முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வழக்கு: காவல்துறை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
டெல்லி: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமீன் வழங்கியதை ரத்து செய்யக்கோரி நடிகை சாந்தினி தொடர்ந்த வழக்கில் தமிழக காவல்துறை மற்றும் மணிகண்டன் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி விட்டதாக நடிகை சாந்தினி கொடுத்த புகாரின் அடிப்படையில் மணிகண்டன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் மணிகண்டன் மீது … Read more