அடுத்தது கோதுமை; சமையல் எண்ணெயை தொடர்ந்து கடும் விலை உயர்வு: உற்பத்தி பாதிப்பு; ஏற்றுமதி நிறுத்தம்

புதுடெல்லி: உலகளாவிய சூழலால் இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை விண்ணை தொட்டும் வரும் நிலையில் முக்கிய உணவுப்பொருளான கோதுமை விலையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனையடுத்து கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த சூழலில் விலையேற்றத்துக்கான காரணம் மற்றும் அது எப்போது குறையும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. உலகம் முழுவதும் எண்ணெய் வித்துகள் உற்பத்தி பாதிக்கப்பட்டு சமையல் எண்ணெய்க்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அதன் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் பல ஐரோப்பிய நாடுகளில் … Read more

தமிழகத்தில் புதிதாக 35 பேருக்கு கரோனா பாதிப்பு

சென்னை : தமிழகத்தில் இன்று ஆண்கள் 22, பெண்கள் 13 என மொத்தம் 35 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 21 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 54,591 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 34 லட்சத்து 16,158 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 51 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 408 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் நேற்று கரோனா … Read more

விசாரணை கைதிகள் மர்ம மரணம் | உறுதியான நடவடிக்கை தேவை – விஜயகாந்த்

சென்னை: விசாரணை கைதிகள் மர்ம மரணம் விவகாரத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளும், தமிழக அரசும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் சமீபகாலமாக விசாரணைக் கைதிகள் மர்மமான முறையில் மரணம் அடையும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த மாதம் 18-ம் தேதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சென்னையைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் … Read more

கேரளாவைப் போன்று தமிழ்நாடு ஆட்சிப் பணியை உருவாக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் கருத்து 

சென்னை: அனைத்து துறை அதிகாரிகளும் ஐஏஎஸ் அந்தஸ்து பெறும் வகையில், கேரள அரசை போல, அனைத்து குரூப் 1 அதிகாரிகளையும் இணைத்து தமிழ்நாடு ஆட்சிப் பணியை உருவாக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 1 தேர்வு எழுதி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறையில் உதவி இயக்குனர்களாகவும், இணை இயக்குனர்களாகவும் பதவி வகிக்கும் ஆனந்தராஜ் உள்ளிட்ட 98 பேர், தங்களை … Read more

மத்திய அரசின் முயற்சியால் இந்திய பொருளாதாரம் மீட்சி அடைந்து வருகிறது: ராஜ்நாத் சிங் பெருமிதம்

லக்னோ: கோவிட்-19 இடையே அரசு எடுத்த முழுமூச்சான முயற்சிகளின் காரணமாக இந்திய பொருளாதாரம் மீட்சி அடைந்து வருகிறது என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் இன்று இந்திய பட்டயக் கணக்காளர்களின் நிறுவனத்தின் (ஐசிஏஐ) மத்திய இந்திய பிராந்திய குழுவின் லக்னோ கிளை ஏற்பாடு செய்த நிதிச் சந்தை குறித்த பயிலரங்கில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாற்றினார். பொருளாதாரம் தொடர்பான புதிய முன்னேற்றங்களைப் பற்றி பங்கேற்பாளர்களுக்கு தெரியப்படுத்தி இந்தத் துறையுடன் தொடர்புடைய … Read more

பற்றாக்குறையை சமாளிக்க ஆந்திராவில் இருந்து இறக்குமதி: மதுரையில் இரண்டாம் தர தக்காளி விலையே கிலோ ரூ.85

மதுரை; உள்ளூர் உற்பத்தி குறைந்ததால் பற்றாக்குறையை சமாளிக்க கர்நாடகா, ஆந்திராவில் இருந்து இறக்குமதி செய்தும் இரண்டாம் தர தக்காளி விலையே இன்று ரூ.85 விற்பனையானது. அதனால், நடுத்தர, ஏழை மக்கள் தக்காளி வாங்க முடியாமல் கவலையடைந்துள்ளனர். அன்றாட சமையலில் தக்காளி அத்தியாவசிய காய்கறியாக உள்ளது. அதன் விலை திடீரென்று உயந்து, குறைந்து வந்தாலும் பெரும்பாலான நாட்களில் கிலோ ரூ.5 முதல் ரூ.15 வரை நிலையாக காணப்படும். ஆனால், கரோனாவுக்கு பிறகு தக்காளி விலையை நிர்ணயிக்கவே முடியவில்லை. திடீரென்று … Read more

சிசிடிவி கேமராக்களுடன் அரசுப் பேருந்துகள்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: நிர்பயா பாதுகாப்பான நகரத் திட்டத்தின் கீழ், மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் பயணம் செய்யும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக முதற்கட்டமாக 500 பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் அவசர அழைப்பு பொத்தான்கள் பொருத்தப்பட்டு அதன் செயல்பாட்டினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, போக்குவரத்துத் துறையில் 136 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: போக்குவரத்துத் துறை சார்பில் பொது மக்களின் பாதுகாப்பான பயணத்திற்காக … Read more

உ.பி. கியான்வாபி மசூதியில் கள ஆய்வுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே கியான்வாபி மசூதி உள்ளது. மசூதி வளாகத்தின் வெளிப்புறச் சுவரில் சிங்கார கவுரி அம்மன் சிலை உள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இந்த அம்மனுக்கு பூஜைகள் நடத்த அனுமதிக்கப்படுகிறது. தினமும் பூஜை நடத்த அனுமதி கோரி 5 பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த நீதிமன்றம் கியான்வாபி மசூதியில் கள ஆய்வு நடத்த குழு அமைத்தது. இதை எதிர்த்து மசூதி நிர்வாகமான அஞ்சுமன் … Read more

தக்காளி விலை கிடு கிடுவென உயர்வு: தமிழக விவசாயிகளுக்கு பலன் இல்லை

திருப்பூர்: தக்காளி விலை உயர்வால் தங்களுக்கு பயனில்லை என தமிழக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக, பல்வேறு மாவட்டங்களில் கோடைமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டு, வரத்து குறைந்த நிலையில், தக்காளி விலையும் உயா்ந்தது. விளைச்சல் அதிக அளவில் இருந்ததால் கடந்த மாதம் வரை ஒரு கிலோ தக்காளி ரூ.15 வரை விற்கப்பட்டது. பின்னா் பரவலாக மழை பெய்ததன் காரணமாக, தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்தும் குறைந்தது. இதனால் கடந்த … Read more