பாகிஸ்தானில் எம்பிபிஎஸ் ‘சீட்’ விற்று தீவிரவாதத்துக்கு நிதியுதவி செய்த 8 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு

ஸ்ரீநகர்: பாகிஸ்தான் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ் இடங்களை காஷ்மீர் மாணவர்களுக்கு விற்று, அந்தப் பணத்தை தீவிரவாதத்துக்கு பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் 8 பேர் மீது என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. காஷ்மீரில் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு பாகிஸ்தான் மருத்துவக் கல்லூரிகளில் 200 எம்பிபிஎஸ் இடங்களை அந்நாடு ஒதுக்கியுள்ளது. இதற்கான மாணவர்களை தேர்வு செய்யும் பொறுப்பு ஹுரியத் மாநாடு அமைப்பிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த எம்பிபிஎஸ் இடங்களை பணக்கார மாணவர்களுக்கு விற்று அந்தப் … Read more

பொறியியல் படிப்புக்கு மீண்டும் நேரடி கலந்தாய்வு: மே 17-ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளதாக அமைச்சர் பொன்முடி தகவல்

சென்னை: பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு மீண்டும் நேரடி கலந்தாய்வை நடத்துவது குறித்து வரும் 17-ம் தேதி ஆலோசிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார். பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்வு முடிவுகள் ஜுன் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது. இந்நிலையில், பொறியியல் மாணவர் சேர்க்கை முன்னேற்பாடுகள் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பொறியியல் படிப்புக்கான … Read more

கியான்வாபி மசூதி விவகாரம் விஸ்வ இந்து பரிஷத் முடிவு

புதுடெல்லி: உத்தர பிரதேசம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி கியான்வாபி மசூதி உள்ளது. விஸ்வநாதர் கோயிலை இடித்து இந்த மசூதியை முகலாய மன்னர் அவுரங்கசீப் கட்டியதாக கூறப்படுகிறது. மசூதி வளாகத்தின் வெளிப்பற சுவரில் சிங்கார கவுரி அம்மன் சிலை உள்ளது. அம்மனை தினமும் தரிசிக்க அனுமதிக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பரபரப்பாகி உள்ள நிலையில், இதுகுறித்து விஸ்வ இந்து பரிஷத்தின் செயல் தலைவர் அலோக் குமார் டெல்லியில் கூறியதாவது: ராம ஜென்ம … Read more

கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்க நடவடிக்கை வேண்டும் – வளர்ந்த நாடுகளிடம் இந்தியா வலியுறுத்தல்

புதுடெல்லி: மேற்கு ஆப்ரிக்காவின் ஐவரி கோஸ்ட் நாட்டின் அபித்ஜான் நகரில், ஐ.நா. சார்பில் பாலைவனமயமாதலை தடுப்பது தொடர்பான கருத்தரங்கின் 15-வது அமர்வு (காப் 15) கடந்த 9-ம் தேதி தொடங்கியது. வரும் 20-ம் தேதி வரை நடைபெறும் இதில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் நேற்று முன்தினம் பேசியதாவது: இந்தியாவில் சீர்கேடு அடைந்துள்ள 2.6 கோடி ஹெக்டேர் நிலங்களை வரும் 2030-ம் ஆண்டுக்குள் சீரமைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. குறிப்பாக, மண் … Read more

பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நீடித்தால் பாஜக போராட்டம் நடத்தும் – தமிழக அரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் பெண்கள் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லை. பெண்கள், குழந்தைகளுக்கும், சட்டம் ஒழுங்குக்கும் அச்சுறுத்தல் தொடருமானால் பாஜக, மக்களை ஒன்றுதிரட்டும், வீதிக்கு வந்து போராடும் என்று தமிழக அரசுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார். குற்றங்கள் அதிகரிப்பு இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லை. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இல்லாமல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகிக் கொண்டே போவது மிகுந்த கவலை அளிக்கிறது. இதுபற்றி சிறிதும் … Read more

புதிய வளாகத்தை பிரதமர் திறந்தபின் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு

வாரணாசி: காசி விஸ்வநாதர் கோயிலின் புதிய வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தபிறகு கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசி எனப்படும் காசியில் உள்ள விஸ்வநாதர் கோயில் புகழ்பெற்றது. கோயிலுக்கு செல்லும் சாலைகள் மிகவும் குறுகலாகவும் மேலும், ஆலய வளாகம் ஆக்கிரமிப்புகள் காரணமாக சிறிதாகவும் இருந்ததால் மக்கள் நெருக்கடி அதிகமாகி பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்வதில் சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில், கோயிலுக்கு செல்வதற்கும் பக்தர்கள் … Read more

என் இதயம் நொறுங்கிவிட்டது: இலங்கை பாடகி வேதனை

மும்பை: ‘‘இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலையை கண்டு என் இதயம் நொறுங்கிவிட்டது. தாய் நாட்டு நலுனுக்காக நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன்’’ என மும்பையில் உள்ள இலங்கை பாடகி யோகானி கூறியுள்ளார். இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பெரும் வன்முறை ஏற்பட்டுள்ளது. அங்கு போராட்டங்கள் தொடர்கின்றன. இந்நிலையில், இலங்கைக்கு 10 லட்சம் அமெரிக்க டாலர் நிதி திரட்டி கொடுக்கும் திட்டத்தை அந்நாட்டு பாடகி யோகானி கடந்த மாதம் வெளியிட்டார். இதற்கு நிதியுதவி அளிக்கும்படி, தனது ரசிகர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். … Read more

ஆட்டோக்களுக்கான புதிய கட்டண நிர்ணயம்: அதிகாரிகள் 2 நாள் ஆலோசனை

சென்னை: ஆட்டோக்களுக்கான கட்டண நிர்ணயம் தொடர்பாக, இன்று தொழிற்சங்கங்களுடனும், நாளை நுகர்வோர் அமைப்புகளுடனும் போக்குவரத்து அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர். தமிழகத்தில் ஆட்டோக்களுக்கு அடிப்படை கட்டணமாக ரூ.25-ம், அடுத்தடுத்த கிலோ மீட்டர்களுக்கு தலா ரூ.12-ம் என கடந்த 2013-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பெட்ரோல், டீசல் விலை ரூ.100-ஐ தாண்டியுள்ள நிலையில் ஆட்டோக்களின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இன்று மாலை அசோக் பில்லர் பகுதியில் உள்ள போக்குவரத்து இணை ஆணையர் அலுவலகத்தில் … Read more

லட்சுமணன் கோடு மீறக் கூடாது: சட்ட அமைச்சர் ரிஜிஜு கருத்து

புதுடெல்லி: நீதிமன்றங்களை மதிக்கிறோம். அதேநேரம் லட்சுமண கோட்டை மதிக்க வேண்டும் என மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். தேசத் துரோக சட்டப்பிரிவை (124ஏ) ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டப் பிரிவை மறுபரிசீலனை செய்வதாக மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. எனினும், இந்த சட்டப்பிரிவின் கீழ் மத்திய, மாநில அரசுகள் புதிதாக வழக்கு பதிவு செய்யவும், ஏற்கெனவே நிலுவையில் உள்ள வழக்குகளில் விசாரணையை தொடரவும், நடவடிக்கை எடுக்கவும் … Read more

பெருமிதம் உடைந்தது: வடகொரியாவில் முதல் கரோனா தொற்று; அவரசநிலை அறிவிப்பு: ஊரடங்கு, கட்டுப்பாடுகள் அமல்

சியோல்: உலகம் முழுவதையும் கரோனா உலுக்கி வந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளில் ஒருவருக்கு கூட பாதிப்பு ஏற்படவில்லை என பெருமையாக கூறி வந்த வடகொரியாவில் முதன் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து நாடுமுழுவதும் அவசர நிலை அறிவிக்கப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தி அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார். கரோனா வைரஸ் தொற்று முதன் முதலாக கடந்த 2019-ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்டது. பெரிய அளவில் பாதிப்பு அதிகரித்தபோது ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளை சீன … Read more