வரலாற்றில் முதல் முறை | நிலவில் சேகரிக்கப்பட்ட மண்ணை கொண்டு செடி வளர்த்த விஞ்ஞானிகள்

வாஷிங்டன்: வரலாற்றிலேயே முதல் முறையாக நிலவில் சேகரிக்கப்பட்ட மண்ணை கொண்டு செடியை வளர்த்துள்ளனர் விஞ்ஞானிகள். விண்வெளி ஆய்வில் இது முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஜூலை 21, 1969 வாக்கில் நிலவில் தனது காலடி தடத்தை நிலவில் பதித்தார் ஆர்ம்ஸ்ட்ராங். அதனை உலகமே கொண்டாடியது. தொடர்ந்து அமெரிக்கா, இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் விண்வெளி சார்ந்த ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. பிற கிரகங்களில் மனிதர்கள் உயிர் வாழ சாத்தியம் உள்ளதா என்பதை பொறுத்தே இந்த ஆய்வு … Read more

மேடவாக்கம் மேம்பாலத்தின் தாம்பரம் – வேளச்சேரி பாலப்பகுதியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: நெடுஞ்சாலைத் துறை சார்பில் 95.21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேடவாக்கம் மேம்பாலத்தின் தாம்பரம் – வேளச்சேரி பாலப்பகுதியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 13) திறந்து வைத்தார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், மேடவாக்கத்தில், 95.21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேடவாக்கம் மேம்பாலத்தின் தாம்பரம் – வேளச்சேரி பாலப்பகுதியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழக முதல்வர் ஏற்கனவே … Read more

பாலக்கோடு அருகே வயலில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி காட்டு யானை பலி

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மின்வேலி அமைக்கப்பட்ட நெல்வயலில் நுழைய முயன்ற மக்னா காட்டு யானை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளது. பாலக்கோடு வட்டம் பஞ்சப்பள்ளி அடுத்த நல்லாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சீனிவாசன் (52). இவர் தனது நிலத்தில் நெல் நடவு செய்துள்ளார். இவரது விவசாய நிலம் வனத்தை ஒட்டி அமைந்துள்ளது. இந்த நிலத்தில் இரவில் வனவிலங்குகள் நுழைவதைத் தடுக்கும் நோக்கத்துடன் வயலின் மையத்தில் மின் இணைப்பு ஏற்படுத்தி விளக்கு ஒன்றை அமைத்து இரவில் வெளிச்சம் … Read more

'தமிழக மாணவர்களிடம் இந்தியை திணிக்கக் கூடாது' – அமைச்சர் பொன்முடி ஆளுநருக்கு கோரிக்கை

கோவை: தமிழக மாணவர்களிடம் இந்தி மொழியை திணிக்கக் கூடாது என பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தமிழக ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தார். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 37-வது பட்டமளிப்பு விழா இன்று (மே 13) நடந்தது. துணைவேந்தர் காளிராஜ் வரவேற்றார். ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி , இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் ஆகியோர் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினர். இவ்விழாவில் , உயர்கல்வி அமைச்சர் பொன்முடி பேசியதாவது, “தமிழகத்தில் … Read more

ஞானவாபி மசூதி களஆய்வுக்கு தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: வாரணாசி ஞானவாபி மசூதியில் களஆய்வு நடத்தும் கீழ் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும், தற்போது உள்ள நிலையே தொடர வேண்டும் என கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதேசமயம் இந்த விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்க ஒப்புக் கொண்டுள்ளது. உத்தர பிரதேசம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள கியான்வாபி மசூதி வளாகத்தின் சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என … Read more

பேருந்து கட்டண சலுகையால் பெண்கள் ரூ.600 முதல் ரூ.1200 வரை சேமிக்கின்றனர்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: பேருந்து கட்டண சலுகை திட்டம், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியிலனப் பெண்கள் அதிகளவிற்கு பயன்பெறக்கூடிய திட்டமாக உள்ளது. இதனால், ஒவ்வொரு பெண்ணுக்கும் சராசரியாக 600 ரூபாயிலிருந்து 1200 ரூபாய் வரை மிச்சமாகக்கூடிய சாதனையை தமிழக அரசு செய்திருக்கிறது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா இல்லத் திருமண விழா சென்னையில் இன்று நடைபெற்றது. முன்னதாக, தாம்பரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜாவின் கட்சிப் … Read more

ஆக்கிரமிப்பு அகற்றும்போது மோதல்: ஆம் ஆத்மி எல்எல்ஏ உள்ளிட்டோர் கைது

புதுடெல்லி: வடக்கு டெல்லியில் நேற்று ரோகினி, கரோல் பாக் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதுபோல் தெற்கு டெல்லியில், அமர் காலனி காவல் நிலையம் அருகில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நேற்று காலையில் தொடங்கியது. மதன்பூர் காதர் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது அங்குள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானுல்லா கானும் பங்கேற்றார். ஒரு கட்டத்தில் பாதுகாப்பு படையினர் மீது கற்கள் வீசப்பட்டதால், பாதுகாப்பு படையினர் மற்றும் போராட்டக்கார்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து … Read more

ரெப்கோ நிர்வாகக் குழு தேர்தல்: கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் நேரில் ஆஜராக உத்தரவு

சென்னை: நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்தபடி ரெப்கோ வங்கி நிர்வாக குழுவிற்கு தேர்தல் நடத்தாததால் கூட்டுறவு சங்கங்களின் இணை செயலாளர் மற்றும் ரெப்கோ வங்கி நிர்வாக இயக்குனர் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரெப்கோ வங்கியின் நிர்வாக குழுவிற்கு தேர்தல் நடத்த உத்தரவிடக்கோரி தனபால் என்பவர் 2019-ல் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில் மத்திய மற்றும் மாநில அரசுகளால் 51 சதவீதத்திற்கு மேல் பங்கு மூலதமானத்தை வைத்திருக்கும் பட்சத்தில் அந்த நிறுவனத்தின் நிர்வாக குழுவில் … Read more

ம.பி.யில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு திமுக எம்.பி. நிதியுதவி

புதுடெல்லி: மத்திய பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் சிறுமிக்கு, திமுக எம்.பி. செந்தில் குமார் ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்தார். மத்திய பிரதேசத்தின் கர்கோன் மாவட்டத்தின் மலார்கன்ச் கிராமத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி, கடந்த மார்ச் 12-ம் தேதி தன் வீட்டில் தனியே இருந்துள்ளார். அப்போது, அந்த கிராமத்தைச் சேர்ந்த தீபக் யாதவ் (34) என்பவர் வீடு புகுந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார். இச்சம்பவத்தில் தீபக் யாதவ் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். … Read more

பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது ஓஎம்ஆர் சாலையோர பூங்கா: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உருவாக்கம்

சென்னை: சென்னை ஓஎம்ஆர் சாலையில் கஸ்துாரிபாய் நகர் முதல் திருவான்மியூர் ரயில் நிலையம் வரை உள்ள சாலையோர இடம் சீரமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டு பூங்காவாக உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள பல்வேறு பொது இடங்களை பொது மக்களுக்கு ஏற்ற பொழுதுபோக்கு இடமாக மாற்றும் பணியை சென்னை மாநகராட்சி செய்து வருகிறது. இதன்படி ஓ.எம்.ஆரில் கஸ்துாரிபாய் நகர், இந்திராநகர், திருவான்மியூர் உள்ளிட்ட பறக்கும் ரயில் நிலையங்களுக்கு கீழே உள்ள பகுதிகளை சீரமைத்து பொது மக்களுக்கு … Read more