இந்து தமிழ் திசை: பெருந்துறை நிவேதா கலைக் கழகம் சார்பில் அலங்கார மலர் செய்யும் ஓரிகாமி பயிற்சி | மே 20, 21, 22-ல் ஆன்லைனில் நடைபெறுகிறது

சென்னை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், பெருந்துறை நிவேதா கலை, கைவினைக் கழகம் இணைந்து நடத்தும் அலங்காரப் பூக்கள் செய்யும் ஓரிகாமி ஆன்லைன் பயிலரங்கம் வரும் 20-ம் தேதி முதல் 3 நாட்கள் நடைபெற உள்ளது. கோடை விடுமுறையில் வீட்டில்இருக்கும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பயனளிக்கும் விதமாக, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் பல்வேறு செயல்பாடுகளை இணைய வழியாக தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பூக்கள் செய்யும் ஓரிகாமி ஆன்லைன் பயிலரங்கு 3 நாட்கள் … Read more

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு ரத்தப் புற்றுநோய்: அமெரிக்க ‘நியூஸ் லைன்ஸ்’ பத்திரிகை தகவல்

புதுடெல்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ரத்தப் புற்றுநோயால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க பத்திரிகையில் தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து தீவிரமாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ரஷ்யஅதிபர் விளாடிமிர் புதின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வும் அதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில், இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னாள் உளவாளியான கிறிஸ்டோபர் ஸ்டீலி என்பவர், ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘புதினுக்கு என்ன நோய் என்பது சரியாகத் தெரியவில்லை. … Read more

இன்று சென்னை பல்கலை. பட்டமளிப்பு விழா | ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. தமிழக ஆளுநர்ஆர்.என்.ரவி தலைமையில் நடக்கும் இந்த விழாவில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்துகிறார். சென்னை பல்கலைக்கழகத்தின் 164-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமையில் இந்த விழாநடைபெறுகிறது. இதில் முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்துகிறார். உயர்கல்வித் துறை அமைச்சரும், … Read more

நியூயார்க்கில் 18 வயது இளைஞன் நடத்திய துப்பாக்கிச் சூடு: கறுப்பினத்தவர்கள் உட்பட 10 பேர் உயிரிழப்பு

நியூயார்க்: நியூயார்க் நகரின் சூப்பர் மார்க்கெட்டில் 18 வயது இளைஞன் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதில் கறுப்பினத்தவர்கள் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் காயம் அடைந்தனர். அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ளது பப்பல்லோ நகரம். இங்கு ‘டாப்ஸ் பிரண்ட்லி மார்க்கெட்’ என்ற சூப்பர்மார்க்கெட் உள்ளது. இங்கு கடந்தசனிக்கிழமை 18 வயது இளைஞன், தலைக் கவசம் மற்றும் கவச உடை அணிந்து உள்ளே வந்தார். திடீரென தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் … Read more

காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் கருட சேவை உற்சவம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள்கோயிலில் கருடசேவை உற்சவம் விமரிசையாக நடந்தது. இதில்ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில், வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று கருடசேவை உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. அதிகாலை 4.40 மணிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கருடவாகனத்தின் மீது உற்சவர் வரதராஜப் பெருமாள் எழுந்தருளினார். தொடர்ந்து காலை 5 மணிக்கு மேற்கு ராஜகோபுரத்தின் நுழைவு வாயிலில் தொட்டாச்சாரியாருக்கு காட்சியளிக்கும் வைபவம் … Read more

மருத்துவ சோதனையில் ‘ஆண்’ என அறிவிக்கப்பட்ட பெண்ணுக்கு வேலை: மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் ஊரக காவல் துறைக்கான பெண் காவலர் தேர்வு கடந்த 2018-ல் நடந்தது. இதில் எஸ்சி பிரிவில் பெண் ஒருவர் எழுத்து மற்றும் உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றார். ஆனால் மருத்துவ பரிசோதனையில் அந்தப் பெண் ணுக்கு கருப்பை இல்லை என்பதும் அவரது உடலில் ஆண், பெண் குரோமோசோம்கள் உள்ளதும் தெரிந்தது. இதையடுத்து அந்த பெண் ணுக்கு, ‘ஆண்’ என மருத்துவ சான்றிதழ் அளிக்கப்பட்டது. இதனால் இவரது தேர்வு ரத்தானது. இதை … Read more

ஐக்கிய அரபு அமீரக அதிபராக ஷேக் முகமது தேர்வு: இந்தியாவின் உண்மையான நண்பர் என இந்தியர்கள் வரவேற்பு

துபாய்: ஐக்கிய அரபு அமீரக (யுஏஇ) அதிபர் ஷேக் கலிஃபா பின் சயீத்மறைவைத் தொடர்ந்து புதிய அதிபராக ஷேக் முகமது தேர்வு செய்யப்பட்டார். இவர் ஐக்கிய அரபு அமீரக ஆயுதப் படைகளின் தளபதியாக இருந்தவர். ராணுவத்தில் பல முக்கிய பதவிகளை இவர்வகித்துள்ளார். அடுத்த 5 ஆண்டுகளுக்கு அமீரகத்தின் அதிபராக ஷேக் முகமது பதவி வகிப்பார். இந்நிலையில் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஷேக் முகமது பின் சையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், ஷேக் முகமது … Read more

தமிழகத்தில் ஜூன் 12-ம் தேதி ஒரு லட்சம் இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்: சுகாதாரத் துறை அமைச்சர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் ஜூன் 12-ம் தேதி 1 லட்சம் இடங்களில் சிறப்பு மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடக்க உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இதுதொடர்பாக சென்னையில் அவர் நேற்று கூறியதாவது. தமிழகத்தில் 93.55 சதவீதம் பேர் முதல் தவணையும், 81.55 சதவீதம் பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர். வாரம்தோறும் சனிக்கிழமையில் நடத்தப்பட்ட மெகாதடுப்பூசி முகாம்கள் மூலம் இது சாத்தியம் ஆகியுள்ளது. தற்போது, தடுப்பூசி செலுத்திக் கொள்ள வருபவர்களின் எண்ணிக்கை குறைவாக … Read more

'இன்று' இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம்: இந்தியாவில் தென்படாது என தகவல்

சென்னை: சூரியன், சந்திரன், பூமி ஒரே நேர்க்கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழ்கின்றன. ஆண்டுதோறும் சராசரியாக 4 கிரகணங்கள் வரை நிகழும். சந்திரனை பூமி முழுமையாக மறைத்தால் அது முழு சந்திர கிரகணம் என்றும், ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் மறைத்தால் அது பகுதி கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று(மே 16) நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி காலை 7.01 முதல் மதியம் 12.20 மணி வரை கிரகணம் … Read more

மாநிலங்களவை தேர்தல் | காங்கிரஸுக்கு ஒரு இடம்; திமுக சார்பில் 3 வேட்பாளர்கள் போட்டி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திமுக வேட்பாளர்களாக தஞ்சை கல்யாணசுந்தரம், கே.ஆர்.என். ராஜேஷ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகம் உட்பட 15 மாநிலங்களில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை காலியாகவிருக்கும் 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்கு வரும் ஜூன் 10-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 24-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி முடிவடையும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திமுகவைச் … Read more