கர்நாடகாவில் மதமாற்ற தடை மசோதாவை நிறைவேற்ற முடிவு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் எஸ்.சி. எஸ்.டி. பிரிவை சேர்ந்தவர்கள் அதிகளவில் கிறிஸ்துவ மதத்துக்கு மதமாற்றம் செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வரும் முயற்சியில் முதல்வர் பசவராஜ் பொம்மை இறங்கினார். இதற்கு கிறிஸ்துவ, முஸ்லிம் அமைப்புகள் மட்டுமல்லாமல் காங்கிரஸ், மஜத ஆகிய எதிர்க் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத சட்ட மேலவையில் மசோதா தாக்கல் செய்யப்படவில்லை. இதுகுறித்து கர்நாடக சட்ட அமைச்சர் மாதுசாமி நேற்று கூறியதாவது: மதமாற்ற தடை … Read more

முதுகலை நீட் தேர்வுக்கு கால நீட்டிப்பு வழங்குங்கள்: சு.வெங்கடேசன் எம்.பி.

சென்னை: பதில் கடிதம் அனுப்ப இவ்வளவு கால நீட்டிப்பு எடுத்துக் கொண்டதைப் போல, முதுலை நீட் தேர்வுக்கும் கால நீட்டிப்பு வழங்குங்கள் என்று மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். முதுகலை நீட் தேர்வு மே 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என இந்திய மருத்துவர்கள் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன. ஆனால் முதுநிலை நீட் தேர்வு திட்டமிட்டபடி வரும் 21 ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய … Read more

சத்தீஸ்கர் ஹெலிகாப்டர் விபத்து: 2 விமானிகள் பலி: விசாரணைக்கு டிஜிசிஏ உத்தரவு

சத்தீஸ்கர் மாநில அரசுக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ராய்பூரில் உள்ள சுவாமி விவேகானந்தர் விமான நிலையம் அருகே நேற்றிரவு விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு பைலட்டுகளும் உயிரிழந்தனர். இந்த ஹெலிகாப்டரை விமானிகள் கேப்டன் கோபால் கிருஷ்ண பாண்டா, கேப்டன் ஏபி.ஸ்ரீவஸ்தவா ஆகியோர் இயக்கிக் கொண்டிருந்தனர். ஹெலிகாப்டரை தரையிறக்க முயன்றபோது திடீரென தீ பிடித்தது. இதில் ஹெலிகாப்டர் நிலை குலைந்து கீழே விழுந்தது. ஹெலிகாப்டரில் இருந்து பைலட்டுகள் மீட்கப்படும்போது உயிர் இருந்தது. இருப்பினும் இருவருமே சிகிச்சை பலனின்றி இறந்தனர். விபத்துக்கான காரணம் … Read more

இலங்கைக்கு வழங்க 40 ஆயிரம் டன் அரிசி கொள்முதல்: அரசாணைக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

சென்னை: இலங்கைக்கு வழங்குவதற்காக 40 ஆயிரம் டன் அரிசி கொள்முதல் செய்வது குறித்த அரசாணைக்குதடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை மக்களுக்கு உதவும் நோக்கில், 40 ஆயிரம் டன் அரிசி கொள்முதல் செய்து வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். இந்த அரிசி அதிக விலைக்கு வாங்கப்பட உள்ளதாகவும், இதில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்பு உள்ளது என்று கூறியும்திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணமங்கையை சேர்ந்த ஜெயசங்கர் என்பவர், சென்னை … Read more

இளைஞர் படுகொலை: நீதி கேட்டு காஷ்மீர் பண்டிட்டுகள் விடியவிடிய போராட்டம்

அரசு அலுவலகத்துக்குள் புகுந்த தீவிரவாதிகள், காஷ்மீர் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் நீதி கேட்டு அச்சமூகத்தினர் நேற்று விடியவிடிய இரவு முழுவதும் மிகப் பெரிய அளவிலான போராட்டத்தை முன்னெடுத்தனர். ஜம்மு – காஷ்மீரின் புட்காம் மாவட்டம் ஷேக்புரா பகுதியைச் சேர்ந்தவர்ர் ராகுல் பட். காஷ்மீர் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த 36 வயதான இந்த இளைஞர் அங்குள்ள தாலுகா அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்று இந்த அலுவலகத்தில் நுழைந்த தீவிரவாதிகள், ராகுலை … Read more

தமிழக பொது சுகாதாரத்துறை கரோனா ஆய்வகத்திற்கு ஐஎஸ்ஓ தரச்சான்று

சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் செயல்பட்டு வரும் பொது சுகாதாரத்துறையின் கரோனா ஆய்வகத்திற்கு ஐஎஸ்ஓ தரச் சான்று கிடைத்துள்ளதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் தமிழக அரசின் பொது சுகாதாரத்துறைக்கு சொந்தமான மாநில பொது சுகாதார ஆய்வகம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆய்வகத்தில் கரோனா சோதனை உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் செய்யப்படுகிறது. இந்த ஆய்வகத்தில் தினசரி 7000 முதல் 8000 கரோனா சோதனைகள் செய்ய முடியும். தற்போது வரை இந்த ஆய்வகத்தில் … Read more

வெளிநாடு செல்பவர்களுக்காக பூஸ்டர் டோஸ் போடுவதற்கு 9 மாத இடைவெளி குறைப்பு – மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அறிவிப்பு

புதுடெல்லி: வெளிநாடு செல்பவர்கள் 2-வது டோஸ் தடுப்பூசி போட்ட பிறகு பூஸ்டர் டோஸ் போடுவதற்கான 9 மாத கால இடைவெளியை மத்திய அரசு குறைத்துள்ளது. நாடு முழுவதும் கரோனா பரவலை தடுக்க 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் முன்னெச்சரிக்கையாக பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ளவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், 2-வது டோஸ் போட்டுக் கொண்டவர்கள், பூஸ்டர் டோஸ் போடுவதற்கு 9 மாத இடைவெளி இருக்க வேண்டும் என்று … Read more

செழிப்பான காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயத்தை பாதிக்கும் எந்த தொழிற்சாலைக்கும் அனுமதி இல்லை: ஸ்டாலின் திட்டவட்டம்

சென்னை: காவிரி டெல்டா பகுதிகளில் வேளாண் பணிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய எவ்வித தொழிற்சாலையையும் இந்த அரசு அனுமதிக்காது என்று, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பின் முதல் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார். கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு சட்டம்இயற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, திமுக அரசு பொறுப்பேற்ற நிலையில், தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பின் முதல் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை … Read more

இன்னொரு மசூதியை இழக்கத் தயாராக இல்லை: கியான்வாபி சர்ச்சையில் ஓவைசி கருத்து

“கியான்வாபி மசூதி தீர்ப்பு 1991 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் சட்டத்திற்கு முற்றிலும் எதிரானது. ஏற்கெனவே பாபர் மசூதியை இழந்துவிட்டோம். இப்போது இன்னொரு மசூதியை இழக்க நாங்கள் தயாராக இல்லை. 1991 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் படி, யாதொரு நபரும் எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் வழிபாட்டுத் தலத்தையும் வேறு மதத்தினருடையதாகவோ அல்லது அதே மதத்தின் உட்பிரிவினுடையதாகவோ மாற்றக் கூடாது என்பதே சட்டம். ஆனால், வாரணாசி நீதிமன்ற தீர்ப்பு அதை முற்றிலும் … Read more

தமிழக அரசின் சார்பில் இலங்கைக்கு பொருட்களை அனுப்ப 4 ஐஏஎஸ் அதிகாரிகள் குழு அமைப்பு

சென்னை: இலங்கை மக்களுக்கு தமிழக அரசின் சார்பில் அத்தியாவசியப் பொருட்களை அனுப்பிவைக்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தெரிவித்தார். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ, தமிழக அரசின் சார்பில் அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைக்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டது. இதுதொடர்பாக, கடந்த ஏப்.29-ல் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. அதில், ரூ.80 கோடி மதிப்பில் 40 … Read more