என் இதயம் நொறுங்கிவிட்டது: இலங்கை பாடகி வேதனை

மும்பை: ‘‘இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலையை கண்டு என் இதயம் நொறுங்கிவிட்டது. தாய் நாட்டு நலுனுக்காக நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன்’’ என மும்பையில் உள்ள இலங்கை பாடகி யோகானி கூறியுள்ளார். இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பெரும் வன்முறை ஏற்பட்டுள்ளது. அங்கு போராட்டங்கள் தொடர்கின்றன. இந்நிலையில், இலங்கைக்கு 10 லட்சம் அமெரிக்க டாலர் நிதி திரட்டி கொடுக்கும் திட்டத்தை அந்நாட்டு பாடகி யோகானி கடந்த மாதம் வெளியிட்டார். இதற்கு நிதியுதவி அளிக்கும்படி, தனது ரசிகர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். … Read more

ஆட்டோக்களுக்கான புதிய கட்டண நிர்ணயம்: அதிகாரிகள் 2 நாள் ஆலோசனை

சென்னை: ஆட்டோக்களுக்கான கட்டண நிர்ணயம் தொடர்பாக, இன்று தொழிற்சங்கங்களுடனும், நாளை நுகர்வோர் அமைப்புகளுடனும் போக்குவரத்து அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர். தமிழகத்தில் ஆட்டோக்களுக்கு அடிப்படை கட்டணமாக ரூ.25-ம், அடுத்தடுத்த கிலோ மீட்டர்களுக்கு தலா ரூ.12-ம் என கடந்த 2013-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பெட்ரோல், டீசல் விலை ரூ.100-ஐ தாண்டியுள்ள நிலையில் ஆட்டோக்களின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இன்று மாலை அசோக் பில்லர் பகுதியில் உள்ள போக்குவரத்து இணை ஆணையர் அலுவலகத்தில் … Read more

லட்சுமணன் கோடு மீறக் கூடாது: சட்ட அமைச்சர் ரிஜிஜு கருத்து

புதுடெல்லி: நீதிமன்றங்களை மதிக்கிறோம். அதேநேரம் லட்சுமண கோட்டை மதிக்க வேண்டும் என மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். தேசத் துரோக சட்டப்பிரிவை (124ஏ) ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டப் பிரிவை மறுபரிசீலனை செய்வதாக மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. எனினும், இந்த சட்டப்பிரிவின் கீழ் மத்திய, மாநில அரசுகள் புதிதாக வழக்கு பதிவு செய்யவும், ஏற்கெனவே நிலுவையில் உள்ள வழக்குகளில் விசாரணையை தொடரவும், நடவடிக்கை எடுக்கவும் … Read more

பெருமிதம் உடைந்தது: வடகொரியாவில் முதல் கரோனா தொற்று; அவரசநிலை அறிவிப்பு: ஊரடங்கு, கட்டுப்பாடுகள் அமல்

சியோல்: உலகம் முழுவதையும் கரோனா உலுக்கி வந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளில் ஒருவருக்கு கூட பாதிப்பு ஏற்படவில்லை என பெருமையாக கூறி வந்த வடகொரியாவில் முதன் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து நாடுமுழுவதும் அவசர நிலை அறிவிக்கப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தி அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார். கரோனா வைரஸ் தொற்று முதன் முதலாக கடந்த 2019-ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்டது. பெரிய அளவில் பாதிப்பு அதிகரித்தபோது ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளை சீன … Read more

போக்குவரத்து தொழிலாளர் ஊதிய உயர்வு – சென்னையில் இன்று பேச்சுவார்த்தை

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், துறைச் செயலர் கே.கோபால் மற்றும் அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் மேலாண் இயக்குநர்கள், போக்குவரத்துத் துறை உயர் அலுவலர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில், அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள், நிதி நிலையை மேம்படுத்துவது, குரோம்பேட்டையில் இன்று நடைபெற உள்ள போக்குவரத்து கழகப் பணியாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை குறித்து அமைச்சர் ஆலோசனை … Read more

ரயில் பயணச் சீட்டு பெற புதிய முறை அறிமுகம்

சென்னை: தெற்கு ரயில்வேயின் பல ரயில் நிலையங்களில் பயணச் சீட்டுகள், நடைமேடை டிக்கெட்கள், சீசன் டிக்கெட்கள் பெறுவதற்காக தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரங்கள் (ஏடிவிஎம்) நிறுவப்பட்டுள்ளன. ரொக்கமில்லா பரிவர்த்தனைகள் மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், க்யூஆர் குறியீட்டின் அடிப்படையில் டிக்கெட் கட்டணத்தைச் செலுத்தி தானியங்கி இயந்திரங்கள் மூலம் டிக்கெட் பெறும் வசதியை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த க்யூஆர் குறியீடு வசதியைப் பயன்படுத்தி பயணம், நடைமேடை டிக்கெட், சீசன் டிக்கெட் வாங்கலாம். அத்துடன், ஏடிவிஎம்களில் உருவாக்கப்பட்ட … Read more

உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 9 பேர் நிரந்தர நீதிபதிகளாக நியமனம் – உச்ச நீதிமன்ற கொலீஜியம் உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பதவி வகித்து வரும் 9 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து உச்சநீதிமன்ற கொலீஜியம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் மூத்த நீதிபதிகள் யு.யு.லலித், ஏ.எம்.கான்வில்கர் ஆகியோர் அடங்கிய கொலீஜியம், சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பதவி வகித்து வரும் 9 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கும் பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி … Read more

இலங்கை அசாதாரண சூழல்: அகதிகள் போர்வையில் சமூக விரோதிகள் ஊடுருவலாம் – தமிழகத்துக்கு மத்திய உளவுத் துறை எச்சரிக்கை

சென்னை: இலங்கையில் தொடரும் அசம்பாவிதங்களால் அகதிகள் போர்வையில் சமூக விரோதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ வாய்ப்புள்ளதால், கண்காணிப்பை தீவிரப்படுத்தி ஊடுருவலைத் தடுக்க வேண்டும் என்று தமிழகத்துக்கு மத்திய உளவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் கடும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக ஆளும் கட்சியின் அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்களின் வீடுகள் பல குறிவைத்து சூறையாடப்பட்டு வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன. அந்நாட்டின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்‌சவின் வீடும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. தொடரும் வன்முறையால் அந்நாட்டில் … Read more

மறுபரிசீலனை செய்யப்படும் வரை தேசத் துரோக சட்டப்பிரிவை பயன்படுத்த உச்ச நீதிமன்றம் தடை

புதுடெல்லி: தேசத் துரோக சட்டப்பிரிவை (124-ஏ) மத்திய அரசு மறுபரிசீலனை செய்வதால், அந்த சட்டப்பிரிவின் கீழ் மத்திய, மாநில அரசுகள் வழக்குப்பதிவு செய்யவும், விசாரணைகளை தொடரவும் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட தேசத் துரோக சட்டப் பிரிவு செல்லுபடியாகும் என கேதர்நாத் வழக்கில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு கடந்த 1962-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதால், இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி … Read more

பப்ஜி மதன் ஜாமீன் கோரி மனு: காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் கால அவகாசம்

சென்னை: குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதால் ஜாமீன் கோரி பப்ஜி மதன் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதிலளிக்க காவல்துறைக்கு கால அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆபாசமாக பேசிக்கொண்டு பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளில் விளையாடி சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை தவறான வழியில் கொண்டு சென்றதாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், பப்ஜி மதனுக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் பிரிவினர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வழக்குப்பதிவு செய்த நிலையில் அவர் தலைமறைவானார். … Read more