‘அஸான்’ சர்ச்சையை தொடர்ந்து கர்நாடகாவில் ஒலிபெருக்கி பயன்படுத்த கட்டுப்பாடுகள்

பெங்களூரு: கர்நாடகாவில் மசூதிகளில் ‘அஸான்’ எனப்படும் பாங்கு ஒலிபெருக்கியில் ஓதுவதற்கு இந்துத்துவ அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு போட்டியாக இந்து கோயில்களில் ஒலிபெருக்கி மூலம் பஜனை பாடல்களை பாடும் போராட்டத்தையும் முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உச்ச நீதிமன்றம் கடந்த 2005-ம் ஆண்டு ஒலிபெருக்கிகளில் அதிக சத்தம் எழுப்பி ஒலி மாசு ஏற்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது. அதன்படி கர்நாடகாவில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி … Read more

உக்ரைன் போரால் உலகின் பல பகுதிகளில் பட்டினி பரவி வருகிறது: ஐ.நா. கவலை

உக்ரைன் போர் காரணமாக உலகின் பல பகுதிகளில் பட்டினி பரவி வருவதாக ஐ.நா. சபை கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் ஆண்டோனியோ குத்ரேஸ் பேசும்போது, “உக்ரைனில் போர் பதற்றமிக்க பகுதிகளிலிருந்து மக்களை மீட்கும் நடவடிக்கைகள் நடந்து வருகிறது. எதிர்காலத்திலும் மக்கள் வெளியேற்றப்படுவார்கள். உக்ரைனில் நடந்த போரின் காரணமாக நாம் எதிர்கொள்ளும் வியத்தகு உணவுப் பாதுகாப்பு சார்ந்த அச்சுறுத்தல்களினால் உலகின் பல்வேறு பகுதிகளில் பட்டினி அபாயங்கள் பரவலாகி வருகின்றன. இதுகுறித்து நான் ஆழ்ந்த கவலையடைந்துள்ளேன்” … Read more

ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டுக்கறி பிரியாணி புறக்கணிப்பு : தமுஎகச கண்டனம்

சென்னை: ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டுக்கறி பிரியாணி புறக்கணிப்பிற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச) முடிவை மறுபரிசீலனை செய்து மாட்டுக்கறி பிரியாணியும் இடம்பெறும் வகையில் “ஆம்பூர் பிரியாணி திருவிழா” நடத்தப்பட வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: நாடு முழுவதுமுள்ள இறைச்சியுணவுப் பிரியர்களின் பேராதரவினைப் பெற்றுள்ளது ஆம்பூர் பிரியாணி. ஆம்பூர் பிரியாணி என்கிற பொதுப்பெயர் அங்கு தயராகும் ஆட்டுக்கறி பிரியாணி, மாட்டுக்கறி … Read more

பூஸ்டர் தடுப்பூசி | வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்கு 9 மாத இடைவெளி கட்டாயமில்லை: மத்திய அரசு

வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்கு கரோனா பூஸ்டர் தடுப்பூசி டோஸ் செலுத்திக் கொள்ள இரண்டாவது டோஸ் செலுத்தியதிலிருந்து 9 மாத இடைவெளி இருக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தத் தளர்வை வெளிநாடு செல்வோர், மாணவர்கள் வரவேற்றுள்ளனர். இந்தியாவில் இரண்டு டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 9 மாதங்களுக்குப் பின்னரே முன்னெச்சரிக்கை டோஸ் செலுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. ஆனால் ஒரு சில வெளிநாடுகளில் மூன்றாவது மற்றும் முன்னெச்சரிக்கை டோஸுக்கான இடைவெளி குறைவாக உள்ளது. எனவே … Read more

சென்னை மாநகராட்சி தேர்தல்: போட்டியிட்ட 90% வேட்பாளர்கள் செலவு கணக்கு தாக்கல்

சென்னை: சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டவர்களில் 90 சதவீத வேட்பாளர்கள் செலவு கணக்கை தாக்கல் செய்துள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி மாதம் நடந்தது. இத்தேர்தல், சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 வார்டுகளுக்கு 2,670 பேர் போட்டியிட்டனர். வேட்பாளர்களின் தேர்தல் செலவினமாக 90 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, ஒரு மாத காலத்திற்குள் அனைத்து வேட்பாளர்களும் தேர்தல் செலவினங்களை தாக்கல் செய்ய வேண்டும். ஆனாலும், வேட்பாளர்களுக்கு சில … Read more

கர்நாடகா மாநிலத்தில் தொடர்ந்து நெருக்கடி: 4-வது முறை ஐபிஎஸ் அதிகாரி ராஜினாமா

பெங்களூரு: ஆந்திராவை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ரவீந்திரநாத். கடந்த 1989-ம் ஆண்டு முதல் கர்நாடக காவல் துறையில் பணியாற்றி வருகிறார். தலித் வகுப்பை சேர்ந்த இவர் கடந்த 2008-ம் ஆண்டு அப்போதைய நிர்வாக பிரிவு டிஜிபியாக இருந்த உமாபதி, தன்னை மரியாதை குறைவாக நடத்திய‌தாக கூறி ராஜினாமா செய்து இருந்தார். ராஜினாமாவை ஏற்காததால் மீண்டும் பணிக்கு திரும்பினார். 2014-ம் ஆண்டு பெங்களூருவில் உணவகத்தில் பெண் ஒருவரை செல்போனில் புகைப்படம் எடுத்ததாக இவர் மீது புகார் எழுந்தது. அதற்கு … Read more

சீனாவின் ஜீரோ கரோனா திட்டம்: உலக சுகாதார அமைப்பு விமர்சனம்

நியூயார்க்: சீனாவின் ஜீரோ கரோனா திட்டத்தை உலக சுகாதார அமைப்பு கடுமையாக விமர்சித்துள்ளது. உலகம் முழுவதும் கரோனா தாக்கம் 2022 ஆம் ஆண்டு முதலே குறைந்து வருகிறது. இந்த நிலையில் சீனாவில் கடந்த மார்ச் மாதம் கரோனா தொற்று அதிகரித்தது. இதனை தொடர்ந்து கரோனாவை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதற்கு உலகளவில் விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் கரோனாவுக்கு எதிரான சீனாவின் திட்டத்தை மாற்றி கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து … Read more

தமிழகத்தின் மொத்த அரிசி உற்பத்தியில் காவிரி டெல்டா பங்கு 34% – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: மாநிலத்தின் ஒட்டுமொத்த அரிசி உற்பத்தியில் 34 சதவீதம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான காவிரி டெல்டா பகுதி அளித்து வருகிறது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பின் முதல் கூட்டம் இன்று (மே 12) நடைபெற்றது. வேளாண் மண்டல விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து முதல்வர் இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தினார். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடர்பாக, … Read more

கர்நாடகா மாநிலத்தில் அண்ணாமலை வாயிலாக தமிழர்களின் வாக்கை குறி வைக்கும் பாஜக

பெங்களூரு: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அரசியலில் ஈடுபடுவதற்கு முன், கர்நாடகாவில் பிரபல ஐபிஎஸ் அதிகாரியாக திகழ்ந்தவர். தனது அதிரடி நடவடிக்கைகளால் கன்னட மக்களால் ‘சிங்கம்’ என அழைக்கப்பட்டவர். தமிழக அரசியலில் அவர் கடுமையாக விமர்சிக்கப்படுவதை அறிந்த அவரது நலம்விரும்பிகள் பலர், ‘அண்ணாமலை கர்நாடக அரசியலுக்கு வர வேண்டும்’ என சமூக வலைதளங்களில் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். கர்நாடகாவில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அண்ணாமலை வாயிலாக கர்நாடக தமிழர்களின் வாக்குகளை கவர … Read more

மாணவர்களுக்கு திறன் பயிற்சி: நான் முதல்வன் திட்ட பணிகளை தொடங்கிய தமிழக அரசு

சென்னை: மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கும் நான் முதல்வன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள், படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமான ‘நான் முதல்வன்’ என்கிற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களைப் படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுதுதலே நான் முதல்வன்’ திட்டத்தின் … Read more