தாஜ்மகாலின் பாதாள அறைகளில் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்பு படங்களை பகிர்ந்துள்ளது இந்திய தொல்லியல் ஆய்வு அமைப்பு

புதுடெல்லி: உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலின் பாதாள அறைகளில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு படங்களை பகிர்ந்துள்ளது இந்திய தொல்லியல் ஆய்வு அமைப்பு. அண்மையில் இந்த அறைகள் குறித்து விவாதம் எழுந்திருந்தது. இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆக்ரா நகரின் யமுனை ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ளது தாஜ்மகால். வெளிநாட்டினர், உள்நாட்டு மக்கள் என தினமும் பல ஆயிரம் பேர் வந்து பார்வையிட்டு செல்லும் இடம். உலகின் முக்கியமான இடங்களில் ஒன்று. முகலாய மன்னர் ஷாஜகான், அவரது மனைவி மும்தாஜின் நினைவாக … Read more

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி திருப்பூரில் தொழில் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தொழில் அமைப்பினர் மற்றும் பெண் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி, திருப்பூரில் உள்ள திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், சைமா சங்கம், டீமா சங்கம், நிட்மா சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் சார்பில் நாளை (மே 16) மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்கள் பனியன் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளன. இந்த போராட்டத்துக்கு பல் வேறு தொழில் … Read more

கர்நாடகா | சாலையில் தாக்குதலுக்கு உள்ளான பெண் வழக்கறிஞர்; உதவ யாரும் முன்வரவில்லை

பாகல்கோட்: கர்நாடக மாநிலத்தின் சாலையில் பெண் வழக்கறிஞர் ஒருவரை ஆண் ஒருவர், காட்டுத்தனமாக அடித்தும், உதைத்தும் உள்ளார். தாக்குதலுக்கு ஆளான வழக்கறிஞருக்கு யாரும் உதவ முன்வரவில்லை. அந்த வீடியோ சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்துள்ளது. இந்த சம்பவம் அந்த மாநிலத்தில் உள்ள பாகல்கோட் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. தாக்குதலுக்கு ஆளானது பெண் வழக்கறிஞர் சங்கீதா என தெரியவந்துள்ளது. அவரை அடித்தவர் அவரது வீட்டுக்கு அருகில் வசித்து வரும் மகாந்தேஷ் என தெரியவந்துள்ளது. சங்கீதாவின் வயிற்றில் எட்டி உதைத்தும், கன்னத்தில் … Read more

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் கருணாம்பிகையம்மன் தேரோட்டம்

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் சித்திரை தேர்த் திருவிழாவையொட்டி, கருணாம்பிகையம்மன் தேரோட்டம் நேற்று நடந்தது. கொங்கு ஏழு சிவ ஸ்தலங்களில் முதன்மை பெற்ற கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் சித்திரைத் தேர்த்திருவிழா மே 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான, அவிநாசி தேரோட்டம் 12, 13-ம் தேதிகளில் இரு நாட்கள் நடந்தது. இதையடுத்து நேற்று கருணாம்பிகையம்மன் தேரோட்டம் நடைபெற்றது. உடன் விநாயகர், வள்ளி தெய்வானை உடனமர் சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜ பெருமாள் ஆகிய தேர்களையும் … Read more

வரத்து குறைவால் தக்காளி விலை உயர்வு: தமிழக விவசாயிகளுக்கு பலனில்லை

தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால், காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டு, வரத்து குறைந்துள்ளது. இந்நிலையில், தக்காளி விலையும் உயா்ந்துள்ளது. விளைச்சல் அதிக அளவில் இருந்ததால், கடந்தமாதம் வரை ஒரு கிலோ தக்காளி ரூ.15 வரை விற்கப்பட்டது. பின்னா் பரவலாக மழை பெய்ததால், தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்தும் குறைந்தது. இதனால் கடந்த சில நாட்களாக தக்காளி விலை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் வரத்து குறைவால், கடந்த மாதம் வரை … Read more

பயணிகளின் வரவேற்பை பொறுத்து மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி ரயிலை நீட்டிக்க பரிசீலனை: சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் தகவல்

பயணிகளின் வரவேற்பைப் பொறுத்து மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில் சேவையை நீட்டிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் ஏ.கவுதம் னிவாஸ் தெரிவித்துள்ளார். கோவை- டெல்லி பட்டேல் நகர் இடையிலான பார்சல் கார்கோ எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை வடகோவை ரயில்நிலையத்திலிருந்து நேற்று தொடங்கிவைத்தபிறகு ஏ.கவுதம் னிவாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த ரயில் கோவை வடக்கு ரயில்நிலையத்திலிருந்து புறப்பட்டு, டெல்லி படேல் நகர் ரயில்நிலையம் சென்றடையும். இதில் மொத்தம் 353 டன் சரக்குகளை ஏற்றிச்செல்ல முடியும். செல்லும் … Read more

தமிழகத்தில் யாருக்கும் தக்காளி காய்ச்சல் இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

திருவாரூர்: தமிழகத்தில் இதுவரை யாருக்கும் தக்காளி காய்ச்சல் தாக்குதல் இல்லை என மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், ஆதிச்சபுரத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 2,127 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 67.47 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 டயாலிசிஸ் கருவிகள் அமைக்கப்பட உள்ளன. தமிழகத்தில் தக்காளி காய்ச்சல் பரவியதாக வரும் … Read more

"ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருக்கிறார்; மனைவி தினம் கொண்டாட வேண்டும்" – மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே

மும்பை: “ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருக்கிறார். அதனால் மனைவி தினம் கொண்டாட வேண்டும்” என தெரிவித்துள்ளார் மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே. வழக்கமாக ஆசிரியர் தினம், நண்பர்கள் தினம், அன்னையர் தினம், தந்தையர் தினம், குடும்ப தினம் என ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட நாளில் உறவின் பிணைப்பை வெளிப்படுத்தும் விதமாக அந்த நாளை கொண்டாடுவது வழக்கம். இது சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் கொண்டப்படுபடுவது வழக்கம். இந்நிலையில், மனைவி தினம் … Read more

தனுஷ்கோடியில் புதிய கலங்கரை விளக்கம்: இலங்கையின் தலைமன்னார் வரை ஒளி தெரியும்

ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே தனுஷ்கோடியில் புதியதாக கட்டப்பட்ட கலங்கரை விளக்கத்தை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் காணொலி மூலம் நேற்று திறந்து வைத்தார். புயலால் அழிந்துபோன தனுஷ்கோடியை மீட்டெடுக்கும் வகையிலும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலும் இந்திய எல்லை பகுதியான மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடற்கரை பகுதிகளை கண்காணிப்பதற்காகவும் ராமேசுவரம் அருகே தனுஷ்கோடியில் புதிய கலங்கரை விளக்கம் கட்ட திட்டமிடப்பட்டு 2020-ல் அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ.7 … Read more

சிவகங்கை நகராட்சி ஆணையர் சஸ்பெண்ட்

சிவகங்கை: காணொலி மூலம் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் தன்னை அவதூறாக பேசிய நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு எதிர்ப்பு தெரிவித்த சிவகங்கை நகராட்சி ஆணையர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். நேற்று முன்தினம் இரவு காணொலி மூலம் நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இதில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த நகராட்சி ஆணையர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் சிவகங்கை நகராட்சி ஆணையரிடம் சில தகவலை கேட்டு, நகராட்சி நிர்வாக இயக்குநர் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. மற்ற ஆணையர்கள் முன்னிலையில் … Read more