தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி  பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி, உச்ச நீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வேண்டும், தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பிரதமர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிப்பதில் சமூக நீதியைப் பின்பற்றிட வேண்டுமென்றும், உச்ச நீதிமன்றத்தின் நிரந்தரக் கிளைகளை புதுடெல்லி, சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய இடங்களில் நிறுவிட வேண்டுமென்றும், … Read more

இலங்கைக்கு நிவாரண பொருட்கள்: 4 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைப்பு

சென்னை: இலங்கைக்கு நிவாரண பொருட்களை அனுப்பும் பணிக்கு 4 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைக்க மத்திய அரசு அனுமதி வழங்கக் கோரி கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொருட்கள் அனுப்ப மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, ரூ.80 கோடி மதிப்பிலான 40 ஆயிரம் டன் அரிசி, ரூ.28 கோடி … Read more

அம்மா உணவகங்களை முன்பு இருந்ததை விட மிகச் சிறப்பாக நடத்த முதல்வர் உத்தரவு: அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: அம்மா உணவகங்களை முன்பு இருந்ததை விட மிகச்சிறப்பாக நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். சென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறை அலுவலகத்தில், 126 நபர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணை, கரோனாவால் உயிரிழந்த முன்கள பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 71 நபர்களுக்கு நிதியுதவி ஆகியவற்றை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “சில இடங்களில் சொத்து வரி கட்டாமல் உள்ளனர். அனைவருக்கும் ஒரே மாதிரியான … Read more

தாஜ்மகாலில் பூட்டப்பட்டிருக்கும் 22 அறைகளை திறந்து பார்க்க வழக்கு தொடர்ந்த பாஜக : நிராகரித்த அலகாபாத் நீதிமன்றம்

லக்னோ: தாஜ்மகாலில் பூட்டப்பட்டிருக்கும் 22 அறைகளை திறந்து பார்க்க உத்தரவிடக் கோரிய பாஜகவின் மனுவை அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ கிளை அமர்வு நிராகரித்துள்ளது. முகலாய அரசர்களில் ஒருவரான ஷாஜஹான் ஆறாம் நூற்றாண்டில், பளிங்குக்கற்களால் கட்டியது தாஜ்மகால். தற்போது பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் அமைந்துள்ள இதைக் கட்ட அங்கிருந்த தேஜோலாயா எனும் சிவன் கோயில் இடிக்கப்பட்டதாகப் புகார் உள்ளது. இக்கோயிலின் சிலைகள், தாஜ்மகாலில் திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருக்கும் 22 அறைகளில், இருப்பதாகவும் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. என்ன நடந்தது? தாஜ்மகாலில் திறக்கப்படாமல் … Read more

கனமழை காரணமாக ஆம்பூர் பிரியாணி திருவிழா ஒத்திவைப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் நாளை (மே 13) தொடங்கவிருந்த பிரியாணி திருவிழா மழை காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் அமர்குஷ்வாஹா அறிவித்துள்ளார். புவிசார் குறியீடு பெற: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் அசைவ உணவுகளில் பிரியாணி பிரசித்திப்பெற்றது. வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆம்பூர் வழியாக செல்லும் ஏராளமானோர் ஆம்பூர் பிரியாணியை விரும்பி சாப்பிடுகின்றனர். சாமான்ய மக்கள் முதல் பிரபலங்கள் வரை ஆம்பூர் பிரியாணியை விரும்புகின்றனர்.இந்நிலையில், ஆம்பூர் பிரியாணிக்கு புவிசார் குறியீடு பெற மாவட்ட உணவு … Read more

குளிர்சாதன அறைக்கு ஜிஎஸ்டியுடன் கட்டணம் வசூல்: கோவை உணவகத்துக்கு ரூ.5,000 அபராதம்

கோவை: குளிர்சாதன அறைக்கு ஜிஎஸ்டியுடன் கட்டணம் வசூலித்த கோவை உணவகத்துக்கு ரூ.5,000 அபராதம் விதித்து மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கோவை வெள்ளலூர் இடையர்பாளையத்தைச் சேர்ந்த நிவாஸ்ராஜ் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: “நானும் எனது நண்பரும் 2019 மே 2-ம் தேதி கோவை ராம்நகர் சரோஜினி தெருவில் உள்ள ஹோட்டலுக்கு உணவருந்த சென்றோம். அங்கு உணவருந்திய பிறகு, ஹோட்டல் பணியாளர் ரசீது அளித்தார். அதில் மொத்தம் ரூ.803 என … Read more

இந்தியாவில் அறிமுகமானது மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போன் | விலை and சிறப்பு அம்சங்கள்

புதுடெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமாகி உள்ளது மோட்டோரோலா நிறுவனத்தின் எட்ஜ் 30 ஸ்மார்ட்போன். இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்த விவரங்களைப் பார்ப்போம். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா நிறுவனம். அண்மைக் காலமாக வரிசையாக ஸ்மார்ட்போன்களை இந்நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில், எட்ஜ் 30 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வரிசையில் எட்ஜ் 30 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக எட்ஜ் 30 புரோ அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. உலகின் மெல்லிய (Thin) போன் … Read more

வயிற்றுக்குள் மறைத்து ஹெராயின் கடத்தல்: உகாண்டா இளைஞர் சென்னையில் கைது

சென்னை: ‘அயன்’ சினிமாபட பாணியில் வயிற்றுக்குள் ரூ.6.58 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருளை மறைத்து கடத்த முயன்ற உகாண்டா நாட்டைச் சேர்ந்த இளைஞரை சுங்கத்துறை அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் கைது செய்தனர். சென்னை வெளிநாட்டில் இருந்து பெருமளவு போதைப்பொருட்கள் விமானத்தில் கடத்தி வரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்கத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்புப் … Read more

பீப் பிரியாணிக்கு தடை: இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் கண்டனம்

சென்னை: ஆம்பூரில் நடைபெறும் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணியை மட்டும் தடை செய்திருப்பது கண்டனத்துக்குரியது என்று இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, இயக்குநர் பா.ரஞ்சித் தலைமையில் இயங்கி வரும் நீலம் பண்பாட்டு மையத்தின் ட்விட்டர் பக்கத்தில், ” திருப்பத்தூர், ஆம்பூர் பகுதியில் பிரியாணி திருவிழா நடைபெறுவதை ஒட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டம் நடந்துள்ளது. பீப் பிரியாணியை மட்டும் தடை செய்து மீதமுள்ள 50-க்கும் மேற்பட்ட பிரியாணி கடை அமைக்கப்படும் என்று கூறியது … Read more

‘அஸான்’ சர்ச்சையை தொடர்ந்து கர்நாடகாவில் ஒலிபெருக்கி பயன்படுத்த கட்டுப்பாடுகள்

பெங்களூரு: கர்நாடகாவில் மசூதிகளில் ‘அஸான்’ எனப்படும் பாங்கு ஒலிபெருக்கியில் ஓதுவதற்கு இந்துத்துவ அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு போட்டியாக இந்து கோயில்களில் ஒலிபெருக்கி மூலம் பஜனை பாடல்களை பாடும் போராட்டத்தையும் முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உச்ச நீதிமன்றம் கடந்த 2005-ம் ஆண்டு ஒலிபெருக்கிகளில் அதிக சத்தம் எழுப்பி ஒலி மாசு ஏற்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது. அதன்படி கர்நாடகாவில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி … Read more