'அமித் ஷா வந்துசென்ற பிறகுதான் புதுச்சேரியில் இந்தி திணிப்பு நடக்கிறது' – நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்து, காங்கிரஸ் கட்சி சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் புதன்கிழமை மாலை ஜிப்மர் எதிரில் நடைபெற்றது. புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஏ.வி. சுப்ரமணியன் தலைமை தாங்கிய போராட்டத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்பி, வைத்தியநாதன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ அனந்தராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் நாராயணசாமி கூறியதாவது: ‘‘ஜிப்மரில் இனி வரும் காலங்களில் இந்தி தான் பிரதான மொழியாக வரப்போகிறது. அதற்காகத் தான் … Read more

பொற்கொடியம்மன் ஏரித்திருவிழா: 2 ஆண்டுகளுக்கு பிறகு திரண்ட பக்தர்கள்

வேலூர்: வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பொற்கொடியம்மன் புஷ்பரத ஏரித்திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். புஷ்ப ரத ஏரித்திருவிழா: வேலூர் மாவட்டம் அணைக்கட்டுப் பகுதியில் உள்ள வல்லாண்டராமம், அன்னாசிபாளையம், வேலங்காடு மற்றும் பனங்காடு உள்ளிட்ட 4 கிராம மக்கள் சேர்ந்து நடத்தும் பொற்கொடியம்மன் புஷ்பரத ஏரித்திருவிழா கடந்த 10-ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் அம்மன், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், சந்தனகாப்பு மற்றும் தீபாரதனை நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் … Read more

பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளை நிர்வகிக்க சிறப்பு தனி அலுவலரை நியமிக்க வேண்டும்: விஜயகாந்த்

சென்னை: பச்சையப்பன் அறக்கட்டளை என்னும் தமிழகத்தின் மிகப்பெரிய கல்வி நிறுவனத்தின் சீரழிவை தடுக்க அரசு தலையிட்டு அறங்காவலர் குழுவின் தேர்தல் நடத்தப்படும் வரையில் சிறப்பு தனி அலுவலர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகள் மோசமான நிர்வாகம் காரணமாக தொடர்ந்து சீரழிவை சந்தித்து வருகின்றன. அறக்கட்டளைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அறங்காவலர் குழுவின் பணிக் காலம் கடந்த 2018ம் ஆண்டு நிறைவு … Read more

தேசத் துரோக சட்டப்பிரிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: தேசத் துரோக சட்டத்தின் 124ஏ பிரிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆங்கிலேயர்கள் ஆட்சியில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஒடுக்க பிரிட்டிஷ் அரசால், தேசத்துரோக சட்டம் கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக எடிட்டர்ஸ் கில்டு எனப்படும் பத்திரிகை ஆசிரியர் சங்கம் உள்ளிட்டோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட … Read more

சாதரண கட்டணப் பேருந்துகளில் பயணிக்கும் மகளிரின் பங்கு 62 சதவீதமாக உயர்வு: போக்குவரத்துத்துறை

சென்னை: தமிழக அரசுப் பேருந்துகளில், கட்டணமின்றி பயணிக்கும் மகளிரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதாகவும், சாதாரண கட்டணப் பேருந்து பயணிகளில் மகளிரின் பங்கு 40 சதவீதத்தில் இருந்து 62 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும், 2022 மே 10-ம் தேதி வரை 110.37 கோடி மகளிர் பயணம் செய்துள்ளதாகவும் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் அறிவுரையின் பேரில், அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் இன்று (மே 11), … Read more

தாஜ்மகால் அமைந்துள்ள நிலம் எங்கள் குடும்பத்திற்கு சொந்தமானது – பாஜக எம்பி தியா குமாரி

ஜெய்ப்பூர்: புராதன சின்னமான தாஜ்மகால் நிறுவப்பட்டுள்ள நிலம் தங்கள் குடும்பத்திற்கு சொந்தமானது என தெரிவித்துள்ளார் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தியா குமாரி (Diya Kumari). இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆக்ரா நகரின் யமுனை ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ளது தாஜ்மகால். வெளிநாட்டினர், உள்நாட்டு மக்கள் என தினமும் பல ஆயிரம் பேர் வந்து பார்வையிட்டு செல்லும் இடம். உலகின் முக்கியமான இடங்களில் ஒன்று. முகலாய மன்னர் ஷாஜகான், அவரது மனைவி மும்தாஜின் நினைவாக கட்டிய மகால் இது. … Read more

உசிலம்பட்டியில் இயற்கை விவசாயம் செய்யும் சென்னை மணப்பெண் ஒப்பனைக் கலைஞர்  

மதுரை: சென்னையில் மணப்பெண் ஒப்பனைக்கலைஞரான சிந்துஜா, இயற்கை விவசாயம் மீதான ஈடுபாட்டால் சொந்த ஊரான உசிலம்பட்டியில் இயற்கைமுறையில் விவசாயம் செய்து விளைபொருட்களை விற்பனை செய்து வருகிறார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த சுப்புராஜ் – சுகுணா ராஜம் ஆகியோரின் மகள் சிந்துஜா (39). பி.எஸ்.சி., பி.எட்., படித்துள்ளார், மணப்பெண் ஒப்பனைக் கலைஞராகவும் உள்ளார். இவர் சென்னை சாலிக்கிராமத்தில் மணப்பெண் ஒப்பனை அலங்கார மையம் நடத்தி வருகிறார். இவரது கணவர் பிரகாஷ் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்துக்கொண்டே சொந்தஊரான … Read more

'எப்போது மக்கள் நிம்மதியாக வாழ முடியும்?' – மாநகராட்சி அதிகாரிகளிடம் கேள்விகளை அடுக்கிய பொது கணக்குக் குழு

சென்னை: ஆக்கிரமிப்பு அகற்றம், விதிமீறல் கட்டிடம் குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் கேள்விகளை அடுக்கிய சட்டமன்ற பொது கணக்குக் குழு (Public Accounts Committee), அம்மா உணவகம் குறித்து 1 மாதத்தில் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையின் பொது கணக்குக் குழுவினர் இன்று காலை பெருங்குடி குப்பை கிடங்கு, பெருங்குடி சமுதாய நலக் கூடம், சென்னை நதிகள் சீரமைப்ப அறக்கட்டளை தொடர்பான பணிகள் ஆகிவற்றை நேரில் ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து ரிப்பன் மாளிகை வளாகத்தில் … Read more

களிமேடு சம்பவம் எதிரொலி; தேர்பவனிக்கு மின்வாரிய அனுமதி அவசியம்: உயர் நீதிமன்றம் உத்தரவு 

மதுரை: திருச்சி திருவெறும்பூர் நத்தமாடிப்பட்டியைச் சேர்ந்த சவரிநாதன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ” திருவெறும்பூர் நத்தமாடிப்பட்டி கிராமத்தில் உள்ள புனித சவேரியார் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் திருவிழா நடைபெறும். விழாவில் முக்கியமான தேர்பவனி. 150-வது ஆண்டு திருவிழாவை ஒட்டி புதிய ஆலய திறப்பு மற்றும் தேர் திருவிழா நடத்த அனுமதி கோரி திருவெறும்பூர் காவல் ஆய்வாளரிடம் மனு அளித்தோம். மே 2-ல் ஆலத் … Read more

நம்பர் பிளேட்களில் 'G'அல்லது 'அ' என்ற எழுத்துக்களைப் பயன்படுத்தினால் நடவடிக்கை: போக்குவரத்து ஆணையர்  

சென்னை: தமிழக அரசு வாகனங்களை தவிர மற்ற வாகனங்களின் நம்பர் பிளேட்களில் ‘G’ அல்லது ‘அ’ என்ற எழுத்துக்களை பயன்படுத்துவோர் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரசு வாகனம் அல்லாத வாகனங்களில் தற்பொழுது தமிழகமெங்கும் பதிவெண் பலகையில் (Number Plate) ‘G’ அல்லது ‘அ’ என்ற எழத்துக்கள் எழுதப்பட்டோ அல்லது ஸ்டிக்கர் ஒட்டப்பட்டோ மோட்டார் வாகன சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்தப்படுவதாக … Read more