திரிபுரா புதிய முதல்வராக மாணிக் சஹா பதவியேற்பு: காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு தாவி அடுத்தடுத்து உச்சம்

அகர்தலா: திரிபுரா பாஜக தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான மாணிக் சஹா புதிய முதல்வராக இன்று பதவியேற்றார். காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு தாவி தற்போது அவர் முதல்வர் பதவியிலும் அமர்ந்துள்ளார். வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் முதல்வராக பிப்லப் குமார் தேவ் பதவி வகித்து வந்தார். அங்கு அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் சர்ச்சைப் பேச்சு, சர்சைக்குரிய முடிவுகள் என பிப்லவ் குமாா் தேவ் மீது பெரிய அளவில் அதிருப்தி ஏற்பட்டது. பாஜக நிர்வாகிகள் சிலர் … Read more

பெயர் மாற்ற தீர்மானத்தை நிறுத்தி வைக்க முதல்வர் அறிவுரை: அமைச்சர் கே.என்.நேரு

திருச்சியில் நேற்று மாநில நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திருவாரூர் தெற்கு வீதிக்கு மறைந்த முதல்வர் கருணாநிதியின் பெயரைச் சூட்டினால், திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் இயங்க முடியாத வகையில் போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளது தொடர்பான கேள்விக்கு, பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு “என்ன செய்வார்கள்?. கை, கால்களைக் கட்டிவிடுவார்களா?. திருவாரூர் நகர்மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பெயர் மாற்ற தீர்மானத்தை நிறுத்தி வைக்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறிவிட்டார். … Read more

மாநிலங்களவைத் தேர்தல்: திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு- காங்கிரஸுக்கு ஒரு இடம் ஒதுக்கீடு

சென்னை: மாநிலங்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கான 4 இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தற்போதைய திமுக மாநிலங்களவை உறுப்பினர்களான டி.கே.எஸ். இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. தமிழகம் உட்பட 15 மாநிலங்களில் மாநிலங்களவை உறுப்பினர்கள் 57 பேரின் பதவிக் காலம் வரும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதங்களில் முடிவடைகிறது. இதையொட்டி, இந்த பதவியிடங்களுக்கான தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழகத்தில் திமுக எம்பிக்களான டிகேஎஸ் இளங்கோவன், … Read more

காவல்துறையினரை சுதந்திரமாக செயல்பட அனுமதியுங்கள்: தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நன்கு பராமரிக்கப்பட வேண்டும். சட்டம் ஒழுங்கு நன்றாக பராமரிக்கப்பட வேண்டுமென்றால், அரசியல் தலையீடு தடுத்து நிறுத்தப்பட்டு காவல் துறையினர் சுதந்திரமாக செயல்பட தமிழக அரசுஅனுமதிக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த ஓராண்டு கால திமுக ஆட்சியில் மக்கள் நெரிசல் மிகுந்த பகுதிகளில் பட்டப் பகலில் கொலைகள் சரவசாதரணமாக நடைபெற்று வருகின்றன. பெண்கள், வியாபாரிகள், சிறு தொழில் புரிவோர், காவல் துறையினர், பாமர … Read more

‘‘பயனர் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளீர்கள்; என் மீது ட்விட்டர் புகார்’’ – எலான் மஸ்க்

நியூயார்க்: வெளியாகாத ஒப்பந்தத்தில் இருந்த பயனர்கள் உள்ளிட்ட தகவல்களை வெளியிட்டு விட்டதாக ட்விட்டர் சட்ட குழுவினர் தன் மீது புகார் தெரிவித்துள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், ட்விட்டர் சமூக வலைத்தளத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்குகிறார். ட்விட்டர் நிர்வாகக் குழு மற்றும் மஸ்க் தரப்பில் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த ஒப்பந்தம் உறுதியாகியுள்ளது. ட்விட்டர் சமூக வலைதளத்தில் பயனர்களின் கருத்து சுதந்திரம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த எலான் … Read more

ஐக்கிய அரபு அமீரக அதிபர் மறைவுக்கு முதல்வர் இரங்கல்: தமிழக அரசு சார்பில் ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு

சென்னை: ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலீபா பின் சயீத் அல் நஹ்யான் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழக அரசு சார்பில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலீபா பின் சயீத் அல் நஹ்யான் நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மத்திய அரசு சார்பில் நேற்று (மே 14) துக்கம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நாடு முழுவதும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் … Read more

அனைத்து துறை குரூப்-1 அதிகாரிகளுக்கும் ஐஏஎஸ் பதவி உயர்வு – தமிழ்நாடு ஆட்சிப் பணியை உருவாக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அனைத்து துறை குரூப்-1 அதிகாரிகளுக்கும் ஐஏஎஸ் பதவி உயர்வு வழங்கும் வகையில், தமிழ்நாடு ஆட்சிப் பணியை உருவாக்குவது தொடர்பாக தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப்-1 தேர்வில் தேர்ச்சிபெற்று, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து துறையில் உதவி இயக்குநர், இணை இயக்குநர், கூடுதல் இயக்குநர்களாக பதவி வகிக்கும் பி.ஆனந்தராஜ், பி.பொன்னையா, எப்.அப்துல் ரசாக், எம்.பரமேஸ்வரன் உள்ளிட்ட 98 பேர், தங்களை … Read more

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் 4 நாட்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகப் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் 15, 16-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைபெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். 17, 18-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மைய இயக்குநர் செந்தாமரைக் கண்ணன் தெரிவித்துள்ளார். Source link

கருணாநிதி வளர்ந்த திருவாரூர் மண்ணில் அறைகூவல் விடுத்த அண்ணாமலை – அரசியலும் ஆன்மிகமும் கலந்து திமுகவுக்கு விடுத்த எச்சரிக்கை

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர் கோயிலின் தெற்கு வீதிக்கு கலைஞர் சாலை என பெயர் மாற்றம் செய்து திமுக வசமுள்ள திருவாரூர் நகர்மன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக சார்பில் மே 12-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இதில், தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்தும் பாஜகவினர் திரளாக பங்கேற்றனர். மேலும், ஆர்ப்பாட்டத்துக்கு … Read more

அணுகுண்டு தாக்குதல் எவ்வளவோ மேல்: இம்ரான் கான் வேதனை

மார்டன்: பாகிஸ்தான் தெஹ்ரிக் இ-இன் சாப் கட்சி சார்பில் மார்டன் நகரில் நேற்று முன்தினம் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் பிரதமரும் கட்சி தலைவருமான இம்ரான் கான் பேசியதாவது: அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் அரசியல் கட்சிகளின் சதியால் எனது ஆட்சி கவிழ்க்கப்பட்டது. பல்வேறு ஊழல் விவகாரங்களில் சிக்கிய திருடர்கள் தற்போது நாட்டை ஆட்சி செய்கிறார்கள். திருடர்களிடம் நாட்டின் அதிகாரத்தை கொடுப்பதைவிட பாகிஸ்தான் மீது அணுகுண்டு வீசுவது நல்லது. பிரிட்டனில் இருந்து சிலர் (நவாஸ் ஷெரீப்) பாகிஸ்தானின் விதியை … Read more