27 உயிர்களைப் பறித்த டெல்லி தீ விபத்து: 2 பேர் கைது; கட்டிட உரிமையாளருக்கு போலீஸ் வலை

மேற்கு டெல்லியான முண்டக் பகுதியின் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு வணிக வளாக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். இந்த சோக சம்பவம் தொடர்பாக கட்டிடடத்தில் இருந்த சிசிடிவி கேமரா அலுவலகத்தைச் சேர்ந்த ஹரீஷ் கோயல், வருண் கோயல் ஆகிய இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். கட்டிடத்தில் தீ தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவுமே மேற்கொள்ளப்படாததால் அக்கட்டிடத்தின் உரிமையாளரை மனீஷ் லக்ராவை போலீஸார் தேடி வருகின்றனர். முன்னதாக நேற்று (வெள்ளிக்கிழமை) … Read more

தஞ்சாவூர் மெலட்டூர், சாலியமங்கலத்தில் பாகவத மேளா – ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி விழாவையொட்டி இன்று தொடங்குகிறது

தஞ்சாவூர்: ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி விழாவையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூர் மற்றும் சாலியமங்கலத்தில் பாகவத மேளா நாட்டிய நாடகம் இன்று தொடங்குகிறது. மெலட்டூரில் உள்ள ஸ்ரீ லஷ்மிநரசிம்ம சுவாமி கோயில் அருகே யுள்ள ஸ் நல்லி கலையரங்கத்தில் மெலட்டூர் பாகவத மேளா நாட்டிய நாடக அறக்கட்டளை, மெலட்டூர் பாகவத மேளா நாட்டிய வித்யா சங்கம் ஆகியவை சார்பில் பாகவத மேளா நாட்டிய நாடகம் இன்று தொடங்குகிறது. தொடர் நிகழ்ச்சிகள் மாலை 6 மணிக்கு ஸ்லஷ்மி நரசிம்மர் அபிஷேகம், இரவு … Read more

மடோனாவுக்கு ஸ்லோகங்கள் கற்றுத்தந்த சம்ஸ்கிருத அறிஞர் வகீஸ் சாஸ்திரி மறைவு

வாரணாசி: உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்த சம்ஸ்கிருத அறிஞர் பத்மஸ்ரீ பாகிரத் பிரசாத் திரிபாதி (88). இவர் வகீஸ் சாஸ்திரி என அழைக்கப்பட்டார். உடல்நலக் குறைவு காரணமாக கடந்த புதன்கிழமை இரவு இவர் காலமானார். இவரது இறுதிச் சடங்குகள் வாரணாசியில் உள்ள ஹரீஸ்சந்த்ரா படித்துறையில் நேற்று முன்தினம் நடந்தது. இவரது சீடர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். பாப் பாடகி மாடானோ 24 ஆண்டுகளுக்கு முன்பு ‘ரே ஆஃப் லைட்’ என்ற இசை ஆல்பம் தயாரித்த போது … Read more

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகளில் சீருடை விநியோகம்

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச சீருடைகள் பள்ளிகளிலேயே நேரடியாக விநியோகம் செய்யப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை சத்துணவு உண்ணும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கான விநியோகப் பணிகள் ஆண்டுதோறும் கல்வி மாவட்ட அளவில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதற்கிடையே வரும் … Read more

ஆதாரில் பெயர் மாற்றம் செய்ய சர்ச் வழங்கிய திருமண சான்றை ஆதாரமாக ஏற்க முடியாதது ஏன்?: மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு

மும்பை: திருமணத்துக்குப் பிறகு பெண்களின் பெயரில் மாற்றம் ஏற்படுகிறது. சில பெண்கள், கணவரின் பெயரை தங்கள் பெயரோடு இணைத்து கொள்கின்றனர். சிலர் தங்களது முதல் எழுத்தை மாற்றிக் கொள்கின்றனர். இதற்கேற்ப ஆதார், பான் எண், வங்கிக் கணக்கு, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களில் பெண்கள் தங்களது பெயர்களில் மாற்றம் செய்யவேண்டிய அவசியம் எழுகிறது. மகாராஷ்டிர தலைநகர் மும்பையை சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவ பெண் மரிசா அல்மைதாவுக்கு (27) கடந்த ஆண்டு டிசம்பரில் உள்ளூர் தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு … Read more

ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலிபா காலமானார்

அபுதாபி: ஐக்கிய அரபு அமீரக தலைநகராக அபுதாபி செயல்படுகிறது. உலகில் எண்ணெய் வளமிக்க நாடுகளின் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம் 6-வது இடத்தில் உள்ளது. கடந்த 2004-ம் ஆண்டு முதல் இந்த நாட்டின் அதிபராக ஷேக் கலிபா பின் சையத் அலி நஹ்யான் (73) பதவி வகித்து வந்தார். பல்வேறு நெருக்கடியான நேரத்தில் நாட்டை திறம்பட வழிநடத்தினார். அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் நட்பு பாராட்டினார். கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டில் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார். … Read more

மெகா தடுப்பூசி முகாம் மீண்டும் நிறுத்தம்

சென்னை: தமிழகத்தில் வாரம்தோறும் சனிக்கிழமையில் நடைபெற்று வந்த மெகா கரோனா தடுப்பூசி முகாம் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்தும் வகையில் வாரம்தோறும் சனிக்கிழமைகளில் மாநிலம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வந்தன. இதுவரை 29 முகாம்கள் இதற்கிடையே தொற்று பாதிப்பு குறைந்ததாலும், பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு கட்டாயம் தடுப்பூசி செலுத்தி யிருக்க அவசியமில்லை என்றுஅறிவிக்கப்பட்டதாலும், வாரம் தோறும் நடைபெற்று வந்த மெகா முகாம் நிறுத்தப்பட்டது. இதற்கிடையே, கரோனா … Read more

உக்ரைனில் செமஸ்டர் கட்டணம் செலுத்தாததால் மருத்துவப் பல்கலை.யில் இருந்து 104 இந்திய மாணவர்கள் நீக்கம்

புதுடெல்லி: செமஸ்டர் கட்டணம் செலுத்தாததால், உக்ரைனின் தனியார் மருத்துவப் பல்கலைக்கழகம் ஒன்றில் இருந்து, தமிழக மாணவர்கள்உள்ளிட்ட 104 இந்திய மாணவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உக்ரைன் மீது, கடந்த பிப்ரவரி முதல் ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதனால், அங்குள்ள தேசிய மருத்துவப் பல்கலைக்கழகங்களில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். இதில் அதிகமாக சிக்கிய இந்தியரை மீட்க, பிரதமர் நரேந்திர மோடியின் ’ஆப்ரேஷன் கங்கா’ மூலம் சிறப்பு விமானங்கள் அமர்த்தப்பட்டன. இதன்மூலமாக, மார்ச் இரண்டாவது … Read more

வீட்டில் அலுவலக பணி சூழல் மாற்றம் – அலுவலகம் வர சொன்னதால் 800 ஊழியர்கள் ராஜினாமா

பெங்களூரு: வீட்டில் இருந்து அலுவலக பணிபுரியும் சூழல் மாறி, அலுவலகம் வந்து பணிபுரிய சொன்னதால் 800 ஊழியர்கள் தங்களது வேலையை ராஜினாமா செய்துள்ளனர். ஆன்லைன் மூலம் கோடிங் கற்றுத்தரும் வொயிட் ஹாட் ஜூனியர் என்ற நிறுவனத்தில் பணிபுரியும் 800 நிரந்தர பணியாளர்களும் கடந்த 2 மாதங்களில் தங்களது வேலையை ராஜினாமாசெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வொயிட் ஹாட் ஜூனியர் நிறுவனத்தை பைஜூஸ் நிறுவனம் 2020 ஆண்டு கையகப்படுத்தியது. இந்நிறுவனத்தை 30 கோடி டாலருக்கு பைஜூஸ் வாங்கியது குறிப்பிடத்தக்கது. கடந்த … Read more

சென்னை ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் மே 28-ல் கருணாநிதி சிலை திறப்பு – வெங்கய்ய நாயுடு திறந்து வைக்கிறார்

சென்னை: ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை மே 28-ம் தே திகுடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு திறந்து வைக்கிறார். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. 12 அடி உயர பீடத்தில் 16 அடி உயரத்தில் ரூ.1.7 கோடி மதிப்பில் கருணாநிதி சிலை அமைக்கப்படுகிறது. இந்த சிலையின் திறப்பு விழா, வரும் 28-ம் தேதி நடக்கிறது. விழாவில் குடியரசு துணைத் … Read more