'அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சி; திமுக ஆட்சி கற்கால ஆட்சி' – ஜெயக்குமார்

சென்னை: “தமிழகத்தில் நடைபெற்ற அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சி, தற்போதைய திமுகவின் ஆட்சி கற்கால ஆட்சி” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுக ஆட்சி சிறப்பாக இருந்ததாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பாராட்டியிருப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “அதிமுக ஆட்சியை உலகமே பாராட்டுகிறது. அவர் என்ன பாராட்டுவது. அதுதான் உண்மை. நல்லது செய்வதை யார் வேண்டுமானாலும் பாராட்டுவார்கள். … Read more

அதிகாரிகளை விமர்சித்த கிம்; ராணுவம் மூலம் மருந்து விநியோகம்: தென் கொரியா உதவி

பியோங்யாங்: வட கொரியாவில் கரோனா பரவலுக்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்று அதிபர் கிம் கடுமையாக விமர்சித்துள்ளார்.மேலும் கரோனாவை தடுக்க மக்களுக்கு மருந்துகளை உடனடியாக விநியோகம் செய்யுமாறு ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார். வட கொரியாவில் மருந்தகம் ஒன்றில் அதிபர் கிம் நேரடியாக பார்வையிட்டபோது அங்கு மருந்து பற்றாக்குறை உள்ளதை அவர் நேரிடையாகக் கண்டார். இதனைத் தொடர்ந்து சுகாதார அதிகாரிகளுடன் அவசரக் கூட்டம் ஓன்றை நடத்தினார். அக்கூட்டத்தில் அதிபர் கிம் அதிருப்தி அடைந்து காணப்பட்டதாக வட கொரிய ஊடகங்கள் செய்தி … Read more

'2024 தேர்தலில் காங்., வெற்றி பெற்று பிரதமர் மோடியை வீட்டிற்கு அனுப்பும்' – ஈவிகேஎஸ் இளங்கோவன் 

சென்னை: இன்னும் இரண்டு ஆண்டுகளில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று, பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்பபோகிறது என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார். சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் உணவகத்தில், ‘சமூகத்தில் சமநிலை ஏற்படுத்திய மகான் அன்னமாச்சாரி’ என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர், ஈவிகேஎஸ் இளங்கோவன் கலந்து கொண்டு நூலினை வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “இந்தியா … Read more

இலங்கை வழியில் மேலும் 69 நாடுகள்; சுழற்றி அடிக்கும் பொருளாதார நெருக்கடி- கடன் சுமை: எச்சரிக்கும் உலக வங்கி

கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை உருக்குலைந்துள்ள நிலையில் இதே போன்ற நெருக்கடியை நோக்கி 69 நாடுகள் சென்று கொண்டிருப்பதாக உலக வங்கி, ஐ.நா. போன்றவை எச்சரித்துள்ளன. உணவுத்தட்டுப்பாடு மட்டுமின்றி கடன் சுமையும் இந்த நாடுகளை மூழ்கடித்து வருகின்றன. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. இதனால் கடுமையான எரிபொருள் … Read more

ரூ.5800 கோடியில் மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம்: கையெழுத்தானது புரிந்துணர்வு ஒப்பந்தம் 

சென்னை: ரூ.5800 கோடியில் மீண்டும் மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் தொடங்கப்படவுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (மே 16) கையெழுத்தானது. சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயலுக்கு புதிய உயர்மட்ட சாலை அமைக்க கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பணிகள் தொடங்கப்பட்டு ஆங்காங்கே தூண்களும் அமைக்கப்பட்டன. இந்நிலையில் கூவம் ஆற்றின் வழித்தடத்தை மாற்றும் வகையில் இத்திட்டம் இருப்பதாகக் கூறி, உயர் மட்ட சாலைக்கான கட்டமைப்பு பணிகளுக்கு அடுத்து வந்த அதிமுக அரசு … Read more

டிஎன்பிஎஸ்சி குருப் 4 பயிற்சி வினா விடை தொகுப்பு – பகுதி 7

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுகள் மற்றும் பிற போட்டித்தேர்வுகளுக்கு தங்களை தயார் செய்து வரும் போட்டியாளர்கள், மாணவர்களின் முறையான திருப்புதலுக்கு உதவும் வகையில் கொள்குறி வினா-விடைகள் தொகுத்துத் தரப்படும் தொடர் இது. கடந்த வெள்ளிக்கிழமை (மே 13) அன்று வெளியிடப்பட்ட பகுதி-6 இல் ‘தமிழ் நாடு -2 (தமிழக அரசியல் – அ) என்னும் தலைப்பின் கீழ் 20 கொள்குறி வினாக்களை வெளியிட்டிருந்தோம். இன்று பொது – 1 (உலகம் – அ) என்னும் தலைப்பின் கீழ் 20 … Read more

கிருஷ்ணகிரி அருகே மாணவர்களிடையே மோதல்: பத்தாம் வகுப்பு மாணவனுக்கு கத்திக்குத்து

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், பத்தாம் வகுப்பு மாணவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே பண்ணிஹள்ளி புதூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் கடந்த சனிக்கிழமையன்று மாணவர்களிடையே மாம்பழம் சாப்பிடும்போது தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று பள்ளியில் சிறப்பு வகுப்பு நடைபெற்றபோது தகராறு தொடர்பான மாணவர் ஒருவர் பள்ளிக்கு வரவில்லை. அந்த மாணவருக்கு … Read more

பாகிஸ்தானில் 2 சீக்கியர்கள் கொலை: இந்திய வெளியுறவுத் துறை கடும் கண்டனம்

புதுடெல்லி: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் சுமார் 15,000 சீக்கியர்கள் வசிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர். பெஷாவர் நகரின் படாலால் பகுதியில் சுல்ஜித் சிங் (42), ரஞ்சித் சிங் (38) ஆகிய சீக்கியர்கள் மளிகை கடை நடத்தி வந்தனர். அவர்கள் இருவரும் நேற்று தங்கள் கடைகளில் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர். இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: பாகிஸ்தானில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. … Read more

இலங்கையில் கனமழை, வெள்ளம் – இலங்கையில் 600+ குடும்பங்கள் பாதிப்பு

கொழும்பு: இலங்கையின் மேற்கு பகுதியில் கனமழையினால் ஏற்பட்ட கடும் வெள்ளம் காரணமாக 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து இலங்கை பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்ட தகவலில், “கடந்த சில நாட்களாக இலங்கையின் மேற்கு மற்றும் தென் பகுதியில் கடுமையான மழை பதிவாகியிருக்கிறது. குறிப்பாக, கலுதரா மாகாணம், ரத்னபுரா மாவட்டங்களில் கடுமையான மழையினால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் வேகமாக காற்று வீசியதில் 100-க்கு மேற்பட்ட வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன. மின்சாரம் தடைப்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவு … Read more

2021-22 நிதியாண்டில் சிஎஸ்ஆர் மூலம் ரூ.131 கோடி நிதி திரட்டிய சென்னை ஐஐடி

சென்னை: 2021-22 நிதியாண்டில் சிஎஸ்ஆர் திட்டத்தின் கீழ் ரூ.131 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளதாக சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள முக்கிய கல்வி நிறுவனங்களில் சென்னை ஐஐடி-யும் ஒன்றாகும். சென்னை ஐஐடி ஒவ்வோர் ஆண்டும் முன்னாள் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து சிஎஸ்ஆர் திட்டத்தில் நிதியை திரட்டும். இதன்படி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 2021-22 நிதியாண்டில் ரூ.131 கோடி நிதியை சிஎஸ்ஆர் திட்டத்தில் சென்னை ஐஐடி திரட்டியுள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தத் தொகை 30 … Read more