சென்னை மாநகராட்சி தேர்தல்: போட்டியிட்ட 90% வேட்பாளர்கள் செலவு கணக்கு தாக்கல்

சென்னை: சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டவர்களில் 90 சதவீத வேட்பாளர்கள் செலவு கணக்கை தாக்கல் செய்துள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி மாதம் நடந்தது. இத்தேர்தல், சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 வார்டுகளுக்கு 2,670 பேர் போட்டியிட்டனர். வேட்பாளர்களின் தேர்தல் செலவினமாக 90 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, ஒரு மாத காலத்திற்குள் அனைத்து வேட்பாளர்களும் தேர்தல் செலவினங்களை தாக்கல் செய்ய வேண்டும். ஆனாலும், வேட்பாளர்களுக்கு சில … Read more

கர்நாடகா மாநிலத்தில் தொடர்ந்து நெருக்கடி: 4-வது முறை ஐபிஎஸ் அதிகாரி ராஜினாமா

பெங்களூரு: ஆந்திராவை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ரவீந்திரநாத். கடந்த 1989-ம் ஆண்டு முதல் கர்நாடக காவல் துறையில் பணியாற்றி வருகிறார். தலித் வகுப்பை சேர்ந்த இவர் கடந்த 2008-ம் ஆண்டு அப்போதைய நிர்வாக பிரிவு டிஜிபியாக இருந்த உமாபதி, தன்னை மரியாதை குறைவாக நடத்திய‌தாக கூறி ராஜினாமா செய்து இருந்தார். ராஜினாமாவை ஏற்காததால் மீண்டும் பணிக்கு திரும்பினார். 2014-ம் ஆண்டு பெங்களூருவில் உணவகத்தில் பெண் ஒருவரை செல்போனில் புகைப்படம் எடுத்ததாக இவர் மீது புகார் எழுந்தது. அதற்கு … Read more

சீனாவின் ஜீரோ கரோனா திட்டம்: உலக சுகாதார அமைப்பு விமர்சனம்

நியூயார்க்: சீனாவின் ஜீரோ கரோனா திட்டத்தை உலக சுகாதார அமைப்பு கடுமையாக விமர்சித்துள்ளது. உலகம் முழுவதும் கரோனா தாக்கம் 2022 ஆம் ஆண்டு முதலே குறைந்து வருகிறது. இந்த நிலையில் சீனாவில் கடந்த மார்ச் மாதம் கரோனா தொற்று அதிகரித்தது. இதனை தொடர்ந்து கரோனாவை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதற்கு உலகளவில் விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் கரோனாவுக்கு எதிரான சீனாவின் திட்டத்தை மாற்றி கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து … Read more

தமிழகத்தின் மொத்த அரிசி உற்பத்தியில் காவிரி டெல்டா பங்கு 34% – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: மாநிலத்தின் ஒட்டுமொத்த அரிசி உற்பத்தியில் 34 சதவீதம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான காவிரி டெல்டா பகுதி அளித்து வருகிறது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பின் முதல் கூட்டம் இன்று (மே 12) நடைபெற்றது. வேளாண் மண்டல விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து முதல்வர் இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தினார். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடர்பாக, … Read more

கர்நாடகா மாநிலத்தில் அண்ணாமலை வாயிலாக தமிழர்களின் வாக்கை குறி வைக்கும் பாஜக

பெங்களூரு: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அரசியலில் ஈடுபடுவதற்கு முன், கர்நாடகாவில் பிரபல ஐபிஎஸ் அதிகாரியாக திகழ்ந்தவர். தனது அதிரடி நடவடிக்கைகளால் கன்னட மக்களால் ‘சிங்கம்’ என அழைக்கப்பட்டவர். தமிழக அரசியலில் அவர் கடுமையாக விமர்சிக்கப்படுவதை அறிந்த அவரது நலம்விரும்பிகள் பலர், ‘அண்ணாமலை கர்நாடக அரசியலுக்கு வர வேண்டும்’ என சமூக வலைதளங்களில் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். கர்நாடகாவில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அண்ணாமலை வாயிலாக கர்நாடக தமிழர்களின் வாக்குகளை கவர … Read more

மாணவர்களுக்கு திறன் பயிற்சி: நான் முதல்வன் திட்ட பணிகளை தொடங்கிய தமிழக அரசு

சென்னை: மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கும் நான் முதல்வன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள், படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமான ‘நான் முதல்வன்’ என்கிற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களைப் படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுதுதலே நான் முதல்வன்’ திட்டத்தின் … Read more

உ.பி.யில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் திட்டம் – ஆக்ராவில் 80% அமல்படுத்தி தமிழரான உதவி ஆட்சியர் சாதனை

புதுடெல்லி: உத்தர பிரதேச அரசுப் பள்ளிகளில் சுமார் 25 சதவிகித அளவிலான குழந்தைகளே அன்றாடம் வருகை தருகின்றனர். இதற்கு அதன் ஆசிரியர்கள், அடிப்படை வசதி, கரோனா பரவல் உள்ளிட்டப் பலவும் காரணமாயின. இதை உணர்ந்த பாஜக ஆளும் ஆட்சியின் முதல்வர் யோகி, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் திட்டத்தை அறிவித்தார். ‘ஸ்கூல் சலோ அபியான்’ எனும் பெயரிலான இத்திட்டம், சுமார் 5 வயதுள்ள குழந்தைகளை முதல் வகுப்பில் சேர்ப்பதாகும். இது, கடந்த ஏப்ரல் 4 முதல் மே 4 … Read more

இலங்கை அதிபர் பதவியில் இருந்து விலக கோத்தபய மறுப்பு: பதவி நீக்கம் செய்ய எதிர்க்கட்சிகளால் முடியுமா?

கொழும்பு: இலங்கையில் புதிய பிரதமரை நியமிக்கவுள்ளதாக அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ள நிலையில் இதனை எதிர்க்கட்சிகள் கூட்டாக நிராகரித்துள்ளன. அதிபர் பதவி விலக வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர். ஆனால் கோத்தபய பதவி விலக மறுத்து வரும் நிலையிலல் அவரை பதவி நீக்கம் செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இலங்கை அர அரசியலில் அங்கம் ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலகக்கோரி கொழும்பில் நாடாளுமன்றம் செல்லும் சாலையில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் போராடி வருகின்றனர். இரண்டு தினங்களுக்கு … Read more

ராஜபக்சே சகோதரர்களுக்கு இந்தியாவின் எந்த மூலையிலும் அடைக்கலம் அளிக்கக் கூடாது:  சீமான் 

சென்னை: ராஜபக்சே சகோதரர்கள் இந்தியாவிற்கு அடைக்கலம் தேடி வரப்போவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன, இரண்டு லட்சம் தமிழர்களைத் துள்ள துடிக்கப் படுகொலை செய்த அக்கொடுங்கோலர்களுக்கு மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு எக்காரணம் கொண்டும் இந்தியாவின் எந்த மூலையிலும் அரசியல் அடைக்கலம் அளிக்க முன்வரக்கூடாது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் புரட்சி வெடித்துள்ளதை அடுத்து இனப்படுகொலையாளார்களான … Read more

முதல் முறையாக இந்திய தலைமை நீதிபதியை சந்தித்த நாடாளுமன்ற சட்டத்துறை நிலைக்குழு

சென்னை: முதல் முறையாக பொதுமக்கள் குறைகள், சட்டம், நீதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் இந்திய தலைமை நீதிபதியைச் சந்தித்து பேசியுள்ளனர். இந்திய நாடாளுமன்றத்தில் துறை சார்ந்த பல நிலைக் குழுக்கள் உள்ளது. சம்பந்தப்பட்ட துறைகளின் திட்டங்கள் ஆய்வு செய்யும் பணியை இந்த குழுவினர் மேற்கொள்வார்கள். இந்நிலையில் இந்திய வரலாற்றில் முதல் முறையாக பொதுமக்கள் குறைகள், சட்டம், நீதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் இந்திய தலைமை நீதிபதியை சந்தித்து பேசியுள்ளனர். இந்திய வரலாற்றில் முதல்முறையாக பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள், … Read more