மின் கட்டணத்தை முறையாக செலுத்த வேண்டும்: மண்டல அலுவலர்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு
சென்னை: தமிழக மின்சார வாரியத்துக்கு சென்னை மாநகராட்சி செலுத்த வேண்டிய கட்டணத்தை, நில வாடகை கழித்து, மீதமுள்ள தொகையை, இரண்டு மாதத்திற்கு ஒருமுறை செலுத்த, மண்டல அலுவலர்களுக்கு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி அலுவலகங்கள், தெரு விளக்குகள் போன்றவற்றிற்கு, ஆண்டுக்கு, 45.5 கோடி ரூபாய் செலவில், மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல், அலுவலகம், மின்மாற்றி உள்ளிட்டவைகளுக்கு, மாநகராட்சியின் நிலத்தை, தமிழக மின்சார வாரியம் பயன்படுத்துகிறது. இதற்காக ஆண்டுதோறும், 35 கோடி ரூபாயை மாநகராட்சிக்கு, மின்சார வாரியம் வாடகையாக செலுத்த … Read more