3 நாளில் 8 லட்சம் பேருக்கு கரோனா தொற்று: தவிக்கிறது வட கொரியா

சியோல்: வட கொரியாவில் 3 நாட்களில் மட்டும் 8,20,620 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் தொற்று முதன் முதலாக கடந்த 2019-ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்டது. பெரிய அளவில் பாதிப்பு அதிகரித்தபோது ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளை சீன அரசு அமல்படுத்தி தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வந்தது. உலகையே ஆட்டிப்படைத்துவரும் கரோனா வைரஸ் பல நாடுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தின. ஆனால் இரும்புத்திரை நாடாக வர்ணிக்கப்படும் வடகொரியாவில் எந்த பாதிப்பு ஏற்படாமல் … Read more

கெலவரப்பள்ளி அணையில் 5-வது நாளாக வெண் நுரையுடன் வெளியேறும் தண்ணீர் 

ஓசூர்: ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரில் வெள்ளை நுரையுடன் தண்ணீர் வெளியேறுவது நேற்று வரை 5 நாட்களை கடந்துள்ள நிலையில் தென்பெண்ணை ஆற்று நீரை சுத்திகரிப்பு செய்வதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் உள்ள நந்திமலையில் உருவாகும் தென்பெண்ணை ஆறு, அங்கிருந்து பெங்களூரு ஊரகம், பெங்களூரு நகரம் வழியாக பயணித்து இறுதியில் தமிழக எல்லையான கொடியாளம் கிராமம் வழியாக ஓசூர் கெலவரப்பள்ளி … Read more

ஜிஎஸ்டி இழப்பீட்டை 3 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும் – காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்து

உதய்பூர்: காங்கிரஸ் கட்சியின் ‘சிந்தனை கூட்டம்’ ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நேற்று முன்தினம் தொடங்கியது. 3 நாட்களுக்கு நடைபெறும் இக்கூட்டத்தில் கட்சித் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்கின்றனர். இக்கூட்டத்தில் உட்கட்சி தேர்தல் மற்றும் அடுத்தடுத்து வரும் சட்டப்பேரவை மற்றும் 2024 மக்களவை பொதுத் தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்படுகிறது. குறிப்பாக அரசியல், பொருளாதாரம், சமூக நீதி, விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் கட்சி விவகாரம் … Read more

புதுச்சேரி மத்திய சிறையில் கைதிகள் பயிரிட்ட பூ, காய்கறிகள் அறுவடை

புதுச்சேரி: புதுச்சேரி மத்திய சிறையில் கைதிகள் பயிரிட்ட பூ, காய்கறிகள் ஆகியவற்றை அறுவடை செய்யும் இன்று நடைபெற்றது. புதுச்சேரி காலாப்பட்டில் மத்திய சிறைச்சாலை உள்ளது. சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என 200-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். மத்திய சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த சிறை துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கைதிகளுக்கு யோகா, தியான வகுப்புகள் நடைபெறுகிறது. அதோடு ஒவியம், சிற்பம் உள்ளிட்ட நுண்கலை பயிற்சியும், உடல் நலனை பாதுகாக்க … Read more

டெல்லி முன்ட்கா மெட்ரோ ரெயில் நிலையம் அருகே வணிக வளாக தீ விபத்தில் 30 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: டெல்லி தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளது. டெல்லி மேற்கு பகுதியில் உள்ள முன்ட்கா மெட்ரோ ரெயில் நிலையம் அருகே 3 அடுக்குமாடி அலுவலக கட்டிடம் அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் நேற்றுமுன்தினம் மாலை 4.45 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் சென்று வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீ அருகில் இருந்த மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியதால் கட்டிடத்தில் இருந்தவர்கள் வெளியேவர … Read more

அதிமுகவை மீண்டும் வலிமை கொண்ட இயக்கமாக  உருவாக்கிட தகுந்த நேரம் வந்துவிட்டது: வி.கே.சசிகலா பேச்சு

தஞ்சாவூர்: அதிமுகவை காப்பாற்றிடவும், மீண்டும் வலிமை கொண்ட இயக்கமாக உருவாக்கிடவும் தகுந்த நேரம் வந்துவிட்டது என்று வி.கே.சசிகலா கூறியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் இன்று (மே 15) நடைபெற்ற சசிகலாவின் ஆதரவாளர் வீட்டு திருமண விழாவில் கலந்து கொண்டு வி.கே.சசிகலா பேசியது: அதிமுக கட்சி ஒன்றுபட வேண்டும், வென்று காட்ட வேண்டும். அதிமுக உண்மையான தொண்டர்களின் தியாகத்தால் உருவானது. எதிர்கட்சியினர் எத்தனை கணக்குகள் போட்டாலும், நான் இருக்கும் வரை இந்த இயக்கத்தை யாராலும் அழித்து விடமுடியாது. இந்த … Read more

‘‘மாநிலங்கள் ஒன்று சேர்ந்தது தான் இந்தியா’’- ராகுல் காந்தி திட்டவட்டம்

புதுடெல்லி: நமது அரசியல் அமைப்பு சட்டத்தின்படி மாநிலங்கள் ஒன்று சேர்ந்தது தான் இந்தியா என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறினார். பல்வேறு மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் தொடர் தோல்விகளால் துவண்டுபோய் விட்ட காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிரூட்டும் வகையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் அந்த கட்சி ‘நவ் சங்கல்ப் சிந்தன் ஷிபிர்’ என்ற பெயரில் 3 நாள் சிந்தனை அமர்வு நடந்து வருகிறது. 2024-ம் ஆண்டு மக்களவை … Read more

கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவு: வனத்தை ஒட்டிய கிராமங்களில் விழிப்புணர்வு

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு காப்புக்காடு பகுதியில் கண்காணிப்புக் கேமராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவானதைத் தொடர்ந்து வனத்தை ஒட்டிய கிராமங்களில் வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனச் சரகத்தில் காப்புக் காடு பகுதியில் சில இடங்களில் வனத்துறை மூலம் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிப்பது, வனத்துக்கு எதிரான குற்றங்களை தடுப்பது உள்ளிட்ட தேவைகளுக்காக வனத்துறையினர் இவ்வாறு கேமராக்களை நிறுவி கண்காணிப்பு மேற்கொண்டு வருகிறனர். இந்நிலையில், பாலக்கோடு காப்புக்காட்டில் ஓரிடத்தில் உள்ள … Read more

செல்போன் பயன்படுத்துவதில் இந்தியக் குழந்தைகள் முதலிடம்: மெக்கபே ஆய்வறிக்கை தகவல்

பெங்களூரு: செல்போன் பயன்படுத்துவதில் உலக அளவில் இந்தியக் குழந்தைகள் அதிக முதிர்ச்சி பெற்றவர்களாகத் திகழ்வதாக மெக்கபே நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் சிறுவர், சிறுமியரின் விகிதம் 83 சதவீதமாகும். இது சர்வதேச அளவான 76%-ஐ விட அதிகமாகும். இதன் காரணமாக ஆன்லைன் மூலமான நிகழும் பாதிப்புகளுக்கு இலக்காகும் அபாயம் அதிகமாக உள்ளது. சைபர் குற்றங்களுக்கு இலக்காகும் சிறுவர், சிறுமியரின் விகிதம் 22 சதவீதமாக உள்ளது. இது சர்வதேச அளவில் 17 சதவீதமாகும். சர்வதேச … Read more

கரோனா காலத்தில் பதிவு செய்யப்பட்ட 10 லட்சம் வழக்குகள் கைவிடப்படுகிறது: டிஜிபி சைலேந்திரபாபு

சென்னை: கடந்த 2019-2020 ஆண்டு கரோனா காலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 10 லட்சம் வழக்குகள் கைவிடப்படுவதாக தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழக காவல்துறையினருக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கரோனா ஊரடங்கு காலத்தில், ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள், வதந்தி பரப்பியவர்கள், உண்மைக்கு மாறான செய்திகளை பரப்பியவர்கள் ஆகியோர்கள் மீது சுமார் 10 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவ்வழக்குகளுள் வன்முறையில் ஈடுபட்டு குறிப்பிட்ட குற்றங்களுக்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகள், முறைகேடான வழிகளில் இ-பாஸ் பெற்று … Read more