‘இரண்டு முறை பிரதமரானால் போதும்’ – எதிர்க்கட்சித் தலைவரின் 'ஓய்வு' அட்வைஸ் குறித்து பிரதமர் மோடி

பரூச்: குஜராத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி பேசும்போது எதிர்க்கட்சி தலைவர் ஒருவரின் உரையாடலை வெளிப்படுத்தினார். பரூச் பகுதியில் நடந்த விதவைகள், முதியவர்கள் மற்றும் ஆதரவற்ற குடிமக்களுக்கான குஜராத் அரசின் நிதி உதவித் திட்டங்களின் பயனாளிகள் நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக உரையாற்றினார் பிரதமர் மோடி. அப்போது, முக்கிய எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் பிரதமர் பதவி குறித்து தெரிவித்த கருத்தை அவர் வெளிப்படுத்தினார். அதில், “ஒரு நாள் ஒரு பெரியத் தலைவர் என்னைச் … Read more

போக்குவரத்து ஊழியர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு: அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

சென்னை: போக்குவரத்து ஊழியர்களுக்கு 8 சதவீத சம்பள உயர்வு வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில், தமிழக அரசு சார்பாக முதற்கட்டமாக, கடந்த 1.9.2019-லிருந்து 2 சதவீத உயர்வும், 1.1.2022-லிருந்து அடுத்தகட்ட 3 சதவீத உயர்வும் என மொத்தமாக 5 சதவீதம் வழங்கப்படும் என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியுள்ளார். போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில்14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை சென்னை குரோம்பேட்டையில் உள்ள போக்குவரத்து பயிற்சி முகாமில் நடந்தது. ஏற்கெனவே … Read more

‘ஆக்டிங்’ மேயராக கணவர்? – தொடர் சர்ச்சையில் சிக்கும் மதுரை மாநகராட்சி மேயர்

மதுரை: மதுரை மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றுள்ள இந்திராணியை விட அவரின் கணவர் தான் ஆக்டிங் மேயராக செயல்பட்டு வருகிறார் என்று கவுன்சிலர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். மதுரை மாநகராட்சி மேயராக இந்திராணி பொறுப்பேற்றபோது செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், ‘‘மதுரையில் தவறான திசையில் சென்ற திமுகவின் உருவம், பிம்பம் தற்போது திருத்தும் வகையில் புதிய வழியில் செல்லத் தொடங்கியிருக்கிறது’’ என்று மதுரை திமுகவினரின் பழைய அரசியலை மறைமுகமாக குற்றம்சாட்டினார். மேலும், அவர் ‘‘மதுரை மாநகர வரலாற்றில் இன்றைக்கு … Read more

மின் கட்டணத்தை முறையாக செலுத்த வேண்டும்: மண்டல அலுவலர்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு 

சென்னை: தமிழக மின்சார வாரியத்துக்கு சென்னை மாநகராட்சி செலுத்த வேண்டிய கட்டணத்தை, நில வாடகை கழித்து, மீதமுள்ள தொகையை, இரண்டு மாதத்திற்கு ஒருமுறை செலுத்த, மண்டல அலுவலர்களுக்கு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி அலுவலகங்கள், தெரு விளக்குகள் போன்றவற்றிற்கு, ஆண்டுக்கு, 45.5 கோடி ரூபாய் செலவில், மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல், அலுவலகம், மின்மாற்றி உள்ளிட்டவைகளுக்கு, மாநகராட்சியின் நிலத்தை, தமிழக மின்சார வாரியம் பயன்படுத்துகிறது. இதற்காக ஆண்டுதோறும், 35 கோடி ரூபாயை மாநகராட்சிக்கு, மின்சார வாரியம் வாடகையாக செலுத்த … Read more

நீட், க்யூட் தேர்வு | கோச்சிங் சென்டர் வர்த்தகத்தால் மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி வரவு: கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு குற்றச்சாட்டு

புதுச்சேரி: கல்வியை தனியாருக்கு கொடுக்கும் ஏற்பாடுதான் நீட், க்யூட் தேர்வுகள். கோச்சிங் சென்டரினால் ரூ.15 ஆயிரம் கோடி வர்த்தகம் நடப்பதுடன், அதில் ஜிஎஸ்டி வரவு மத்திய அரசுக்கு கிடைக்கிறது என்று பொது பள்ளிக்கான மாநில மேடை பொறுப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு குற்றம் சாட்டினார். தமிழ்நாடு – புதுச்சேரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நீட் மற்றும் கியூட் தேர்வுகளை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம் இன்று புதுவை பல்கலைக்கழகத்தின் 2வது நுழைவு வாயில் முன்பு நடந்தது. … Read more

மண்டல கூட்டங்களில் கவுன்சிலர்களின் கணவர்கள் கலந்து கொண்டால் நடவடிக்கை: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை: மண்டல குழு கூட்டங்களில் பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் கலந்து கொண்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மாநகராட்சியில் மாதந்தோறும் மாமன்ற கூட்டம் நடைபெறும். இந்த மாமன்ற கூட்டத்திற்கு முன்பாக மண்டல குழு கூட்டம் மற்றும் நிலைக் குழுக்களின் கூட்டம் நடைபெற வேண்டும். மண்டல குழு கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் நிலைக் குழுக்களுக்கு அனுப்பி வைக்கப்படும். நிலைக் குழு கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு மாமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இதன்பிறகு மாமன்றத்தில் … Read more

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்பு

கொழும்பு: இலங்கையில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடி, போராட்டங்களுக்கு மத்தியில் அந்நாட்டின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே வியாழக்கிழமை மாலை பதவி ஏற்றுக்கொண்டார். இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி காரணமாக ராஜபக்சே அரசு பதவி விலக வேண்டும் என்று மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தின் காரணமாக அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்ச திங்கள் கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அங்கு அவரது ஆதரவாளர்களுக்கும், போராட்டக்கார்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு … Read more

ரூ.1.35 கோடி செலவில் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு நேரடியாக குடிநீர் விநியோகம்

மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க தெப்பக்குளத்தில் இருந்து நேரடியாக மருத்துவமனைக்கு குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்வதற்கு ரூ.1.35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் மாநகராட்சி நிர்வாகம் குழாய்களை பதிக்கும் பணியை தொடங்க இருக்கிறது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கன்னியாகுமரி தொடங்கி தென் தமிழகத்தை சேர்ந்த 10 மாவட்டங்களில் இருந்து நோயாளிகள் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்படுகிறார்கள். ஒரு நாளைக்கு 13 ஆயிரம் வெளிநோயாளிகளும், 3,500 உள் நோயாளிகளும் சிகிச்சைக்கு வருகிறார்கள். … Read more

'கூகுள் வாலெட் அப்ளிகேஷன்' – I/O டெவலப்பர் மாநாட்டில் அறிமுகம்

கலிபோர்னியா: ‘கூகுள் வாலெட் அப்ளிகேஷன்’ என்ற கைபேசி இன்புட்/அவுட்புட் (I/O) டெவலப்பர் மாநாட்டில் அறிமுகம் செய்துள்ளது கூகுள் நிறுவனம். தொழில்நுட்ப உலகின் சாம்ராட்டான கூகுள் நிறுவனம் ஆண்டுதோறும் இன்புட்/அவுட்புட் எனப்படும் I/O டெவலப்பர் மாநாட்டினை நடத்துவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக கரோனா தொற்று காரணமாக இணைய வழியில் இந்த மாநாடு நடைபெற்றது. இந்த ஆண்டு மீண்டும் நேரடியாக நடைபெற்றது. இருந்தாலும் இதில் குறைவான பார்வையாளர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. கடந்த 2008 முதல் இந்த … Read more

'இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி தமிழகத்திலும் ஏற்படும்' – அண்ணாமலை பேச்சு

திருவாரூர்: தமிழகத்தில் நடைபெறும் அறிவாலய குடும்ப ஆட்சி காரணமாக இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி தமிழகத்திலும் ஏற்படும் என, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருவாரூர் தெற்கு வீதிக்கு கலைஞர் சாலை என பெயர் மாற்றம் செய்து திருவாரூர் நகராட்சி கூட்டத்தில் கடந்த மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைக் கண்டித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு பாஜக முன்னாள் திருவாரூர் மாவட்ட தலைவர் ராகவன் தலைமை வகித்தார். திருவாரூர் மாவட்ட பார்வையாளர் … Read more