பேருந்து கட்டண உயர்வுக்கு பதிலாக சீர்திருத்தங்கள் மூலம் லாபம் ஈட்டவும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: கட்டண உயர்வுக்கு பதிலாக சீர்திருத்தங்கள் மூலம் போக்குவரத்து கழகங்களை லாபத்தில் இயக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அன்புமணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “தமிழகத்தில் பேருந்து கட்டணங்களை மக்களை பாதிக்காத வகையில் உயர்த்துவது குறித்து முதல்வர் ஸ்டாலின் முடிவு எடுப்பார் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது மக்களை அச்சத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தும். இது தேவையற்றது; தவிர்க்கப்பட வேண்டும். பேருந்து கட்டணம் … Read more

இலங்கை தமிழருக்கு உதவ தமிழக அரசு எடுத்துள்ள முயற்சிகளுக்கு பாராட்டுகள்: வைகோ

சென்னை: இலங்கையில் வசிக்கும் ஈழத்தமிழர்களின் துயரை துடைப்பதற்கு தமிழக அரசு எடுத்துள்ள முயற்சிகள் பாராட்டுக்குரியது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, திராவிட இயக்கப் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் இன்று சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது, இலங்கையின் தற்போதைய சூழல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதன்பின்னர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ … Read more

டிஎன்பிஎஸ்சி குருப் 4 பயிற்சி வினா விடை தொகுப்பு – பகுதி 6

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுகள் மற்றும் பிற போட்டித்தேர்வுகளுக்கு தங்களை தயார் செய்து வரும் போட்டியாளர்கள், மாணவர்களின் முறையான திருப்புதலுக்கு உதவும் வகையில் கொள்குறி வினா-விடைகள் தொகுத்துத் தரப்படும் தொடர் இது. கடந்த புதன்கிழமை (மே 11) அன்று வெளியிடப்பட்ட பகுதி-5இல் ‘இந்தியா-2இந்திய மாநிலங்கள், முக்கிய நகரங்கள் – அ)’ என்னும் தலைப்பின் கீழ் 20 கொள்குறி வினாக்களை வெளியிட்டிருந்தோம். இன்று தமிழ் நாடு -2 (தமிழக அரசியல் – அ) என்னும் தலைப்பின் கீழ் 20 கொள்குறி … Read more

'அத்வானியே நான் போற்றும் அரசியல்வாதி' – பிரசாந்த் கிஷோர்

புதுடெல்லி: தான் போற்றும் அரசியல்வாதி எல்கே அத்வானி என்று கூறியுள்ளார் பிரசாந்த் கிஷோர். இந்தியாவில் தேர்தல் திட்டமிடுதலுக்கு புகழ்பெற்ற ஐ-பேக் என்ற அமைப்பின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர். மேற்கு வங்கம், தமிழகம், டெல்லி என பல மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலில் பணியில் பங்கேற்று வெற்றி கண்ட பிரசாந்த் கிஷோர், இப்போது பிஹாரை மையமாக கொண்டு புதிய கட்சி ஒன்றை தொடங்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். அதன் முதல்கட்டமாக மகாத்மா காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2ம் தேதி 3,000 கிமீ … Read more

கூடுதல் பாமாயில் சப்ளையை எதிர்த்த வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு

சென்னை: கூடுதல் பாமாயில் வழங்க உணவுப் பொருட்கள் சப்ளை நிறுவனங்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்குவதற்காக ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட 4 கோடி பாக்கெட் பாமாயில் சப்ளை செய்வதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் டெண்டர் கோரியிருந்தது.ஒரு லிட்டர் 120 … Read more

9-வது வாசனை திரவியக் கண்காட்சி தொடக்கம்: ஏலக்காய், கிராம்பு சிற்பங்கள்

கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூரில் கோடை விழாவின் ஒரு பகுதியான வாசனை திரவிய கண்காட்சியில் ஏலக்காய், கிராம்புகளால் வடிவமைக்கப்பட்ட சிற்பங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூரில் கோடைவிழாவை ஒட்டி 9-வது வாசனை திரவிய கண்காட்சி இன்று தொடங்கியது. இந்த கண்காட்சியை வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் தொடங்கி வைத்தார். கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பாதிப்பு காரணமாக இந்த கண்காட்சிகள் நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது. குறிப்பாக தோட்டக்கலை சார்பில், … Read more

முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வழக்கு: காவல்துறை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமீன் வழங்கியதை ரத்து செய்யக்கோரி நடிகை சாந்தினி தொடர்ந்த வழக்கில் தமிழக காவல்துறை மற்றும் மணிகண்டன் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி விட்டதாக நடிகை சாந்தினி கொடுத்த புகாரின் அடிப்படையில் மணிகண்டன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் மணிகண்டன் மீது … Read more

டெல்லி: முண்டக் மெட்ரோ நிலையம் அருகே பயங்கர தீ விபத்து – 27 பேர் உயிரிழந்த சோகம்

டெல்லி: மேற்கு டெல்லியான முண்டக் பகுதியின் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு வணிக வளாக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. மேலும் பலர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று மாலை அளவில் 4.40 மணி அளவில் ஏற்பட்தாக சொல்லப்படும் இந்த பயங்கர தீவிபத்தை சுமார் 24 தீயணைப்பு குழுவினர் போராடி அணைத்து வருகின்றனர். மூன்றடுக்கு கொண்ட வணிக வளாகத்தில் இருந்து இதுவரை 27 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. … Read more

மாணவிகள் ஹிஜாப் அணிவதைத் தடுத்த தேர்வு மைய கண்காணிப்பாளர் மீது கடும் நடவடிக்கை தேவை: வைகோ 

சென்னை: மாணவிகள் ஹிஜாப் அணிவதைத் தடுத்த தேர்வு மைய கண்காணிப்பாளர் மீது கடும் நடவடிக்கை தேவை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள களமருதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, மே 12 ஆம் தேதி ஆங்கிலத் தேர்வு நடைபெற்றது. முஸ்லிம் மாணவிகள் 6 பேர் ஹிஜாப் அணிந்து, தேர்வு எழுத வந்தனர். தேர்வுமைய கண்காணிப்பாளர் … Read more

ஐக்கிய அரபு அமீரக அதிபர் மறைவு: ஒருநாள் துக்கம் அனுசரிக்கும் இந்தியா

புதுடெல்லி: ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் மறைந்தைத் தொடர்ந்து சனிக்கிழமை இந்தியாவில் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கும் வெள்ளிக்கிழமை தகவல் அனுப்பியுள்ளது. அதன்படி, ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் வெள்ளிக்கிழமை காலமானார். மறைந்த அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், சனிக்கிழமை நாடுமுழுவதும் ஒரு நாள் அரசு துக்கம் … Read more