உ.பி.யில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் திட்டம் – ஆக்ராவில் 80% அமல்படுத்தி தமிழரான உதவி ஆட்சியர் சாதனை

புதுடெல்லி: உத்தர பிரதேச அரசுப் பள்ளிகளில் சுமார் 25 சதவிகித அளவிலான குழந்தைகளே அன்றாடம் வருகை தருகின்றனர். இதற்கு அதன் ஆசிரியர்கள், அடிப்படை வசதி, கரோனா பரவல் உள்ளிட்டப் பலவும் காரணமாயின. இதை உணர்ந்த பாஜக ஆளும் ஆட்சியின் முதல்வர் யோகி, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் திட்டத்தை அறிவித்தார். ‘ஸ்கூல் சலோ அபியான்’ எனும் பெயரிலான இத்திட்டம், சுமார் 5 வயதுள்ள குழந்தைகளை முதல் வகுப்பில் சேர்ப்பதாகும். இது, கடந்த ஏப்ரல் 4 முதல் மே 4 … Read more

இலங்கை அதிபர் பதவியில் இருந்து விலக கோத்தபய மறுப்பு: பதவி நீக்கம் செய்ய எதிர்க்கட்சிகளால் முடியுமா?

கொழும்பு: இலங்கையில் புதிய பிரதமரை நியமிக்கவுள்ளதாக அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ள நிலையில் இதனை எதிர்க்கட்சிகள் கூட்டாக நிராகரித்துள்ளன. அதிபர் பதவி விலக வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர். ஆனால் கோத்தபய பதவி விலக மறுத்து வரும் நிலையிலல் அவரை பதவி நீக்கம் செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இலங்கை அர அரசியலில் அங்கம் ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலகக்கோரி கொழும்பில் நாடாளுமன்றம் செல்லும் சாலையில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் போராடி வருகின்றனர். இரண்டு தினங்களுக்கு … Read more

ராஜபக்சே சகோதரர்களுக்கு இந்தியாவின் எந்த மூலையிலும் அடைக்கலம் அளிக்கக் கூடாது:  சீமான் 

சென்னை: ராஜபக்சே சகோதரர்கள் இந்தியாவிற்கு அடைக்கலம் தேடி வரப்போவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன, இரண்டு லட்சம் தமிழர்களைத் துள்ள துடிக்கப் படுகொலை செய்த அக்கொடுங்கோலர்களுக்கு மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு எக்காரணம் கொண்டும் இந்தியாவின் எந்த மூலையிலும் அரசியல் அடைக்கலம் அளிக்க முன்வரக்கூடாது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் புரட்சி வெடித்துள்ளதை அடுத்து இனப்படுகொலையாளார்களான … Read more

முதல் முறையாக இந்திய தலைமை நீதிபதியை சந்தித்த நாடாளுமன்ற சட்டத்துறை நிலைக்குழு

சென்னை: முதல் முறையாக பொதுமக்கள் குறைகள், சட்டம், நீதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் இந்திய தலைமை நீதிபதியைச் சந்தித்து பேசியுள்ளனர். இந்திய நாடாளுமன்றத்தில் துறை சார்ந்த பல நிலைக் குழுக்கள் உள்ளது. சம்பந்தப்பட்ட துறைகளின் திட்டங்கள் ஆய்வு செய்யும் பணியை இந்த குழுவினர் மேற்கொள்வார்கள். இந்நிலையில் இந்திய வரலாற்றில் முதல் முறையாக பொதுமக்கள் குறைகள், சட்டம், நீதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் இந்திய தலைமை நீதிபதியை சந்தித்து பேசியுள்ளனர். இந்திய வரலாற்றில் முதல்முறையாக பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள், … Read more

இந்தியாவில் குறையும் கரோனா தொற்று: இன்று 2,827 பேருக்கு பாதிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,827 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் பதிவான கரோனா தொற்று விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,827 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 2,897 பேருக்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று பாதிப்பு சற்று குறைந்தது. இதனால் ஒட்டுமொத்த பாதிப்பு 4,31,13,413 என்றளவில் உள்ளது. … Read more

பேரறிவாளன் விடுதலை: தீர்ப்பை தள்ளிவைத்தது உச்ச நீதிமன்றம் – ஆளுநர் அரசியல் சாசன பிழை செய்ததாக தமிழக அரசு குற்றச்சாட்டு

புதுடெல்லி: பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநர் மிகப்பெரிய அரசியல் சாசன பிழையை செய்துவிட்டார் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கடுமையாக குற்றம் சாட்டியது. இந்த வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு … Read more

பாகிஸ்தானில் எம்பிபிஎஸ் ‘சீட்’ விற்று தீவிரவாதத்துக்கு நிதியுதவி செய்த 8 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு

ஸ்ரீநகர்: பாகிஸ்தான் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ் இடங்களை காஷ்மீர் மாணவர்களுக்கு விற்று, அந்தப் பணத்தை தீவிரவாதத்துக்கு பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் 8 பேர் மீது என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. காஷ்மீரில் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு பாகிஸ்தான் மருத்துவக் கல்லூரிகளில் 200 எம்பிபிஎஸ் இடங்களை அந்நாடு ஒதுக்கியுள்ளது. இதற்கான மாணவர்களை தேர்வு செய்யும் பொறுப்பு ஹுரியத் மாநாடு அமைப்பிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த எம்பிபிஎஸ் இடங்களை பணக்கார மாணவர்களுக்கு விற்று அந்தப் … Read more

பொறியியல் படிப்புக்கு மீண்டும் நேரடி கலந்தாய்வு: மே 17-ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளதாக அமைச்சர் பொன்முடி தகவல்

சென்னை: பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு மீண்டும் நேரடி கலந்தாய்வை நடத்துவது குறித்து வரும் 17-ம் தேதி ஆலோசிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார். பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்வு முடிவுகள் ஜுன் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது. இந்நிலையில், பொறியியல் மாணவர் சேர்க்கை முன்னேற்பாடுகள் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பொறியியல் படிப்புக்கான … Read more

கியான்வாபி மசூதி விவகாரம் விஸ்வ இந்து பரிஷத் முடிவு

புதுடெல்லி: உத்தர பிரதேசம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி கியான்வாபி மசூதி உள்ளது. விஸ்வநாதர் கோயிலை இடித்து இந்த மசூதியை முகலாய மன்னர் அவுரங்கசீப் கட்டியதாக கூறப்படுகிறது. மசூதி வளாகத்தின் வெளிப்பற சுவரில் சிங்கார கவுரி அம்மன் சிலை உள்ளது. அம்மனை தினமும் தரிசிக்க அனுமதிக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பரபரப்பாகி உள்ள நிலையில், இதுகுறித்து விஸ்வ இந்து பரிஷத்தின் செயல் தலைவர் அலோக் குமார் டெல்லியில் கூறியதாவது: ராம ஜென்ம … Read more

கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்க நடவடிக்கை வேண்டும் – வளர்ந்த நாடுகளிடம் இந்தியா வலியுறுத்தல்

புதுடெல்லி: மேற்கு ஆப்ரிக்காவின் ஐவரி கோஸ்ட் நாட்டின் அபித்ஜான் நகரில், ஐ.நா. சார்பில் பாலைவனமயமாதலை தடுப்பது தொடர்பான கருத்தரங்கின் 15-வது அமர்வு (காப் 15) கடந்த 9-ம் தேதி தொடங்கியது. வரும் 20-ம் தேதி வரை நடைபெறும் இதில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் நேற்று முன்தினம் பேசியதாவது: இந்தியாவில் சீர்கேடு அடைந்துள்ள 2.6 கோடி ஹெக்டேர் நிலங்களை வரும் 2030-ம் ஆண்டுக்குள் சீரமைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. குறிப்பாக, மண் … Read more