அசாம் வெள்ளத்தில் 25,000 பேர் பாதிப்பு: நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு

குவாஹாட்டி: அசாம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கச்சார், கர்பி அங்லாங், தேமாஜி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 92 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 25 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ராணுவம், துணை ராணுவம், தீ மற்றும் அவசர கால சேவை துறை, மாநில பேரிடர் மேலாண்மை படையைச் சேர்ந்தவர்கள் மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மலைகள் நிறைந்த திமா ஹசாவ் மாவட்டத்தில் கனமழை காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவு … Read more

லும்பினியில் பிரதமர் மோடி: புத்த கலாச்சார கொண்டாட்டங்களில் பங்கேற்பு 

காத்மாண்டு: நேபாளத்தில் புத்தர் பிறந்த லும்பினி சென்றுள்ள பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். பிரதமர் மோடி ஒரு நாள் பயணமாக இன்று நேபாளம் சென்றுள்ளார். நேபாளத்தில் புத்தர் பிறந்த லும்பினி சென்றடைந்த பிரதமர் மோடியை நேபாள பிரதமர் ஷேர் பகதூர் துபா வரவேற்றார். பின்னர் லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் அமைந்துள்ள மாயதேவி ஆலயத்தில் பிரதமர் மோடி வழிபாடு செய்தார். மாயதேவி ஆலய தரிசனத்துக்கு பிறகு அருகே உள்ள புத்த துறவிகள் மடத்துக்கு பிரதமர் … Read more

நூல் விலை உயர்வு | பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: பருத்தி, நூல் விலை உயர்வின் காரணமாக தமிழகத்தில் ஜவுளித் தொழில் எதிர்கொள்ளும் கடுமையான பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “தமிழகத்தில் ஜவுளித் தொழில் எதிர்கொள்ளும் கடுமையான இடையூறுகள் குறித்து இந்தியப் பிரதமரின் உடனடி கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். கடந்த சில மாதங்களாக, இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் … Read more

தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பொறுப்பேற்பு

புதுடெல்லி: நாட்டின் புதிய தலைமை தேர்தல்ஆணையராக ராஜீவ் குமார் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருந்து வந்த சுஷீல்சந்திராவின் பதவிக் காலம் நேற்றுமுன்தினத்துடன் முடிந்தது. பணியில் இருந்து சுஷீ்ல் சந்திரா நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார். அவரது பதவிக் காலம் முடிந்ததையடுத்து, தேர்தல் ஆணையராக இருந்த ராஜீவ் குமாரை புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமித்து கடந்த வியாழக்கிழமை குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்தார். 15-ம் தேதி (நேற்று) அவர் பதவி பொறுப்பேற்பார் … Read more

பின்னலாடை உற்பத்தியை முடக்கும் அளவுக்கு தொடர்ந்து நூல் விலையை உயர்த்துவதா?- தினகரன் கண்டனம்

சென்னை: பின்னலாடை உற்பத்தியை முடக்கும் அளவுக்கு தொடர்ந்து நூல் விலையை உயர்த்தி வருவது கண்டனத்திற்குரியது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், ”நாட்டிற்கு பெரிய அளவில் அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் பின்னலாடை உற்பத்தியை முடக்கும் அளவுக்கு தொடர்ந்து நூல் விலையை உயர்த்தி வருவது கண்டனத்திற்குரியது. நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி போராடி வரும் திருப்பூர் பகுதி விசைத்தறியாளர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு உடனடியாக கவனித்து, … Read more

கியான்வாபியில் கடைசி நாள் கள ஆய்வு: வாரணாசி நீதிமன்றத்தில் நாளை அறிக்கை தாக்கல் செய்ய வாய்ப்பு

புதுடெல்லி: கியான்வாபி மசூதியில் இன்று கடைசி நாள் கள ஆய்வு தொடங்கியது. இதன் முழு அறிக்கை நாளை வாரணாசியின் சிவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. உத்தரப்பிரதேசத்தின் காசி எனும் வாரணாசியில் பழம்பெருமை வாய்ந்த காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இதை ஒட்டியபடி முகலாய மன்னர் அவுரங்கசீப்பால் கட்டப்பட்ட கியான்வாபி மசூதி உள்ளது. காசி விஸ்வநாதர் கோயிலை உடைத்து அதன் ஒரு பகுதியில் கியான்வாபி மசூதி கட்டப்பட்டதாகப் புகார்கள் உள்ளன. இதனால், மசூதியின் இடத்தை கோயிலிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் … Read more

நூல் விலை உயர்வு: திருப்பூர் பின்னலாடை தொழில் நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்

திருப்பூர்: நூல் விலை உயர்வுக்கு எதிராக திருப்பூரில் பின்னலாடைத் தொழில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நான் பொது வேலைநிறுத்த போராட்டம் இன்று தொடங்கியது. கடந்த சில மாதங்களாக நூல் விலை அபரிமிதமாக உயர்ந்து வரக்கூடிய சூழ்நிலையில் இம்மாதம் கிலோ 40 ரூபாய் வரை விலை உயர்ந்து 470 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வரலாறு காணாத வகையில் பஞ்சு விலையும் உயர்ந்து இருப்பதன் காரணமாக இனி வரும் மாதங்களில் நூல் விலை மீண்டும் … Read more

பாலியல் புகாரில் சிக்கிய ராஜஸ்தான் அமைச்சரின் மகன் தலைமறைவு

புதுடெல்லி: பாலியல் புகாரில் ராஜஸ்தான் அமைச்சரின் மகனைக் கைது செய்ய டெல்லி போலீஸார் ராஜஸ்தான் சென்ற நிலையில், அவர் தலைமறைவாகி உள்ளார். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு நெருக்கமானவராக கருதப்படும் மாநில அமைச்சர் மகேஷ் ஜோஷியின் மகன் ரோஹித். இவருடன் பேஸ்புக் மூலம் கடந்த ஆண்டு பழக்கம் ஏற்பட்டதாகவும் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் டெல்லியைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் புகார் அளித்தார். தனக்கு தெரியாமல் … Read more

தேசிய நெடுஞ்சாலை ஆணைய விழா: மே 26 அன்று சென்னை வருகிறார் பிரதமர் மோடி – ரூ.12,413 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, வரும் 26-ம் தேதி சென்னை வருகிறார். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் நிகழ்ச்சியில் மத்திய, மாநில அரசுகளின் சார்பில் செயல்படுத்தப்படும் ரூ.12,413 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜனவரி 12-ம் தேதி தமிழகம் வருவதாக இருந்தது. விருதுநகரில் இதற்கான நிகழ்ச்சி நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கரோனா பாதிப்பு காரணமாக பிரதமர் … Read more

சரத் பவார் குறித்து சர்ச்சை கருத்தை பகிர்ந்ததாக மராத்தி நடிகை கேதகி கைது

மும்பை: மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசில் தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) அங்கம் வகிக்கிறது. இந்நிலையில், கவிதை வடிவிலான ஒரு பதிவை மராத்தி நடிகை கேதகி சிதலே (29) தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்தார். அதில் ‘நரகம் காத்திருக்கிறது’, ‘பிராமணர்களை நீங்கள் வெறுக்கிறீர்கள்’ என்பன போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இவை என்சிபி தலைவர் சரத் பவாரை குறிக்கும் வகையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக என்சிபி சார்பில் தானே போலீஸில் புகார் செய்யப்பட்டது. இதன் அடிப்படையில், … Read more