம் இருப்பதாகக் கள ஆய்வில் கிடைத்த தகவலால் வாரணாசி சிவில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் இருக்கும் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டியுள்ள கியான்வாபி மசூதியில் கள ஆய்வு திங்கள்கிழமை நிறைவு பெற்றது. கடந்த மூன்று தினங்களாக நடைபெற்று வந்த ஆய்வில், தொழுகைக்காக கை, கால்கள் கழுவும் ஒசுகானா எனும் நீர்குளத்திலும் ஆய்வு நடைபெற்றது. இதற்காக, … Read more

வெம்பக்கோட்டை அகழ்வாய்வில் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த குவளை கண்டெடுப்பு

விருதுநகர்: வெம்பக்கோட்டை அகழ்வாய்வில் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த குவளை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கீழடி, சிவகளை, மயிலாடும்பாறை, கங்கைகொண்ட சோழபுரம், விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டி உள்ளிட்ட 7 இடங்களில் இந்த ஆண்டில் புதிதாக அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதன்படி விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் அகழ்வாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. தற்போது வரை வெம்பக்கோட்டையில் நுண்கற்கருவிகள், சங்ககால மண்பாண்ட ஓடுகள், பெருங்கற்கால … Read more

உணவு விற்பனையகங்களில் தொடர் ஆய்வு, பாட்டில் தண்ணீர், குளிர்பானங்கள் கண்காணிப்பு: அமைச்சர் அறிவுறுத்தல்

சென்னை: இறைச்சி விற்பனை கடைகளில் தொடர் ஆய்வு நடத்த வேண்டும் என்றும், புகார்கள் மீது 72 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னை, ஓமந்தூரார் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை அலுவலக கூட்டரங்கில் அனைத்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், “அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு மற்றும் … Read more

சென்னை ஐஐடி – காத்மாண்டு பல்கலை. இடையே 2 ஒப்பந்தங்கள்: பிரதமரின் நேபாள பயணத்தின்போது கையெழுத்து

புதுடெல்லி: காத்மாண்டு பல்கலைகழகம் – சென்னை ஐஐடி இடையே இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. பிரதமர் மோடியின் நேபாள பயணத்தின்போது இரு நாடுகள் இடையே மேலும் சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் பயணமாக திங்கள்கிழமை நேபாளத்திற்குச் சென்றார். இந்தப் பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் விவரம்: > புத்தமத ஆய்வுகளுக்கான டாக்டர் அம்பேத்கர் இருக்கை அமைப்பது குறித்து லும்பினி புத்தசமய பல்கலைக்கழகம் மற்றும் இந்திய கலாச்சார … Read more