செவிலியர் தினத்தையொட்டி முதல்வர் ஸ்டாலின், தலைவர்கள் வாழ்த்து
சென்னை: சர்வதேச செவிலியர் தினம் நேற்றுகொண்டாடப்பட்டது. இதையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்திகள் வருமாறு: முதல்வர் மு.க.ஸ்டாலின்: மருத்துவத் துறையில் இன்றியமையாத பங்களிப்பை அளிக்கும் செவிலியர் அனைவருக்கும் உலக செவிலியர்கள் நாள் வாழ்த்துகள். தாயுள்ளத்தோடு நோயாளிகளின் காயங்களைப் போக்கும் செவிலியரின் போற்றத்தக்க பணியை மதிப்போம். அவர்களது நியாயமான கோரிக்கைகளை நமது அரசு நிறைவேற்றும். தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: … Read more