இலங்கையில் உள்ள தமிழக, புதுச்சேரி மீனவர்களின் படகுகளை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்: புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் நம்பிக்கை
காரைக்கால்: இலங்கையில் பிடித்து வைக்கப்பட்டுள்ள தமிழக, புதுச்சேரி மீனவர்களின் விசைப்படகுகளை மீட்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும் என புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று(மே 13) காரைக்கால் வந்த புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.செல்வம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தங்கும் விடுதியில் பல்வேறு துறை அதிகாரிகளுடன், காரைக்கால் வளர்ச்சிக் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இதில் மாவட்ட துணை ஆட்சியர்கள் எம்.ஆதர்ஷ்(வருவாய்), எஸ்.பாஸ்கரன்(பேரிடர் மேலாண்மை), … Read more