இந்திய ராணுவத்துக்கு மேலும் 12 சுவாதி ரேடார்கள் – பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் தயாரிப்பு

புதுடெல்லி: இந்திய ராணுவத்துக்கு மேலும் 12 சுவாதி ரேடார்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 1999-ம் ஆண்டு கார்கில் போரின் போது பாகிஸ்தான் ராணுவம், அமெரிக்காவின் அதிநவீன ரேடார்களை பயன்படுத்தியது. இந்திய ராணுவம், பிரிட்டிஷ் தயாரிப்பு ரேடார்கள் உதவியுடன் போரை நடத்தியது. ஆனால் எதிரியின் ஆயுதங்கள் எந்த இடத்தில் உள்ளன என்பதை கண்டறிவதில் இந்திய ராணுவத்துக்கு பின்னடைவு ஏற்பட்டது. இதை கருத்தில் கொண்டு எதிரிகளின் ஆயுதங்களை கண்டறியும் அதிநவீன ரேடாரை மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் … Read more

போக்குவரத்து ஊழியருக்கு 5% ஊதிய உயர்வு – தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் அமைச்சர் சிவசங்கர் உறுதி முழுவிவரம்

சென்னை: போக்குவரத்து ஊழியர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு அளிக்க அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார். தமிழக அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கான 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை, சென்னை குரோம்பேட்டையில் உள்ள போக்குவரத்துக்கழக பணிமனையில் நேற்று நடந்தது. போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில், தொமுச சார்பில் நடராஜன், சண்முகம் எம்.பி. அண்ணா தொழிற்சங்கம் சார்பில் கமலக்கண்ணன், தாடி மா.ராசு, சிஐடியு சார்பில் சவுந்தரராசன் உள்ளிட்ட 66 … Read more

குஜராத் நிதியுதவி திட்ட பயனாளிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி – மாணவியின் விருப்பத்தை கேட்டு உணர்ச்சிவசப்பட்ட பிரதமர்

புதுடெல்லி: குஜராத்தில் நேற்று நடந்த அரசு திட்ட பயனாளிகளிடம் கலந்துரையாடும் நிகழ்ச்சியில், மாணவி ஒருவரின் விருப்பத்தைக் கேட்டு, பிரதமர் மோடி உணர்ச்சிவசப்பட்டு ஒரு சில நிமிடங்கள் மவுனமானார். சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள குஜராத் மாநிலத்தில், பரூச் நகரில் விதவைகள், முதியோர்கள் மற்றும் கைவிடப்பட்டவர்களுக்கான மாநில அரசின் 4 முக்கிய நிதியுதவி திட்டங்கள் மாவட்ட நிர்வாகத்தால் 100 சதவீதம் நிறைவு செயயப்பட்டுள்ளன. இதை கொண்டாடும் வகையில் நேற்று நடத்தப்பட்ட முன்னேற்ற பெருவிழா (உத்கர்ஷ் சமோரா) என்ற நிகழ்ச்சியில், பயனாளிகளிடம், … Read more

நிலைமை கைமீறிச் சென்றால் மட்டுமே டி.சி. வழங்கப்படும்: பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்

சென்னை: அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தவறிழைக்கும்போது நிலைமை கைமீறி சென்றால் மட்டுமே மாற்றுச் சான்றிதழ் (டி.சி.) வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார். சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி, குழந்தைகள் மற்றும் வளரிளம் பெண்கள் அறக்கட்டளை சார்பில், `குழந்தைகள் மற்றும் வளரிளம் பெண்களின் கல்வியில் புதிய போக்குகள்’ குறித்த ஆய்வுக் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இக்கருத்தரங்கை, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கிவைத்துப் பேசியதாவது: மகளிர் கல்வி மேம்பாட்டுக்கு உதவும் வகையில், … Read more

கியான்வாபி மசூதியை வீடியோ எடுப்பதை மே 17-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் – வாரணாசி நீதிமன்றம் உத்தரவு

வாரணாசி: வாரணாசியில் காசி விஸ்வநாதர் ஆலயம் அருகேயுள்ள கியான் வாபி மசூதியில் மே 17-ம் தேதிக்குள் வீடியோ எடுக்கும் பணியை முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தர பிரதேசம் வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதி வளாகத்தின் சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என இந்து பெண்கள் 5 பேர், வாரணாசி நீதிமன்றத்தில் மனு செய்தனர். இதையடுத்து அங்கு களஆய்வு மேற்கொண்டு மே 10-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வாரணாசி … Read more

கூகுளில் சம்ஸ்கிருதம் மொழிபெயர்ப்பு வசதி

புதுடெல்லி: கூகுள் இணையதள நிறுவனம் மொழிபெயர்ப்பு சேவையை அளித்து வருகிறது. கூகுள் இணையதளத்தில் ஏற்கெனவே மொழிபெயர்ப்பு வசதியில் தமிழ், இந்தி, பெங்காலி, பிரெஞ்சு உட்பட உலகின் 133 மொழிகள் உள்ளன. பயனாளிகள் ‘கூகுள் டிரான்ஸ்லேட்’ எனப்படும் மொழிபெயர்ப்பு வசதி மூலம் தங்களுக்கு தேவையான மொழிகளை அதில் குறிப்பிட்டுள்ள மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து அறிந்து கொள்ள முடியும். அந்த வகையில் தற்போது மொழிபெயர்ப்பு வசதியில் சம்ஸ்கிருதம் உட்பட 24 புதிய மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஏராளமான கோரிக்கைகளைத் தொடர்ந்து மொழிபெயர்ப்பு … Read more

செவிலியர் தினத்தையொட்டி முதல்வர் ஸ்டாலின், தலைவர்கள் வாழ்த்து

சென்னை: சர்வதேச செவிலியர் தினம் நேற்றுகொண்டாடப்பட்டது. இதையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்திகள் வருமாறு: முதல்வர் மு.க.ஸ்டாலின்: மருத்துவத் துறையில் இன்றியமையாத பங்களிப்பை அளிக்கும் செவிலியர் அனைவருக்கும் உலக செவிலியர்கள் நாள் வாழ்த்துகள். தாயுள்ளத்தோடு நோயாளிகளின் காயங்களைப் போக்கும் செவிலியரின் போற்றத்தக்க பணியை மதிப்போம். அவர்களது நியாயமான கோரிக்கைகளை நமது அரசு நிறைவேற்றும். தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: … Read more

57 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் மாதம் 10-ம் தேதி தேர்தல்

புதுடெல்லி: மாநிலங்களவையில் காலியாகும் 57 எம்.பி.க்களின் இடங்களுக்கு ஜூன் 10-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. மாநிலங்களவையில் தமிழகத்தைச் சேர்ந்த 6 எம்.பி.க்கள் உட்பட 57 எம்.பி.க்களின் பதவிக் காலம் முடிவடைய உள்ளது. மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோரின் பதவிக்காலம் முடிகிறது. இவர்கள் மீண்டும் பாஜக சார்பில் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. இதேபோல, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கபில் சிபல், ஜெய்ராம் ரமேஷ், அம்பிகா சோனி, ப.சிதம்பரம் … Read more

நீலகிரி, கோவை, திருச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும். நீலகிரி, கோவை,திருச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 13-ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும். 14-ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழையும், நீலகிரி, … Read more

தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமனம்

புதுடெல்லி: நாட்டின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வரும் 15-ம் தேதி தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்க உள்ளார். இந்திய தலைமை தேர்தல் ஆணையராக தற்போது இருந்து வரும் சுஷில் சந்திராவின் பதவிக்காலம் வரும் 14-ம் தேதியுடன் முடிகிறது. இந்நிலையில், புதிய தலைமை தேர்தல் ஆணையராக தற்போது மூத்த தேர்தல் ஆணையராக இருக்கும் ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ளார். வரும் 15-ம் தேதி … Read more