மாட்டிறைச்சி உண்ண தடை விதிக்கும் பிற்போக்குத்தனத்தை உ.பியிலிருந்து இறக்குமதி செய்வதுதான் திராவிட மாடல் ஆட்சியா? சீமான்

சென்னை: மாட்டிறைச்சி உண்ணுவதற்குத் தடைவிதிக்கும் பிற்போக்குத்தனத்தை உத்திரப்பிரதேசத்திலிருந்து தமிழகத்திற்கு இறக்குமதி செய்வதுதான் திராவிட மாடல் ஆட்சியா? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: வேலூர் மாவட்டம், ஆம்பூரில் நடத்தப்படவிருந்த பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதும், அதற்கு எதிர்ப்புக் கிளம்பியதும் அந்நிகழ்வே ஒட்டுமொத்தமாக நிறுத்தப்பட்டதுமான செயல்பாடுகள் ஒருபோதும் ஏற்புடையதல்ல. உணவுப்பழக்க வழக்கம் என்பது தனிப்பட்ட அவரவர் விருப்புரிமை சார்ந்தது; அதில் அரசோ, அரசியல் இயக்கங்களோ தலையிட்டு, இடையூறுசெய்வது … Read more

நான் ஷிரீன் அபு அக்லே… இஸ்ரேலால் கொல்லப்பட்ட ஊடகக் குரல்!

பாலஸ்தீனத்தில் இஸ்ரேலால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட மேற்குக் கரை பகுதிகளில் மணல் மேடான சாலையில் சரிந்து கிடத்த ஷிரீனை காக்கும்படி அருகிலிருக்கும் மற்றொரு பெண் பத்திரிகையாளர் கதறுகிறார். அவர் ஷிரீன் உடல் அருகே செல்லும் போதெல்லாம் துப்பாக்கிச் சூடு சத்தம் தீவிரமாக கேட்கிறது. இதனைக் கண்ட அப்பகுதி பாலஸ்தீன இளைஞர் ஒருவர் ஷிரீனின் உடல் அருகே செல்கின்றார். பின்னர் அருகிலிருந்து பெண் பத்திரிகையாளர்களை அங்கிருக்கும் தடுப்பு சுவர் ஏறி தப்பிக்கச் சொல்கிறார். பின்னர் துப்பாக்கிச் சத்தங்களுக்கு மத்தியில் குனிந்தபடி … Read more

நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு 

மதுரை: நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக கோட்டாட்சியர் அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்யக்கோரி திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்துள்ளது. திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் வி.செல்வி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 5 வார்டுகள் உள்ளன. உள்ளாட்சி தேர்தலில் 4 வார்டுகளில் நான் உட்பட அதிமுக சார்பில் போட்டியிட்ட 4 பேர் தேர்வு செய்யப்பட்டோம். ஒரு வார்டில் … Read more

கரோனா பரவல்: 10 ஆயிரம் பேரை தனிமைப்படுத்திய வடகொரியா

கரோனா தடுப்பு நடவடிக்கையாக சுமார் 10,000 பேரை வடகொரியா தனிமைப்படுத்தியுள்ளது. உலகம் முழுவதையும் கரோனா உலுக்கி வந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளில் ஒருவருக்குகூட பாதிப்பு ஏற்படவில்லை என பெருமையாக கூறி வந்த வடகொரியாவில் முதல் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் அவசர நிலை அறிவிக்கப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தி வருகின்றது. வடகொரியாவில் கண்டறியப்பட்டுள்ளது ஒமைக்ரான் வைரஸ் என்று கூறப்படுகிறது. சீனாவுடனான வர்த்தக உறவினால் இந்த கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று முதலில் கூறப்பட்டு … Read more

பேரறிவாளன் வழக்கில் குடியரசுத் தலைவருக்கே முடிவெடுக்கும் அதிகாரம்: மத்திய அரசு

புதுடெல்லி: மத்திய அரசின் புலனாய்வு அமைப்பு விசாரணை செய்த வழக்கில், மாநில அரசு முடிவெடுக்க முடியாது. எனவே பேரறிவாளன் வழக்கில் குடியரசு தலைவருக்கு மட்டுமே முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது, எனவே பேரறிவாளனின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த எழுத்துப்பூர்வ வாதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கின் … Read more

ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தம்: எலான் மஸ்க் திடீர் அறிவிப்பு

நியூயார்க்: ட்விட்டருடனான தனது ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், ட்விட்டர் சமூக வலைத்தளத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்குகிறார். ட்விட்டர் நிர்வாகக் குழு மற்றும் மஸ்க் தரப்பில் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த ஒப்பந்தம் உறுதியாகியுள்ளது. ட்விட்டர் சமூக வலைதளத்தில் பயனர்களின் கருத்து சுதந்திரம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த எலான் மஸ்க், அதனை கைப்பற்ற வேண்டும் என்ற தனது கோபத்தை தொடர்ந்து … Read more

வரலாற்றில் முதல் முறை | நிலவில் சேகரிக்கப்பட்ட மண்ணை கொண்டு செடி வளர்த்த விஞ்ஞானிகள்

வாஷிங்டன்: வரலாற்றிலேயே முதல் முறையாக நிலவில் சேகரிக்கப்பட்ட மண்ணை கொண்டு செடியை வளர்த்துள்ளனர் விஞ்ஞானிகள். விண்வெளி ஆய்வில் இது முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஜூலை 21, 1969 வாக்கில் நிலவில் தனது காலடி தடத்தை நிலவில் பதித்தார் ஆர்ம்ஸ்ட்ராங். அதனை உலகமே கொண்டாடியது. தொடர்ந்து அமெரிக்கா, இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் விண்வெளி சார்ந்த ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. பிற கிரகங்களில் மனிதர்கள் உயிர் வாழ சாத்தியம் உள்ளதா என்பதை பொறுத்தே இந்த ஆய்வு … Read more

மேடவாக்கம் மேம்பாலத்தின் தாம்பரம் – வேளச்சேரி பாலப்பகுதியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: நெடுஞ்சாலைத் துறை சார்பில் 95.21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேடவாக்கம் மேம்பாலத்தின் தாம்பரம் – வேளச்சேரி பாலப்பகுதியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 13) திறந்து வைத்தார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், மேடவாக்கத்தில், 95.21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேடவாக்கம் மேம்பாலத்தின் தாம்பரம் – வேளச்சேரி பாலப்பகுதியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழக முதல்வர் ஏற்கனவே … Read more

பாலக்கோடு அருகே வயலில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி காட்டு யானை பலி

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மின்வேலி அமைக்கப்பட்ட நெல்வயலில் நுழைய முயன்ற மக்னா காட்டு யானை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளது. பாலக்கோடு வட்டம் பஞ்சப்பள்ளி அடுத்த நல்லாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சீனிவாசன் (52). இவர் தனது நிலத்தில் நெல் நடவு செய்துள்ளார். இவரது விவசாய நிலம் வனத்தை ஒட்டி அமைந்துள்ளது. இந்த நிலத்தில் இரவில் வனவிலங்குகள் நுழைவதைத் தடுக்கும் நோக்கத்துடன் வயலின் மையத்தில் மின் இணைப்பு ஏற்படுத்தி விளக்கு ஒன்றை அமைத்து இரவில் வெளிச்சம் … Read more

'தமிழக மாணவர்களிடம் இந்தியை திணிக்கக் கூடாது' – அமைச்சர் பொன்முடி ஆளுநருக்கு கோரிக்கை

கோவை: தமிழக மாணவர்களிடம் இந்தி மொழியை திணிக்கக் கூடாது என பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தமிழக ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தார். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 37-வது பட்டமளிப்பு விழா இன்று (மே 13) நடந்தது. துணைவேந்தர் காளிராஜ் வரவேற்றார். ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி , இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் ஆகியோர் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினர். இவ்விழாவில் , உயர்கல்வி அமைச்சர் பொன்முடி பேசியதாவது, “தமிழகத்தில் … Read more