பெண்கள் பாதுகாப்பு வசதியுடன்500 அரசுப் பேருந்துகள் இயக்கம் – சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக ‘நிர்பயா’ திட்டத்தின் கீழ் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிசிடிவி கேமரா, அவசர அழைப்பு பொத்தான் பொருத்தப்பட்ட 500 பேருந்துகளின் சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். போக்குவரத்துத் துறை சார்பில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பான பயணத்துக்காக ‘நிர்பயா’ பாதுகாப்பான நகரத் திட்டத்தின் கீழ், 2,500 மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் அவசர பொத்தான்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக சென்னை மாநகரப் … Read more

திரிபுரா முதல்வரை மாற்றியது ஏன்? – பின்னணி தகவல்கள்

அகர்தலா: திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேவ் நேற்று பதவியை ராஜினாமா செய்தார். அவருக்குப் பதிலாக மாநில பாஜக தலைவர் மாணிக் சாஹா புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் கடந்த 2018-ம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் பாஜக 36 இடங்களைக் கைப்பற்றியது. 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கட்சிக்கு 16 இடங்கள் மட்டுமே கிடைத்தன. இதைத் தொடர்ந்து திரிபுராவின் 10-வது … Read more

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். இந்த பயணத்தில் தமிழக சூழல் குறித்து மத்திய அரசிடம் விளக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் ஆளும் திமுக அரசு மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இது அரசு விழாக்களிலும் வெளிப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும், இந்தி திணிப்பு தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியும் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடியும் இருவேறு கருத்துகளை தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. … Read more

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மே 20 வரை பள்ளிக்கு வரவேண்டும் – பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மே 20-ம் தேதி வரை பள்ளிக்கு வரவேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வியில் நடப்பு கல்வி ஆண்டு (2021-22) 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு மே 5-ம்தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவுபெற்றது. இதையடுத்து, மாணவர்களுக்கு இன்று (மே 14) முதல் கோடை விடுமுறை வழங்கப்படுகிறது. பள்ளிகள் திறக்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதேநேரம் அலுவல்சார் பணிகளுக்காக … Read more

ஆதிதிராவிடர், பழங்குடியின சமூகத்தை சேர்ந்த 21 எழுத்தாளர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் பரிசு – முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டுச் சங்கத்தால் தேர்வு செய்யப்பட்ட 21 எழுத்தாளர்களுக்கு தலா ரூ.25 ஆயிரத்துக்கான காசோலைகள், பாராட்டு சான்றிதழ்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசுநேற்று வெளியிட்ட செய்தி: ஆதிதிராவிடர், பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டுப் பணிக்கான தனி பணிக்குழு நிதியான ரூ.50 லட்சத்தில் இருந்து கிடைக்கும் வட்டித் தொகையை கொண்டு ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய ஆதிதிராவிட கிறிஸ்தவர்களின் சிறந்த 10 படைப்புகள் மற்றும் ஆதிதிராவிடர் அல்லாதோர் ஒருவரின் … Read more

மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம்: காமராஜர் பிறந்தநாளில் தொடங்க பரிசீலனை

சென்னை: மேற்படிப்புக்கு செல்லும் அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தை காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15-ம் தேதி அமல்படுத்தலாமா என தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது. தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வந்த மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, மேற்படிப்புக்கு செல்லும் அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 கல்வி உதவித்தொகை … Read more

உள்ளாட்சி அமைப்புகளில் மகளிர் வகிக்கும் பதவிகளில் குடும்பத்தினரின் தலையீட்டை தடுக்கவும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் மகளிர் வகிக்கும் பதவிகளில் அவர்களது கணவர்களோ அல்லது உறவினர்களோ தலையிடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: ” மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டும் அம்மா!” என்று பெண்ணின் உயர்வைப் போற்றிப் பாடினார் கவிமணி தேசிக விநாயகம். “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்” என்று முழங்கினார் மகாகவி பாரதியார். … Read more

இலங்கை: ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் நான்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

கொழும்பு: ரணில் விக்ரமசிங்க, இலங்கை பிரதமராக பதவியேற்று இரண்டு நாள் கழித்து அவரின் அமைச்சரவையில் புதிதாக நான்கு அமைச்சர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். நெருக்கடியான சூழலில் இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக் கொண்டுள்ளார். இவர், ஏற்கனவே 5 முறை பிரதமராகவும், 2 முறை எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். மொத்தம் 225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற 113 உறுப்பினர்கள் ஆதரவு வேண்டும். பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு … Read more

தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்கத் தேர்தல் நடத்த இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்கத்திற்கு தேர்தல் நடத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்கத்திற்கு வரும் 22-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி சென்னையைச் சேர்ந்த கபடி வீரர் திருவேல் அழகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில், கபடி விளையாட்டு குறித்து போதிய நிபுணத்துவம் இல்லாதவர்கள் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு … Read more

‘‘உயிரோடு இருந்தால், லாட்டரி வாங்கிக் கொண்டே இருப்பேன்’’- லாட்டரியில் ரூ.62 லட்சத்தை இழந்த நூல் வியாபாரி தற்கொலைக்கு முன் வீடியோ வெளியீடு

ஈரோடு: ஈரோட்டில் தடைசெய்யப்பட்ட லாட்டரியால், ரூ 62 லட்சத்தை இழந்த நூல் வியாபாரி, தற்கொலைக்கு முன்பாக திமுக கவுன்சிலரின் கணவர் பெயரைக் குறிப்பிட்டு அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு எல்லப்பாளையம் முல்லை நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (54). நூல் வியாபாரியான இவர், நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு முன்பாக உருக்கமாக பேசி வீடியோ பதிவு செய்த ராதாகிருஷ்ணன், அதில் தனது தற்கொலைக்கான காரணத்தைக் குறிப்பிட்டுள்ளார். … Read more