ரயில் பயணச் சீட்டு பெற புதிய முறை அறிமுகம்

சென்னை: தெற்கு ரயில்வேயின் பல ரயில் நிலையங்களில் பயணச் சீட்டுகள், நடைமேடை டிக்கெட்கள், சீசன் டிக்கெட்கள் பெறுவதற்காக தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரங்கள் (ஏடிவிஎம்) நிறுவப்பட்டுள்ளன. ரொக்கமில்லா பரிவர்த்தனைகள் மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், க்யூஆர் குறியீட்டின் அடிப்படையில் டிக்கெட் கட்டணத்தைச் செலுத்தி தானியங்கி இயந்திரங்கள் மூலம் டிக்கெட் பெறும் வசதியை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த க்யூஆர் குறியீடு வசதியைப் பயன்படுத்தி பயணம், நடைமேடை டிக்கெட், சீசன் டிக்கெட் வாங்கலாம். அத்துடன், ஏடிவிஎம்களில் உருவாக்கப்பட்ட … Read more

உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 9 பேர் நிரந்தர நீதிபதிகளாக நியமனம் – உச்ச நீதிமன்ற கொலீஜியம் உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பதவி வகித்து வரும் 9 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து உச்சநீதிமன்ற கொலீஜியம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் மூத்த நீதிபதிகள் யு.யு.லலித், ஏ.எம்.கான்வில்கர் ஆகியோர் அடங்கிய கொலீஜியம், சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பதவி வகித்து வரும் 9 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கும் பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி … Read more

இலங்கை அசாதாரண சூழல்: அகதிகள் போர்வையில் சமூக விரோதிகள் ஊடுருவலாம் – தமிழகத்துக்கு மத்திய உளவுத் துறை எச்சரிக்கை

சென்னை: இலங்கையில் தொடரும் அசம்பாவிதங்களால் அகதிகள் போர்வையில் சமூக விரோதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ வாய்ப்புள்ளதால், கண்காணிப்பை தீவிரப்படுத்தி ஊடுருவலைத் தடுக்க வேண்டும் என்று தமிழகத்துக்கு மத்திய உளவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் கடும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக ஆளும் கட்சியின் அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்களின் வீடுகள் பல குறிவைத்து சூறையாடப்பட்டு வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன. அந்நாட்டின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்‌சவின் வீடும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. தொடரும் வன்முறையால் அந்நாட்டில் … Read more

மறுபரிசீலனை செய்யப்படும் வரை தேசத் துரோக சட்டப்பிரிவை பயன்படுத்த உச்ச நீதிமன்றம் தடை

புதுடெல்லி: தேசத் துரோக சட்டப்பிரிவை (124-ஏ) மத்திய அரசு மறுபரிசீலனை செய்வதால், அந்த சட்டப்பிரிவின் கீழ் மத்திய, மாநில அரசுகள் வழக்குப்பதிவு செய்யவும், விசாரணைகளை தொடரவும் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட தேசத் துரோக சட்டப் பிரிவு செல்லுபடியாகும் என கேதர்நாத் வழக்கில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு கடந்த 1962-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதால், இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி … Read more

பப்ஜி மதன் ஜாமீன் கோரி மனு: காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் கால அவகாசம்

சென்னை: குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதால் ஜாமீன் கோரி பப்ஜி மதன் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதிலளிக்க காவல்துறைக்கு கால அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆபாசமாக பேசிக்கொண்டு பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளில் விளையாடி சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை தவறான வழியில் கொண்டு சென்றதாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், பப்ஜி மதனுக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் பிரிவினர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வழக்குப்பதிவு செய்த நிலையில் அவர் தலைமறைவானார். … Read more

இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பவில்லை – சமூக வலைதளங்களில் வெளியான தகவலுக்கு இந்திய தூதரகம் மறுப்பு

கொழும்பு: இலங்கையில் போராட்டம் வலுத்துள்ள நிலையில் ராஜபக்ச குடும்பத்தினர் இந்தியாவில் தஞ்சமடைந்ததாக வெளியான தகவலை இந்தியா மறுத்துள்ளது. மேலும், இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பி இருப்பதாக வெளியான தகவலையும் இந்திய தூதரகம் மறுத்துள்ளது. இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள், எரிபொருள் ஆகியவற்றின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். பொருளாதார நெருக்கடிக்கு காரணமான ராஜபக்ச குடும்பத்தினர் … Read more

ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்பு அகற்ற வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது: சீமான்

சென்னை: சென்னை ராஜா அண்ணாமலைபுரம், கோவிந்தசாமி நகரில் மக்களின் குடியிருப்புகள் இடிக்கப்பட்டு அகற்றப்படுவதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், வீடுகளை இடிக்கத் தடையில்லை என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பெரும் அதிர்ச்சியளிக்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை ராஜா அண்ணாமலைபுரம், கோவிந்தசாமி நகரில் மக்களின் குடியிருப்புகள் இடிக்கப்பட்டு அகற்றப்படுவதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், வீடுகளை இடிக்கத் தடையில்லை என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ஜனநாயக நாட்டில் … Read more

இலங்கை நெருக்கடி: மீண்டும் ரணில் விக்கிரமசிங்கே? – புதிய பிரதமரை ஒரு வாரத்தில் நியமிக்க அதிபர் உறுதி

கொழும்பு: இலங்கையில் இந்த வாரம் புதிய பிரதமரையும் அமைச்சரவையையும் நியமிக்கவுள்ளதாக அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார். இலங்கை அர அரசியலில் அங்கம் ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலகக்கோரி கொழும்பில் நாடாளுமன்றம் செல்லும் சாலையில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் போராடி வருகின்றனர். இரண்டு தினங்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். போராட்டக்காரர்களின் கூடாரங்களை கிழித்தெறிந்து தாக்குதல் நடத்தினர். இதனால் அவர்கள் மீது போராட்டக்காரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இது பெரும் கலவரமாக மாறியது. மகிந்த … Read more

வர்த்தகத்தில் தமிழகம் முதலிடம் வரவேண்டும் என்பதே என் லட்சியம்: ஸ்டாலின் பேச்சு

சென்னை: இந்தியாவின் சர்வதேச வர்த்தகத்தில் 3வது இடமிருக்கும் தமிழகம் முதலாவது இடத்திற்கு வரவேண்டுமென்பதே என் லட்சியம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற தென் பிராந்திய ஏற்றுமதியாளர் விருது விழாவில் கலந்துகொண்டு ஆற்றிய உரை: ”6-ஆவது மற்றும் 7-ஆவது தென் பிராந்திய சிறந்த ஏற்றுமதியாளர் விருது வழங்கும் விழா, தமிழகத்தின் தலைநகராக இருக்கக்கூடிய சென்னையில் நடப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தமிழகம் வந்திருக்கக்கூடிய … Read more

பொறியியல் கலந்தாய்வு எப்போது? -அமைச்சர் பொன்முடி பதில்

சென்னை: நீட் தேர்வு முடிந்து அதன் முடிவுகள் வெளிவந்த பின்னர், பொறியியல் கலந்தாய்வை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக வரும் மே 17-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படவுள்ளதாகவும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “பொதுவாக நீட் தேர்வு முடிந்த பின்னர் பொறியியல் கலந்தாய்வு வைத்தால்தான் சரியாக இருக்கும். பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கின்ற பெரும்பாலவனவர்கள் நீட் தேர்வையும் … Read more