ஆக்கிரமிப்பு அகற்றும்போது மோதல்: ஆம் ஆத்மி எல்எல்ஏ உள்ளிட்டோர் கைது

புதுடெல்லி: வடக்கு டெல்லியில் நேற்று ரோகினி, கரோல் பாக் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதுபோல் தெற்கு டெல்லியில், அமர் காலனி காவல் நிலையம் அருகில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நேற்று காலையில் தொடங்கியது. மதன்பூர் காதர் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது அங்குள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானுல்லா கானும் பங்கேற்றார். ஒரு கட்டத்தில் பாதுகாப்பு படையினர் மீது கற்கள் வீசப்பட்டதால், பாதுகாப்பு படையினர் மற்றும் போராட்டக்கார்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து … Read more

ரெப்கோ நிர்வாகக் குழு தேர்தல்: கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் நேரில் ஆஜராக உத்தரவு

சென்னை: நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்தபடி ரெப்கோ வங்கி நிர்வாக குழுவிற்கு தேர்தல் நடத்தாததால் கூட்டுறவு சங்கங்களின் இணை செயலாளர் மற்றும் ரெப்கோ வங்கி நிர்வாக இயக்குனர் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரெப்கோ வங்கியின் நிர்வாக குழுவிற்கு தேர்தல் நடத்த உத்தரவிடக்கோரி தனபால் என்பவர் 2019-ல் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில் மத்திய மற்றும் மாநில அரசுகளால் 51 சதவீதத்திற்கு மேல் பங்கு மூலதமானத்தை வைத்திருக்கும் பட்சத்தில் அந்த நிறுவனத்தின் நிர்வாக குழுவில் … Read more

ம.பி.யில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு திமுக எம்.பி. நிதியுதவி

புதுடெல்லி: மத்திய பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் சிறுமிக்கு, திமுக எம்.பி. செந்தில் குமார் ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்தார். மத்திய பிரதேசத்தின் கர்கோன் மாவட்டத்தின் மலார்கன்ச் கிராமத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி, கடந்த மார்ச் 12-ம் தேதி தன் வீட்டில் தனியே இருந்துள்ளார். அப்போது, அந்த கிராமத்தைச் சேர்ந்த தீபக் யாதவ் (34) என்பவர் வீடு புகுந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார். இச்சம்பவத்தில் தீபக் யாதவ் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். … Read more

பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது ஓஎம்ஆர் சாலையோர பூங்கா: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உருவாக்கம்

சென்னை: சென்னை ஓஎம்ஆர் சாலையில் கஸ்துாரிபாய் நகர் முதல் திருவான்மியூர் ரயில் நிலையம் வரை உள்ள சாலையோர இடம் சீரமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டு பூங்காவாக உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள பல்வேறு பொது இடங்களை பொது மக்களுக்கு ஏற்ற பொழுதுபோக்கு இடமாக மாற்றும் பணியை சென்னை மாநகராட்சி செய்து வருகிறது. இதன்படி ஓ.எம்.ஆரில் கஸ்துாரிபாய் நகர், இந்திராநகர், திருவான்மியூர் உள்ளிட்ட பறக்கும் ரயில் நிலையங்களுக்கு கீழே உள்ள பகுதிகளை சீரமைத்து பொது மக்களுக்கு … Read more

உத்தரபிரதேச மதரஸாக்களில் தேசிய கீதம் கட்டாயமானது

லக்னோ: உத்தரபிரதேச மதரஸாக்களில் நேற்று முதல், தேசிய கீதம் பாடுவதை, மதரஸா கல்வி கவுன்சில் கட்டாயமாக்கியது. உத்தரபிரதேச மதரஸாக்களில் வகுப்புகள் தொடங்கும் முன், தேசிய கீதம் பாடுவதை மாநில அரசு கட்டாயமாக்கியது. இதற்கான உத்தரவை உத்தரபிரதேச சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் டேனீஷ் ஆசாத் அன்சாரி பிறப்பித்தார். இதையடுத்து தேசிய கீதம் பாட வேண்டும் என்ற முடிவை உ.பி மதரஸா கல்வி வாரியம் கடந்த மார்ச்24-ம் தேதி எடுத்தது. இந்த உத்தரவு நேற்று முதல் அமல்படுத்தப்பட்டது. இந்த உத்தரவுப்படி, … Read more

'தமிழகத்தில் விரைவில் பேருந்து, மின் கட்டணம், பால் விலை உயர்த்தப்படும்' – ஈபிஎஸ் கணிப்பு

சேலம்: “நிதி ஆதாரத்தைப் பெருக்குவதற்கு இந்த அரசு எந்த திட்டத்தையும் கொண்டுவந்ததாக தெரியவில்லை. எனவே பேருந்துக் கட்டணத்தை நிச்சயமாக உயர்த்துவார்கள். வேறு வழிகிடையாது. ஏற்கெனவே அரசுப் போக்குவரத்துக் கழகம் நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளனர். எனவே விரைவில் பேருந்துக் கட்டணம் உயரும்” என்று சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சேலம் மாவட்டம் மெய்யனூரில் அம்மா இலவச தையல்பயிற்சி மையத்தை எதிர்கட்சித்தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். பின்னர் … Read more

கர்நாடகாவில் மதமாற்ற தடை மசோதாவை நிறைவேற்ற முடிவு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் எஸ்.சி. எஸ்.டி. பிரிவை சேர்ந்தவர்கள் அதிகளவில் கிறிஸ்துவ மதத்துக்கு மதமாற்றம் செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வரும் முயற்சியில் முதல்வர் பசவராஜ் பொம்மை இறங்கினார். இதற்கு கிறிஸ்துவ, முஸ்லிம் அமைப்புகள் மட்டுமல்லாமல் காங்கிரஸ், மஜத ஆகிய எதிர்க் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத சட்ட மேலவையில் மசோதா தாக்கல் செய்யப்படவில்லை. இதுகுறித்து கர்நாடக சட்ட அமைச்சர் மாதுசாமி நேற்று கூறியதாவது: மதமாற்ற தடை … Read more

முதுகலை நீட் தேர்வுக்கு கால நீட்டிப்பு வழங்குங்கள்: சு.வெங்கடேசன் எம்.பி.

சென்னை: பதில் கடிதம் அனுப்ப இவ்வளவு கால நீட்டிப்பு எடுத்துக் கொண்டதைப் போல, முதுலை நீட் தேர்வுக்கும் கால நீட்டிப்பு வழங்குங்கள் என்று மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். முதுகலை நீட் தேர்வு மே 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என இந்திய மருத்துவர்கள் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன. ஆனால் முதுநிலை நீட் தேர்வு திட்டமிட்டபடி வரும் 21 ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய … Read more

சத்தீஸ்கர் ஹெலிகாப்டர் விபத்து: 2 விமானிகள் பலி: விசாரணைக்கு டிஜிசிஏ உத்தரவு

சத்தீஸ்கர் மாநில அரசுக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ராய்பூரில் உள்ள சுவாமி விவேகானந்தர் விமான நிலையம் அருகே நேற்றிரவு விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு பைலட்டுகளும் உயிரிழந்தனர். இந்த ஹெலிகாப்டரை விமானிகள் கேப்டன் கோபால் கிருஷ்ண பாண்டா, கேப்டன் ஏபி.ஸ்ரீவஸ்தவா ஆகியோர் இயக்கிக் கொண்டிருந்தனர். ஹெலிகாப்டரை தரையிறக்க முயன்றபோது திடீரென தீ பிடித்தது. இதில் ஹெலிகாப்டர் நிலை குலைந்து கீழே விழுந்தது. ஹெலிகாப்டரில் இருந்து பைலட்டுகள் மீட்கப்படும்போது உயிர் இருந்தது. இருப்பினும் இருவருமே சிகிச்சை பலனின்றி இறந்தனர். விபத்துக்கான காரணம் … Read more

இலங்கைக்கு வழங்க 40 ஆயிரம் டன் அரிசி கொள்முதல்: அரசாணைக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

சென்னை: இலங்கைக்கு வழங்குவதற்காக 40 ஆயிரம் டன் அரிசி கொள்முதல் செய்வது குறித்த அரசாணைக்குதடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை மக்களுக்கு உதவும் நோக்கில், 40 ஆயிரம் டன் அரிசி கொள்முதல் செய்து வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். இந்த அரிசி அதிக விலைக்கு வாங்கப்பட உள்ளதாகவும், இதில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்பு உள்ளது என்று கூறியும்திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணமங்கையை சேர்ந்த ஜெயசங்கர் என்பவர், சென்னை … Read more