தாயுள்ளம் படைத்த செவிலியரின் பணியை போற்றுவோம்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: தாயுள்ளத்தோடு நோயாளிகளின் காயங்களைப் போக்கும் செவிலியரின் போற்றத்தக்க பணியை மதிப்போம் என்று உலக செவிலியர்கள் நாள் வாழ்த்துக்களை முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “மருத்துவத் துறையில் இன்றியமையாத பங்களிப்பை அளிக்கும் செவிலியர் அனைவர்க்கும் உலக செவிலியர்கள் நாள் வாழ்த்துகள்! தாயுள்ளத்தோடு நோயாளிகளின் காயங்களைப் போக்கும் செவிலியரின் போற்றத்தக்க பணியை மதிப்போம். அவர்களது நியாயமான கோரிக்கைகளை நமது அரசு நிறைவேற்றும்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். … Read more

பதவியேற்புக்கு பின் இந்திய உறவு குறித்து பேசிய இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே

கொழும்பு: இலங்கையில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடந்த விரும்புவதாக மீண்டும் பிரதமர் பதவி ஏற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். மக்கள் போராட்டத்தின் காரணமாக இலங்கையில் தனது பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்ச திங்கள் கிழமை ராஜினாமா செய்தார். இதனால் அங்கு அவரது ஆதரவாளர்களுக்கும், போராட்டக்கார்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு பெரும் கலவரம் மூண்டது. இதனால் அங்கு அவசரநிலை நெருக்கடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நாட்டில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி, போராட்டங்களுக்கு … Read more

மெட்ரோ ரயில் நான்காம் வழித்தடம் அமைக்கும் திட்டம்: தமிழக அரசு, மெட்ரோ ரயில் நிறுவனம் பதிலளிக்க உத்தரவு

சென்னை: கோயில்கள் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடைமுறையை முடிக்காமல் சென்னை மெட்ரோ ரயிலின் நான்காம் வழித்தடம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு, மெட்ரொ ரயில் நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னையைச் சேர்ந்த கவுதமன், ரமணன், விஜய் நாராயணன் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், கலங்கரை விளக்கம் முதல் … Read more

ஓசூரில் தொடர் மழையால் கொத்தமல்லி பயிர்கள் சேதம்: ஒரு கட்டு கொத்தமல்லி விலை ரூ.30 முதல் ரூ 40 வரை அதிகரிப்பு

ஓசூர்: ஓசூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் மழை காரணமாக கொத்தமல்லி உற்பத்தி குறைந்துள்ளதால, ஒரு கட்டு கொத்தமல்லியின் விலை 30 முதல் 40 ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளது. ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி, கெலமங்கலம், சூளகிரி, பாகலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீரை பயன்படுத்தி சொட்டுநீர் பாசனம் மூலமாக குறுகிய காலத்தில் அதிகளவில் லாபம் தரும் தோட்டப்பயிர்களான கொத்தமல்லி, புதினா உள்ளிட்ட தோட்டப்பயிர்களை விவசாயிகள் தொடர்ந்து பயிரிட்டு லாபம் ஈட்டி … Read more

‘இரண்டு முறை பிரதமரானால் போதும்’ – எதிர்க்கட்சித் தலைவரின் 'ஓய்வு' அட்வைஸ் குறித்து பிரதமர் மோடி

பரூச்: குஜராத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி பேசும்போது எதிர்க்கட்சி தலைவர் ஒருவரின் உரையாடலை வெளிப்படுத்தினார். பரூச் பகுதியில் நடந்த விதவைகள், முதியவர்கள் மற்றும் ஆதரவற்ற குடிமக்களுக்கான குஜராத் அரசின் நிதி உதவித் திட்டங்களின் பயனாளிகள் நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக உரையாற்றினார் பிரதமர் மோடி. அப்போது, முக்கிய எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் பிரதமர் பதவி குறித்து தெரிவித்த கருத்தை அவர் வெளிப்படுத்தினார். அதில், “ஒரு நாள் ஒரு பெரியத் தலைவர் என்னைச் … Read more

போக்குவரத்து ஊழியர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு: அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

சென்னை: போக்குவரத்து ஊழியர்களுக்கு 8 சதவீத சம்பள உயர்வு வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில், தமிழக அரசு சார்பாக முதற்கட்டமாக, கடந்த 1.9.2019-லிருந்து 2 சதவீத உயர்வும், 1.1.2022-லிருந்து அடுத்தகட்ட 3 சதவீத உயர்வும் என மொத்தமாக 5 சதவீதம் வழங்கப்படும் என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியுள்ளார். போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில்14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை சென்னை குரோம்பேட்டையில் உள்ள போக்குவரத்து பயிற்சி முகாமில் நடந்தது. ஏற்கெனவே … Read more

‘ஆக்டிங்’ மேயராக கணவர்? – தொடர் சர்ச்சையில் சிக்கும் மதுரை மாநகராட்சி மேயர்

மதுரை: மதுரை மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றுள்ள இந்திராணியை விட அவரின் கணவர் தான் ஆக்டிங் மேயராக செயல்பட்டு வருகிறார் என்று கவுன்சிலர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். மதுரை மாநகராட்சி மேயராக இந்திராணி பொறுப்பேற்றபோது செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், ‘‘மதுரையில் தவறான திசையில் சென்ற திமுகவின் உருவம், பிம்பம் தற்போது திருத்தும் வகையில் புதிய வழியில் செல்லத் தொடங்கியிருக்கிறது’’ என்று மதுரை திமுகவினரின் பழைய அரசியலை மறைமுகமாக குற்றம்சாட்டினார். மேலும், அவர் ‘‘மதுரை மாநகர வரலாற்றில் இன்றைக்கு … Read more

மின் கட்டணத்தை முறையாக செலுத்த வேண்டும்: மண்டல அலுவலர்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு 

சென்னை: தமிழக மின்சார வாரியத்துக்கு சென்னை மாநகராட்சி செலுத்த வேண்டிய கட்டணத்தை, நில வாடகை கழித்து, மீதமுள்ள தொகையை, இரண்டு மாதத்திற்கு ஒருமுறை செலுத்த, மண்டல அலுவலர்களுக்கு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி அலுவலகங்கள், தெரு விளக்குகள் போன்றவற்றிற்கு, ஆண்டுக்கு, 45.5 கோடி ரூபாய் செலவில், மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல், அலுவலகம், மின்மாற்றி உள்ளிட்டவைகளுக்கு, மாநகராட்சியின் நிலத்தை, தமிழக மின்சார வாரியம் பயன்படுத்துகிறது. இதற்காக ஆண்டுதோறும், 35 கோடி ரூபாயை மாநகராட்சிக்கு, மின்சார வாரியம் வாடகையாக செலுத்த … Read more

நீட், க்யூட் தேர்வு | கோச்சிங் சென்டர் வர்த்தகத்தால் மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி வரவு: கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு குற்றச்சாட்டு

புதுச்சேரி: கல்வியை தனியாருக்கு கொடுக்கும் ஏற்பாடுதான் நீட், க்யூட் தேர்வுகள். கோச்சிங் சென்டரினால் ரூ.15 ஆயிரம் கோடி வர்த்தகம் நடப்பதுடன், அதில் ஜிஎஸ்டி வரவு மத்திய அரசுக்கு கிடைக்கிறது என்று பொது பள்ளிக்கான மாநில மேடை பொறுப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு குற்றம் சாட்டினார். தமிழ்நாடு – புதுச்சேரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நீட் மற்றும் கியூட் தேர்வுகளை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம் இன்று புதுவை பல்கலைக்கழகத்தின் 2வது நுழைவு வாயில் முன்பு நடந்தது. … Read more

மண்டல கூட்டங்களில் கவுன்சிலர்களின் கணவர்கள் கலந்து கொண்டால் நடவடிக்கை: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை: மண்டல குழு கூட்டங்களில் பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் கலந்து கொண்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மாநகராட்சியில் மாதந்தோறும் மாமன்ற கூட்டம் நடைபெறும். இந்த மாமன்ற கூட்டத்திற்கு முன்பாக மண்டல குழு கூட்டம் மற்றும் நிலைக் குழுக்களின் கூட்டம் நடைபெற வேண்டும். மண்டல குழு கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் நிலைக் குழுக்களுக்கு அனுப்பி வைக்கப்படும். நிலைக் குழு கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு மாமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இதன்பிறகு மாமன்றத்தில் … Read more